https://www.tagavalaatruppadai.in/copper-plate-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh1
செப்பேட்டின் பெயர் - பழனிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - நத்தம் கோயில்
ஊர் - பழனி
வட்டம் - பழனி
மாவட்டம் - திண்டுக்கல்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் - நாயக்கர் / குமாரலிங்கைய நாயக்கர்
வரலாற்று ஆண்டு - கி.பி.1781
விளக்கம் - குமாரலிங்கைய நாய்ககர் தனது தந்தை ஏறுதாது லிங்கய நாயக்கர் மற்றும் தாயார் தாதாம்மாள் அவர்கள் பெயரில் இரண்டு சத்திரங்கள் கட்டி அதன் நிர்வாகச் செலவுக்காக ஏற்க்கபட்டி கிராமம், காரைக்குண்டு, அம்மாபட்டி ஆகிய ஊர்களைக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் உள்ள நிலங்களின் எல்லைகளின் திசைகள் ஈசானிய, அக்னி, நிருதி, வாயு என்று திக்பாலகர்களின் பெயரில் செல்லப்பட்டுள்ளது. நிலத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் எல்லக் கல்லாகச் சூலக்கல் நடப்பட்டதால், “சூலக்கல் 11க்குள் சேர்ந்த“, “சூலக்கல் 14க்குள் சேர்ந்த“ என்று நிலங்கள் குறிக்கப்படுகின்றன. இச்செப்பேட்டில் உள்ள வாசகம் அப்படியே நத்தம் அருகில் உள்ள சத்திரம் ஊராளிப் பட்டியில் கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க என்று வரும் கல்வெட்டுச் சொற்றொடர்க்கு இச்செப்பேடு நல்ல எடுத்துக்காட்டாகும். இதனில் சொல்லப்படும் சத்திரங்கள் இன்று பழனிக்குப் பாதயாத்திரை மேற்கொள்ளும் வழித்தடத்தில் உள்ளன.
செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிப்புதவிகள் - தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2022







Labels: செப்பேடு
0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு