அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஆனையூர் பெயர் வரக்காரணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், பொட்டுலுப்பட்டிக்கு வடக்கே இருக்கும் ஆனையூர், என்ற பெயர் வரக்காரணம். இங்கு மிகப் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்து சிவன் கோவில் இருந்து வருகிறது. இந்தச் சிவலிங்கம் சுயம்புலிங்கமாக இருக்கிறார். இந்த சிவனை, ராசராச சோழமன்னரின் முன்னோர்கள் வந்து வணங்கியும் இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் இந்த ஊரின் பெயர் திருக்குறள் முல்லூர், அப்போது இங்கு இருந்து வரும் சிவனுடைய பெயர் அக்கினி ஈஸ்வரர் என்றும் திருக்குறமுல்லூர் தேவர், என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்தக் கோவில் வரலாறு திருவிளையாடல் புராணத்தில் இரண்டாவது பாடலாகவும் இருக்கிறது.


துர்வாச முனிவர், சிவ பூசை செய்து இந்தப் பூசையினால் கிடைத்த தாமரை மலரை; தேவலோகத்தில் ஐராவத்தின் (யானை) மேல் அமர்ந்து தேவர்கள் படைசூழ பெரும் ஆரவாரத்துடன் வரும் தேவேந்திரனிடம் துர்வாச முனிவர் தாமரை மலரை கொடுத்தார். அந்த மலரை இந்திரன் மிக சாதாரணமாக வாங்கி அவருடைய வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைத்து விட்டார். அந்த மலரை யானை தன் துதிக்கையால் கீழே தள்ளி விட்டு தனது காலால் மிதித்து விட்டது. இதைப் பார்த்த முனிவர் கோபம் அடைந்து ஐராவதம் இன்றிலிருந்து நான்கு கொம்புகளுடன் காட்டு யானையாகக் கடவது என்று சாபம் கொடுத்து விட்டார். உடனே ஐராவதம் முனிவரை வணங்கி எனக்கு சாப விமோசனம் எப்போது என்று கேட்க, முனிவர் மனம் உருகி நீ நூறு ஆண்டுகள் காட்டுக்குள் அனாதியாக திரிந்து உன் சுய உருவம் பெறுவாய் என்று கூறிவிட்டார்.


இது நூறு ஆண்டுகள் முடிந்து,திருக்குறள் முல்லூரில் வந்து அக்கினி ஈஸ்வரர் என்ற சிவனை, தாமரைக்குளத்து நீர் கொண்டு தினசரி பூசை நடத்தி வழிபட்டு வந்தது. இந்தப் பூசையை மெச்சி, ஈஸ்வரர் காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று யானையிடம் கேட்கிறார். இதற்கு யானை என்னை உங்கள் ரதத்தில் இருக்கும் எட்டு யானைகளோடு ஒன்பதாவது யானையாக சேர்க்க வேண்டுகிறேன் என்று கேட்டது . இதைக் கேட்ட சிவபெருமான் இந்திரன் எனக்கு மிக வேண்டியவன். அதனால் நீ அவனிடமே ஐராவதமாக சென்று சேர்ந்து கொள்வாய் என்று வரம் தந்தார். யானையாக இருந்து வரம் பெற்ற ஐராவதம் உருவம் பெற்று இந்தினிடம் போய் சேரந்தது. யானையாக இருந்து சிவனை வணங்கியதால் ஆனையூர் என்று ஊர் பெயரும் வரத்தால் ஐராவதம் உருவம் பெற்றதால் ஐராவத ஈஸ்வரர் என்ற பெயர் சிவனுக்கு இப்போது,


இந்த ஐராவத ஈஸ்வரர் ஆலயம் மேற்கு பார்த்து இருக்கிறது. கோவிலுக்குள், அன்னை மீனாட்சி தெற்கு பார்த்து இருக்கிறாள். ஆஞ்சநேயர் தாய் ஆஞ்சனாதேவி வடக்குப் பார்த்து இருக்கிறார். மேலும் பல முக்கிய சாமிகள் இருக்கின்றன. இந்த ஐராவர் கோவிலை ராசராச சோழன், இவர்மகன் ராசேந்திர சோழன். இவர்களுக்குப் பிறகு சோழ மன்னர்கள் வாரிசுகளான பாதுகாத்து தங்கி வணங்கி வந்த முதல் கோவில் தென் தமிழ்நாட்டில் இந்து ஆனையூர் தான். இவர்கள் இங்கு கோட்டை கட்டி வாழ்ந்து வந்ததால் கோட்டையூர் என்றும் சொல்வதும் உண்டு. இந்த ஆணையூர் தான் மதுரையின் முதல் தாலுகா 1754ம் ஆண்டு வரை.

ஆர்.கே. கண்ணனின் ஆய்வு நூலில் இருந்து

தென்னாடு

சேதுபதி மறைந்த பின் சேதுபதி மருமகன் இராசசூரியத்தேவன் சேதுபதியானார்.



இவருக்குப் பின்னால் இவர்களுக்கு வாரிசுகள் இல்லாமல் போகவே இவருடைய மோக மனைவியின் மகன், ரெகுநாத தேவனை மறவர்குள மக்கள் கி.பி.1674ம் ஆண்டு பட்டம் சூட்டி வைத்தார்கள். கிழவன் சேதுபதி என்ற பெயரில், இவர் சேதுநாட்டை ஆண்டு பெரும் பேரும் புகழோடு 39 ஆண்டுகள் ஆட்சி ஆண்டு சேது நாட்டின் பெயரை உயர்த்திய வீரமன்னனாகும். இந்தக் கிழவன் சேதுபதியின் படைகளைக் கண்டு மதுரை , தஞ்சை அரசர்கள் அஞ்சினர். கிழவன் சேதுபதி மதுரைக்கு செலுத்த வேண்டிய கப்பப் பணத்தையும் கட்ட முடியாது என நிறுத்தி விட்டார். தனது நாட்டில் சாதிப் பற்றையும்.உறவினர்கள் கூட்டமும் உடைய, அகமுடையர் இனம் சேது நாட்டில் நிறைந்தது இருந்தனர். கிழவன் சேதுபதியின் ஆத்தா அகமுடையர். அந்தக் காலத்தில் சேதுபதி அந்தக் காலத்திலேயே முக்குல மக்களின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருந்தார் என தெரிகிறது. கி.பி.1700க்குப் பின் தஞ்சையும் மதுரையும் உறவினர்களாக இருந்தன. அந்த நேரம் கி.பி.1702ல் தஞ்சை படைகளின் உதவியோடு தளவாய் நரசப் பையன், சேது நாட்டின் மீது போர் தொடுத்தான். ஆனால் நரசப்பையன் போரில் மாண்டான். கிழவன் சேதுபதி மதுரை படைகளை ஊரைவிட்டே விரட்டி விட்டு, தன் ஆட்சியை தனியாட்சியாக்கிக் கொண்டார். அத்துடன் 1709ல் தன் மீது படை எடுத்து வந்த தஞ்சை அரசன் ஏக்கோசியை வென்று அறந்தாங்கியை கைப்பற்றினான்.


கி.பி. 1662ல் மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரை ரஷ்டம்கான் என்பவன், அரசனைக் கோட்டைக்கள்ளேயே கைதியாக்கி வைத்துக் கொண்டு, மதுரையை தன்வசமாக்கிக் கொண்டான். சிறைப்பட்டு இருந்த சொக்கநாத நாகக்கன் கண்ணீர் விட்டு கதிகலங்கி தன்னைக் காப்பாற்றும்படி தூதுவன்ன மூலம் கிழவன் சேதுபதிக்கு தெரியப்படுத்தினான். இதைக் கேட்ட சேதுபதி கடுங்கோபத்தோடு, தன் படைகளுடன் விரைந்து மதுரை நோக்கி வந்து மதுரையைச் சுற்றி வளைத்துக்கொண்டார். இவர்களின் படைகளின் முற்றுகையைக் கண்ட சொக்கநாதன் மதுரை மன்னரையும், இவருடைய மனைவி குழந்தைகளையும் கொன்று விட எண்ணினான். இந்த விஷயம் செதுபதிக்குத் தெரிந்து விட்டது. உடனே அன்று இரவு படைத்தலைவர்கள் அனைவரையும் ரகசியமான இடத்தில் கூட்டி வைத்து, உருக்கமாக என் வீராதி வீரர்களே தளபதிகளே, தன் உயிரை திரணமாக மதிக்கும் மறவர் பெரும் மக்களை மதுரை மன்னன் சிறையில் இருக்கும் போது, ராசத்துரோகி ரஷ்டம்கான் உயிருடன் இருப்பதா,? உங்களின் வீரத்தை நீங்கள் தாங்கி இருக்கும் வாள் முனையில் எதிரிகளின் ரத்தம் சிந்திக்காட்டுங்கள். நாளைக்கு நீங்கள் ரஷ்டம்கான் தலையைத் துண்டாக்கிக் காட்டாவிட்டால் நம்முடைய ஆண்மையும் போர்த் திறமையும் நகைப்புக்கு இடமாகும் என்று பேசியதால் இரவோடு இரவாக வட்ட வடிவமாக கோட்டையை வியூகமாக வளைத்துக் கொண்ட மறவர் படைகள் பூகம்பம் போல பொங்கி எழுந்து கோட்டை மதில்கள் மேல் ஏறி நின்று எதிர்த்து வந்த எதிரிகளை கண்டதுண்டமாக வெட்டடித்தள்ளினர். கோட்டைக்குள் மறவர் படைகள் இறங்கி விட்டனர். மிகவும் பாதுகாப்பான கோட்டைக்குள் இடிமுழக்கத்துடன் தாக்குதல் நடந்தது. இதற்குள் இருக்கும் சேனைப் படையுடன் தொடர்பு கொண்டனர். கொஞ்ச நேரம் சண்டையில் ஆயுதங்களின் ஓசைகளுக்கிடையே ரஷ்டம்கான் தலை துள்ளி கீழே விழுந்தது. எங்கும் வெற்றி முரசு எழும்பியது. சிறைபட்டு இருந்த சொக்கநாதநாயக்க மன்னன் இவர் மனைவி பிள்ளைகளோடு விடுதலையானார்கள். தன் படையினர் காட்டிய வீரச்செயலை பாராட்டிய சேதுபதிக்கு மகிழ்ச்சி உண்டாகியது.


கி.பி.1689ல் சொக்கநாத நாயக்கர் மனைவி மங்கம்மாள் தன்னுடைய பேரன் சிறுவனாக இருந்ததால், ஆட்சியை தான் ஏற்று நடத்தி வந்தாள். கிழவன் சேதுபதி தஞ்சை மன்னருடன் சேர்ந்து சதி செய்து மதுரை மேல் படை எடுக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கிழவன் சேதுபதியை தண்டிக்கும் நோக்கத்தோடு கி.பி.1702ல் ராணி மங்கம்மாள் 4500 பேர்கள் அடங்கிய படைகளை ஏவி இராமநாதபுரத்தை பிடிக்கச் செயல்பட்டால் என்ன பயன். மதுரைப் படையை புறங்காட்டி ஓடும்படி நாயக்கர் படைகளைக் காட்டிலும் பெரிதாக இருக்கும் மறவர் படைகள் விரட்டி அடித்தனர். இரு தரப்பிலும் அதிகமான வீரர்கள் இறந்தும் விட்டார்கள். பிரிடோ பாதிரியார் என்பவர், கிழவன் சேதுபதிக்குப் பின் பட்டத்திற்கு வரவேண்டிய தேவர். அவரை கிறிஸ்துவ மதத்தில் சேரும்படி செய்து விட்டார். இதனால் நாட்டில் நடந்த சில வேலைகளைக் கொண்டு பெரும் கலவரம் உருவானது. உள்நாட்டில் அதனால் கி.பி.8.1.1693ல் பிரிட்டோ பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு விரோதமாக செயல்பட்டார் என்று பலாத்காரச் செயலில் ஈடுபட்டார் என்று இரண்டு குற்றங்களுக்கும் பிரிட்டோ பாதிரியார்க்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது.


கி.பி. 1710ல் கிழவன் சேதுபதி மறைந்து விட்டார். அப்போது அவருடைய வயது 80. இவருடைய மனைவியர்கள் 48 பேர்களும் உடன்கட்டை ஏறி தன் கணவருடன் சேர்ந்து மடிந்தார்கள். கிழவன் சேதுபதிக்குப் பின் பட்டத்திற்கு யார் வருவது என்ற போட்டி ஏற்பட்டது. பவானி சங்கரத் தேவருக்கும் விஜய ரகநாதத் தேவருக்கும், அந்த நேரத்தில் பல தொல்லைகள் நாட்டில் நடந்து வந்தன. கடைசியில் பவானிடியே பட்டத்திற்கு வந்தார். கி.பி.1729ல் பவானி சிவகங்கையை கைப்பற்றினார். சிவகங்கை பாளையக்காரர் சசிவர்ணத்தேவர் தஞ்சை மன்னரின் உதவியோடு சேதுச் சீமையை மீட்டனர்

மூக்கறுப்புப் போர்

கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை; மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.


அதே நேரத்தில் தன்னரசு படைகள், கண்ணிவாடி, பிருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் மூக்குப்பரி என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு திருமலை சேதுபதி என்ற பட்டமும் ராணி சொல் காத்தான் என்ற பெயரும் வழங்கினார். இதோடு நிற்காமல் சேதுபதி இனிமேல் நீ எனக்கு கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவும் கொடுத்து இராமநாதபுரத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார். சேதுபதி மறைந்த பின் சேதுபதி மருமகன் இராசசூரியத்தேவன் சேதுபதியானார்.




வேட்பாளர் கார் தீ விபத்து

இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருச்சிஉறையூரில் 57வது வார்டு அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் செல்வி. வனிதாவின் மாருதிகார் தீயினால் எரிந்து விட்டது. வாக்குச் சாவடிக்கு பக்கத்தில் உள்ள அக்ரஹாரம் தெருவில் காரை பார்க்கிங் செய்து விட்டு வாக்குச் சாவடியைப் பார்கச்சென்ற அவரது கார் தீயினால் முற்றிலும் எரிந்து விட்டது தீ ஒரு மாடி உயரத்திற்கு எழுந்தது. காரணம் தெரியவில்லை.

சிவாஜி பாடல்

இருமலர்கள்", முக்கோணக் காதல் கதை.

பத்மினியைக் காதலிக்கும் சிவாஜி, கே.ஆர்.விஜயாவை

மணக்க நேரிடுகிறது. மூவருமே அருமையாக

நடித்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுத,

.சி.திருலோகசந்தர் டைரக்ட் செய்திருந்தார்.


"மன்னிக்க வேண்டுகிறேன்", "கடவுள் தந்த

இருமலர்கள்", "மாதவி பொன் மயிலாள்" முதலான

பாடல்கள் சிறப்பாக அமைந்தன. இசை:

எம்.எஸ்.விஸ்வநாதன்.

மன்னிக்க வேண்டுகிறேன்

கடவுள் தந்த இருமலர்கள

மாதவி பொன் மயிலாள்









கேட்டுப்பாருங்கள்

பாடல்

பட்டுக்கோட்டையாரின் பாடல் தங்க பதுமையில் கலைஞரின் உறவினர் சிதம்பரம் ஜெயராமன் லீலா படியது அதில் மறைந்த மாபெரும் நாட்டிய நடிகையின் வசணமும் கலந்து வரும் இப்பாடலை கேளுங்கள் இதைத் தான் எனது நண்பர் திரு ஞானத்திடம் கேட்டேன் அவரும் தருவதாக என்னை ஏமாற்றி வந்தார். இநத பாடல் தமிழகத்தில் ஒலிபறப்புவதில்லை.

ஆரம்பமாவதுபெண்ணுக்குள்ளே

பாடல்

பார்த்தால் பசிதீரும் கேட்டால் காதில் தேண்வந்து பாயும்
கேட்டுப்பாருங்கள் இப்படிடலை

பார்த்தால் பசிதீரும்

மனிதர்களின் இயல்பு

நாம் ஒரு ஊருக்குச் செல்ல பேரூந்து நிருத்தத்தில் நிற்கிறோம் நாம் செல்லவேண்டிய திசைக்கு எதிர் திசையில் அப்பொழுது பேரூந்துகள் வரிசையா வரும் ஆனால் நாம் செல்லவேண்டி திசைக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் பேரூந்து வராது. சிலர் சில வேலைகளில் விடிந்தால் அந்த செயலை செய்யலாம் என ஆவலாக இருந்தால் சீக்கிரம் விடியாது போல் தோன்றும் அதைப்பற்றி இந்த அம்மணி ஒரு பாடல் பாடுகிறார் பாருங்கள்

'ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழி
திரண்டதோ கங்குல்? தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத் துள்'





- என்று ஆத்திரப் படுகிறாள் ஒருத்தி.

'
இந்தக் கடல் முழக்கம் அடங்காதா? நான் வளர்த்த கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதா? அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா? ஒருவேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா? அதனால்தான் இப்படி முடிவற்ற இரவாக இருக்கிறதா?
சூரியனும் அவனது தேரும் பாதாளத்துக்குள் உருண்டு விழுந்து விட்டனவா?' என்று எரிச்சல் படுகிறாள்.

சைக்கிள் ஓட்டம்

இவரது சைக்கிள் ஓட்டத்தைப் பாருங்கள்