அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மன்னாதி மன்னர்கள்: புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்

மன்னாதி மன்னர்கள்: புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்: மறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன் தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன...

பழனியில் 18-ம் நூற்றாண்டு செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு


பழனியில், 18-ம் நூற்றாண்டை சேர்ந்த நகல் செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனியில் மடம் அமைத்து பூஜை நடத்துவதற்காக இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 03, 2018 03:30 AM பழனி, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வீட்டில் இருந்த பழங்கால பெட்டியில் ஒரு செப்பு பட்டயம் இருந்துள்ளது. அவருடைய வீட்டில் சுத்தப்படுத்தும் பணி நடந்த போது அந்த பட்டயத்தை சிவக்குமார் பார்த்தார். உடனே அதனை பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான நாராயணமூர்த்தியிடம் அவர் காண்பித்தார். இதையடுத்து அந்த பட்டயத்தை நாராயணமூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:- பழனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு பட்டயம் பண்டைய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 36.4 சென்டி மீட்டர் உயரமும், 20.2 சென்டி மீட்டர் அகலமும், 870 கிராம் எடையும் கொண்டது ஆகும். இதில் மொத்தம் 139 வரிகள் எழுதப்பட்டுள்ளன. சாலிவாகன சகாப்தம் 1,627-ம் ஆண்டு பார்த்திவ ஆண்டு சித்திரை மாதம் 30-ந்தேதி இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்பு பட்டயம் 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. பட்டயத்தில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்த போது, ரகுநாத சேதுபதியின் ஆட்சி காலத்தில் அவருடைய மகன் ரெணசிங்க தேவர் கட்டளைப்படி மருதம்பிள்ளை என்பவர் தாமிரத்தால் எழுதிய மூல பட்டயத்தின் நகல் தான் இந்த செப்பு பட்டயம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நகல் செப்பு பட்டயத்தை சிவகங்கை சீமையின் 2-வது அரசரான முத்துவடுகத்தேவர், அவருடைய மனைவி வேலுநாச்சியார் ஆகியோருக்கு காரியகர்த்தராக இருந்த தாண்டவராய பிள்ளையின் கட்டளைப்படி திருப்பத்தூரை சேர்ந்த பழனிஆசாரி என்பவரின் மகன் முத்தாண்டி என்பவர் எழுதியுள்ளார். மூலப்பட்டயம் எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சார்பில் இந்த பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பழனி மலையில் கந்தபுராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தை சேர்ந்த ஏகாம்பர உடையாரிடம் இந்த பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பழனி பகுதியில் மடம் அமைத்து, பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அரண்மனையில் வசிக்கும் ராஜ வம்சத்தார் ஆண்டு ஒன்றுக்கு 5 பொன்னும், ஒரு துப்பட்டியும், மற்றவர்கள் 6 பணமும் கொடுக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட சிலர் முருகப்பெருமானுக்கான திருமாலை கட்டளைக்காக ஆண்டு ஒன்றுக்கு 1 பொன்னும், 2 பணமும் கொடுக்க வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Labels:

பழநி செப்பு பட்டயம்


https://www.tagavalaatruppadai.in/copper-plate-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh1 செப்பேட்டின் பெயர் - பழனிச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - நத்தம் கோயில் ஊர் - பழனி வட்டம் - பழனி மாவட்டம் - திண்டுக்கல் மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் - நாயக்கர் / குமாரலிங்கைய நாயக்கர் வரலாற்று ஆண்டு - கி.பி.1781 விளக்கம் - குமாரலிங்கைய நாய்ககர் தனது தந்தை ஏறுதாது லிங்கய நாயக்கர் மற்றும் தாயார் தாதாம்மாள் அவர்கள் பெயரில் இரண்டு சத்திரங்கள் கட்டி அதன் நிர்வாகச் செலவுக்காக ஏற்க்கபட்டி கிராமம், காரைக்குண்டு, அம்மாபட்டி ஆகிய ஊர்களைக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் உள்ள நிலங்களின் எல்லைகளின் திசைகள் ஈசானிய, அக்னி, நிருதி, வாயு என்று திக்பாலகர்களின் பெயரில் செல்லப்பட்டுள்ளது. நிலத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் எல்லக் கல்லாகச் சூலக்கல் நடப்பட்டதால், “சூலக்கல் 11க்குள் சேர்ந்த“, “சூலக்கல் 14க்குள் சேர்ந்த“ என்று நிலங்கள் குறிக்கப்படுகின்றன. இச்செப்பேட்டில் உள்ள வாசகம் அப்படியே நத்தம் அருகில் உள்ள சத்திரம் ஊராளிப் பட்டியில் கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க என்று வரும் கல்வெட்டுச் சொற்றொடர்க்கு இச்செப்பேடு நல்ல எடுத்துக்காட்டாகும். இதனில் சொல்லப்படும் சத்திரங்கள் இன்று பழனிக்குப் பாதயாத்திரை மேற்கொள்ளும் வழித்தடத்தில் உள்ளன. செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் - தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை குறிப்புதவிகள் - தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2022

Labels: