அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மேட்டூ அணை


மேட்டூர் அணை;

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். அணையின் தாழ்ந்த மட்டம் 2730.00, அணையின் முழுநீர் மடம் 2850.00 (FRL) , அணையின் உபயோகமாகும் அளவு 8.073(TMC) மொத்த கொள்ளவு 8.500 (TMC) ,  இடது கரை வாய்க்காலின் அளவு 456(LBC), வடதுகரை வாய்க்காலின் அளவு 1500 (RBC)  மொத்தம் 1956, பாசனப்பரப்பு 1348390 ஏக்கர், பயிரிடப்படும் மொத்த பரப்பு 170020 ஏக்கர், பாசனத்திற்கு ஒரு கன அடி நீர் ஓட்டத்திற்கு பாசனப்பரப்பு 89 (Acre/Cusec)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYaw-ObJk290_I3qkCScjwjtBBg-drlmcUc1Fw9myBINTD_T7oAsBpB_CojQN6_bDU3mf4LG437RHZRRexI7RHFnMFMkWSyzU8-xXG5wPe1c61HhQ2Rqi5AzHFmP_3VhyefC8t/s320/Mettur_dam.jpg
மேட்டூர் அணை வரலாறு:

சுண்ணாம்பு மற்றும் காரையில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடியாகும். அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியாகும். அதிகபட்ச அகலம் 171 அடியாகும். அணையின் சேமிப்பு உயரம் 120 அடியாகும். மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. முன்பு இந்த அணையினால், தமிழ்நாட்டில் 20 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன. அதாவது, திருச்சி மாவட்டத்தில் 2.74 இலட்சம் ஏக்கரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12.05 இலட்சம் ஏக்கரும், சேலம் மாவட்டத்தில் 4.66 ஏக்கரும் புதுக்கோட்டை, தென்னார்க்காடு மாவட்டத்தில் 2.70 இலட்சம் ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் மொத்த சாகுபடியே 16 இலட்சம் ஏக்கரில்தான் செய்யப்படுகின்றன. அதில் குறுவை 4 இலட்சம் ஏக்கரிலும், சம்பா 12 இலட்சம் ஏக்கரிலும் செய்யப்படுகின்றன.
திட்ட வரலாறு


1923-ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்க வைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUtYjdiTAay_wB6Z3wk_IvFUbcwmZbU6e0aRMe2bgPqJoG9v5bNS7fUgsomTYywsHb_2OVboSFPn58VwBr11rqJPLVoSM6Fb-z6ISINTi2JHQgBavGtBcODVNc-bapoqhXlyhb/s1600/Mettur_dam.jpg

சர் ஆர்தர் காட்டன்

சர் ஆர்தர் காட்டன் 1834-இல் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின் 20 ஆண்ருகள் கழித்து 1856-இல் மேஜர் லாஃபோர்ட் (major Lawford) தற்போது அணை அமைந்துள்ள இடத்திற்கு 11 மைல் கீழே நெரிஞ்சிப்பேட்டை  எனுமிடத்தில் கட்ட திட்டம் தயாரித்தார். ஆனால் W.பிரேசர்(W.Frazer) ஏற்கனவே தகுதியில்லை என தீர்மானிக்க திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். 1869-இல் Cap.C.J.ஸ்மித்  (Cap.C.J.Smith) அப்பணியை எடுத்துக் கொண்டார். அதன்பின் 1880இல் மேஜர் மாண்டகோமெரி (Major Montegomerie) அதன் பின் கேப்டன் ரோமில்லி (Cap.Romilly) 1892-இல் கோயமுத்தூர் செயற்பொறியாளர் J.C.லார்மினி(J.C.Larminie) மேற்கொண்டார்.

1901-இல் ஹியூக்ஸ் (Hughes)பவானி திட்டத்தை நீர்ப்பாசன ஆய்வாளர் ஜெனெரல் ஹிகாம்(Higham) அவருக்குப் பின் வந்த தாமஸ்(Thomas) முன்பும் சமர்ப்பித்தார். காவிரி நீர்த்தேக்கத் திட்டம் H.A.மோஸ்( H.A.Moss) அவர்களால் G.O.No.971-I  நாள் 2, செப்டம்பர்,1904 முழு வடிவம் பெற்றது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.292.3 இலட்சங்களாகும். மூலும் இது இந்திய அரசின் ஒப்புதலுக்கு கடித எண்.597-I   நாள் 13,ஜூன், 1906 இல் அனுப்பப் பட்டது.

இதனுடன் இணைந்து கட்டணை வாய்க்கால் திட்டத்தையும் நீர்ப்பாசன ஆய்வாளர் ஜெனெரல் சர் ஜான் பெண்டனுக்கு (Sir John Benton)தலைமைப் பொறியாளர் H.E.கிளார்க்(H.E.Clerk) அனுப்பி வைத்தார். அதன் அரசாணை அவர்களால் G.O.No.72-I  நாள் 11, மார்ச்,1910 ஆகும்.

1910-க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட இடங்கள்
1.      ஊரட்சி
2.      நெரிஞ்சிப்பேட்டை/செக்கானூர்
3.      நவப்பேட்டை
4.      சாம்பள்ளி

கோல். W.M.எல்லீஸ் (Col.W.M.Ellis) காவிரி-மேட்டூஎர் திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி 1910-இல் அவர் அறிக்கை சமர்ப்பித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieCJfC1cvJ-ypkvGGhi5w1xLUi6cW43KIwGmIGrhgK-6jjhwzZ0_SakHFBan13F9z7wTyyKUaSJe9Y151gCwQZkf0b7G4HurLj1rzS72o2S_NHWqGPp_ZGzlq_MDlypCoijkU1/s200/Ellis.jpg
W.M.எல்லீஸ்

1910-ஆம் ஆண்டு ரூபார்.385 இலட்சம் திட்ட செலவாக சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அரசாணை அவர்களால் G.O.No.386-I  நாள் 3, டிசம்பர்,1910.இத்திட்டத்தை K.சீனிவாச ஐய்யங்கார் மற்றும் சர் C.P.ராமசாமி அய்யங்கார் முன்னெடுத்துச் சென்றனர்.  வடக்குத் தெற்காக, சீதாமலை - பாலமலை என்னும் இரண்டு மலைகட்கிடையில்  மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது


1911 ஆம் ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு 2 ½ கோடி ஆகும். மின் திட்டத்துடன் சேர்த்து 6 ¾ கோடி ஆகிறது. சர் ஹக் கீலிங் (Sir Hugh keeling) பெருங்கற்கலைக் (Cylopean masonry)கொண்டு அணை கட்டலாம் என்று முடி செய்யப்பட்டது. இதே முறைப்படி ஆலிவ் பிரிட்ஜ் பாரேன் ஜேக் அணைகள் அமெரிக்காவில் கட்டப்பட்டன.

ஜார்ஜ் விஸ்கௌண்ட் காஸ்சேன் 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwrebX4p4OVed8Hf6NUh_4Z5ukXCTTP-C3zfeas1VlKflvgJAtNZa9RxEmLiuKlkyUn8CJ72hzADTfEdA6iWoBd6G_UBWPXs0I9hwF4AdHqCZipXl7rYuBkraLT3AB6eN-8Asf/s1600/Mettur_dam.jpg

அப்போதைய மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் விஸ்கௌண்ட் காஸ்சேன்(George Viscount Goschen) 20, ஜூன்,1924 அன்று நினைவுத் தூணை(Obelisk) திறந்து வைத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேட்டூர் அணைக்கு 20, ஜூலை,1925 –இல் முதல் வெடி வைத்து பணிகள் துவங்கப்பட்டது.


திட்டப் பணிகளுக்கு சாலைகள் மிக மோசமாக இருந்ததால்செயற்பொறியாளர் T.I.S.மெக்கே (T.I.S.Mackay) ஈரோட்டிலிருந்து அணை வரை 36 மைல்களுக்கு ரயில்பாதை அமைத்துக் கொடுத்தார். 

நில ஆர்ஜிதம்

அரசு நிலம் 95,983 ஏக்கர் ரூ.8/ஏக்கர்                             ரூ.7,65,464
ஜமீந்தாரி மற்றும் இனாம் நிலங்கள் ரூ8/ஏக்கர்                  ரூ.9,56,392
விவசாய நிலங்கள் மற்றும் இனாம் நிலங்கள் ரூ.5/ஏக்கர்         ரூ.3,13,850
அரசு சுவாதீனத்திலிருந்த நிலங்கள்16,230 ஏக்கர் நிலம்
ரூ.1.2.0/ஏக்கர்                                                  ரூ 18,259
அரசு சுவாதீனமில்லாத நிலங்கள்1,768 ஏக்கர் நிலம் ரூ.6/ஏக்கர்    ரூ.13,608
மொத்தம்                                                     ரூ.20,80,383


காவேரிபுரம் முதல் நாகமரை வரை நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 7,409 ஏக்கர்களும், கோயமுத்தூரில் 11,462 ஏக்கர்களூம் எடுக்கப்பட்டது. அதன் அரசாணை G.O.No.196-I  நாள் 2, மே,1925. இதற்கென துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டார் அரசாணை G.O.No.365-I  நாள் 30, ஜூலை,1925 ஆகும். அணையின் கடைக்கோடி நீங்கலாக மொத்தம் 18,435.84 ஏக்கர்களும், 4146 வீடுகளும் ஆர்ஜிதம் செய்யப்பட்டன. இப்பணிகள் பிப்ரவரி,1930 இல் முடிக்கப்பட்டது.

நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு                          ரூ.27,67,886
நில ஆர்ஜித மறுசீரமைப்பு மற்றும் ஓய்வூதியம்              ரூ.1,98,418
மொத்தம்                                                  ரூ.29,66,284

அதன்பின் வலப்புறம் (Right Flank) ஸ்மித் மலை(Smith knoll), ஸ்டோனி மலை (Stoney’s ridge) கேம்பல் மலை(Campbells hill) பகுதிகளில் குழி தோண்டும் பணி துவங்கப்பட்டது. இதே வேளையில் மைசூர் புவியியலாளர் டாக்டர் ஸ்மித் மற்றும் இந்திய புவியியலாளர் விநாயக் ராவும் ஆய்வு செய்தனர்.

கொலோனல் எல்லீஸ் அதிகப்படியான வெள்ள நீரை வெளியேற்ற அளந்த பொழுது 1910-க்கு முன்னர் 28 ஆண்டுகள் வரை 200,000 cusecs வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகப்படியாக 30,ஜூலை,1896-இல் 207,000 cusecs வெள்ளம் வந்துள்ளது. 26, ஜூலை,1924-இல் 4,56,000 cusecs பதிவானது. இதை கணக்கில் கொண்டு நீர்வெளியேற வட புறம் (North Flank) புலிமலைக்கு மேற்கே இயற்கையான முறையில் அமைந்துள்ளது. அதே போல் இடப்புறம் எல்லீல் சேட்டல் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டது. என்னீஸ் சேட்டல் வழியாக வெளியேறும் நீர் தொட்டில்பட்டை என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.  வேலையாட்கள், அலுவலர்கள் குடியிருப்பு அமைக்க மார்ச்,1926 இல் மேட்டூர் டவுன்சிப் ஆரம்பிக்கப்பட்டு அதே ஆண்டு முடிக்கப்பட்டது.

மேலும் மேட்டூருக்கு இடபுறமுள்ள ஊர்களுக்குச் செல்ல மிகுந்த சிரமம் இருந்தது. அதற்காக காவிரி பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ஆய்வு மேற்கொள்லப்பட்டது. அதன் படி செயற்பொறியாளர் குறிப்பாணை எண்  2832/B.E.P   நாள் 23, மார்ச், 1926 அனுமதிக்கப்படது. அதன்படி ஆகஸ்டு 1927-இல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

கூலித் தொழிலாளர்களுக்கு கூடாரம் அமைக்கப்பட்டு சுமார் 18,000 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். 1926 அக்டோபர்,1926-இல் இந்திய அரசின் கன்சல்டிங் பொறியாளர் D.G.ஹாரிஸ்(D.G.Harris) கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFEwVa1L0JSxfvA-dP8p6ADC7Z8yKvOHz5irchbTXPcplHw2RDgomaHKafEAljwoILAUyUUt0ftME6gi9uPrkdCyMBMeewxi7Aw4ITygDFnt0aUMf2-o5S0v2gP09-lh0PfakJ/s200/Mullings.jpg
Sir Clement Tudway Mullings
கட்டுமானத்திற்கு தேவையான சுர்கி (Surki mortar) சுண்ணாம்பு சங்ககிரி, பவானி, சேலம் பகுதிகளிலிருந்துகொண்டுவரப்பட்டது. அப்பொழுது க்ளமண்ட் முல்லிங்ஸ் (Sir Clement Tudway Mullings) போர்ட்லேண்ட் சிமெண்ட் பயன்படுத்த சிபாரிசு செய்தார். அதன் படி அரசாணை G.O.No.1815-I  நாள் 22, ஆகஸ்டு,1927 க்கு பிறகு சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் கிடைத்த மணல் திருப்தியில்லாததால் பாறைகள் உடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. பின்னர் பரிசல்கள் மூலமாக சோழப்பாடியிலிருந்து சுமார் 2,239,000 கன அடி மணல் கொண்டுவரப்பட்டது.

அணைக்கு பயன்படுத்தப்பட்ட மணல்         26,651,286 கன அடி
இதர பணிகளுக்கு                           1,608,628 கன அடி
மீதமானது                                  457,520 கன அடி
கிரஷர் தூள்                                903,837 கன அடி

கல் சேத்தமலைக்கு கிழக்கே புலிமலையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 37,800 கன அடி கற்கள் வீதம் 5 ஆண்டுகளுக்கு தேவைப்பட்டது. இதன் பயன் பாட்டில், pneumatic tripod drills, drifters, jack hammers போன்றவை கல்லெடுக்கப் (Quarrying) பயன்படுத்தப்பட்டன. மேலும் கம்பெனியிடமிருந்து பேட்டரிகள் வாங்கப்பட்டன.

முதல் வெடியானது 3, மே, 1927-இல் வைக்கப்பட்டது. அப்பொழுது வடி மருந்துகளின் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஷெல்டன்(Dr.Sheldon) இருந்தார்.வெடிமருந்துகளுக்கு திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது. அதற்கான உரிமையை லைஃபூட் ரெப்ரிஜிரேசன் கம்பெனி (Lightfoot Refrigeration company) எடுத்திருந்தது. கம்பெனியின் உரிமையாளர் T.B.லைஃபூட் மற்றும் பேராசிரியர் லிண்டே அணைக்கருகில் இரண்டு யூனிட்டுகள் ஆரம்பித்து ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக்கு வசதியாக டிராம்(tramway)வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தலைமைபொறியாளரின் கருத்தை ஏற்றுக் கொண்டு மார்டின் கம்பெனி ஜூன்,1926-இல் தின்னப்பட்டியிலிருந்து மேட்டூர் வரை ட்ராம் வசதியை செய்து கொடுத்தது.

பணிமனை மற்றும் இயந்திரங்கள் பொறுப்பு அதிகாரியாயிருந்த W.P.ராபர்ட்ஸ் இரும்பு ரோப்புகள், கேபிள்கள் பணியினை கவனித்துக் கொண்டார். பணிக்கு தேவையான இரண்டு கோபுரங்களை(Tower) ஸ்டோதெர்ட் & பிட் கம்பெனி (M/s Stothert & Pitt)கவனித்துக் கொண்டது. அதன்படி இரண்டு கோபுரங்களை 1, ஆகஸ்ட், 1929 இல் சுமார் 180 அடி உயர கோபுரத்தைஅமைத்துக் கொடுத்தது.கட்டுமானத்திற்கு தேவையான மின்சாரம் 3400KW, இரண்டு 125 KVA டீசல் ஜெனரேட்டர்கள் மூலமும், சிவசமுத்திரம் மின் உற்பத்தியிலிருந்தும் பெறப்பட்டது.

மோட்டார் மூலம் இயங்கும் மதகுகளை க்ளென்பீல்ட் & கென்னெடி(M/s Glenfiled &Kennedy) நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. அதிகப்படியான வெள்ளநீர் வெளியேற முல்லிங்ஸ் ஒரு குணகத்தை (Co-efficient)அறிவுறுத்தினார், Q=c.l.h.3/2  அது சரியாக இருக்குமென்று முடிவெடுக்கப்பட்டது.

அணைகட்டுமானத்தில் நீரின் அழுத்தம் (Stress)பௌவியர்(Bouvier) மற்றும் அன்வின்(Unwin) முறைகளில் உயரத்திற்கேற்ப கணகிடப்பட்டது.

Bouvier Method

Maximim Stree-Reservoir empty=2w/L (2-3u/L)

Reservoir full= 2w/L (2-3u/L) sec.2α

L= Base width
u=upstream third reservoir empty
u-downstream third reservoir full
w=weight of themasonry (includes water load in the case of reservoir full)
tan α = water thrust/ weight of the masonry reservoir full

Unwin method

Maximim Stree-Reservoir empty=2w/L (2-3u/L) Sec.2Ø1

Reservoir full= 2w/L (2-3u/L) Sec.2Ø2

அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட பின் அணையின் மொத்த கொள்ளளவு 54,620,050 கன அடி ஆகும். 14, ஜூலை,1934 கடை கல்லை அணையில் மேற்பரப்பில்(parapet) பார்பரின் மனைவியால் நடப்பட்டது. முல்லிங்ஸ் இருக்கை(Mullings Seat) டான் (Dann)என்ற கட்டவியலாளரால் வடிவமைக்கப்பட்டது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJHUexml9d6z3R0jTUlBE0PvmnFMalIARyclccWU54br1Hi1d30IwCMEXnN0tw5jeNepgL7EjBgspos7SsNdK3d5-zFB3aA62CuAH9Xxdk6KBgnUe-KZATEWIaebyG9_NklyOF/s1600/stanley.jpg
George frederick stanley
அணையானது 21, ஆகஸ்ட்,1934 அன்று மெட்ராஸ் கவர்னர் சர் ஜார்ஜ்(Sir George  பிரடெரிக் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்டது. நீர்த்தேக்கம், ஸ்டான்லி நீர்த்தேக்கம் என் பெயரிடப்பட்டது. அதே போல் 1938-இல் ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் 5-வருட டிப்ளமாவை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்
ராயபுரம் மருத்துவக் கல்லூரி 2,ஜூலை,1938 முதல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது.

34 ஏக்கர் நிலப்பரப்பி அமைக்கப்பட்ட ஸ்டான்லி பூங்காவை கவர்னரின் மனைவி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி (Lady Beatrix Stanley) ஸ்டான்லி திறந்து வைத்தார்.

இன்றளவும் அணை கட்டுவோருக்குமுன்மாதிரியாகவும் உலகத்திலேயே முக்கியமான கல் அணையாகவும் இருப்பது மேட்டூர் அணை. அது கட்டப்பட்ட போது 1934-இல் மேட்டூர் அணையே உலகில் நீளமான(5300அடி) அணையாக இருந்தது. இந்த ஏரியில் பரப்பு 60 சதுரமைல்: சென்னை மாநகாpன் பரப்பைவிடச் சற்று பெரிது! இதன் கொள் அளவு 93500 மிலியன் கன அடி அதாவது ஏறத்தாழ 10000 கோடி கன அடி தண்ணீர் தேங்கினல்தான் மேட்டூர் ஏரி நிரம்பும்! 1961-இல் ஏற்பட்ட பெரு வௌளத்தின்போது இந்த எல்லையையும் மீறி 10450 கோடி கன அடி வரை  (ஏறத்தாழ 124 அடிஉயரம்) தண்ணீர் கட்டப்பட்டது. இதனல் மேட்டூர் அணையை 126 அடிக்குமேல் மேலும் 10 அடி உயாத்திக்கட்ட வேட்டுமென்று கருத்தும்இ மேட்டூருக்கு மேலேயே ஒகனேக்கல்லில் அணைகட்ட வேண்டுமென்ற கருத்தும் வலுப்பெற்றிருக்கின்றன.

மேட்டூர் ஏரி ஏற்பட்டதால்  ஏரியின் பரப்புக்கு உட்பட்ட பகுதி அனைத்தையும் ஓரே வட்டத்தில் ஓமலூரில் அமைக்க நேரிட்டது. அதனல் புதிதாக ஏர்க்காடு வட்டம் ஏற்பட்டது. மேட்டூரின் மிக உயராமன இடத்தில் மலைகளுக்கு நடுவே புதிய சாலை போடப்பட்டுச் சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் குறுக்குவழி (சேலத்துக்கோ ஈரோடுக்கோ செல்லாமல்) அமைந்தது. இவ்வாறு பலமாறுதல்களைச் செய்து வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது  மேட்டூர் அணை.

மேட்டூரை விடப்  பெரிய அணைகள் இப்போது கட்டப்பட்டிருக்கின்றன. மேட்டூரில் செலவானதைப்போல நூறு பங்கு பணச் செலவில் அணைகள் அமையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகுதான். அணை முழுவதையும் கல்லால் கட்ட வேண்டுவதில்லை தேக்கப்பட்ட நீரை மதகுகள் வழி ஆற்றுக்கும் கால்வாய்களுக்கும் விடுவதற்கான பகுதி மட்டும் கல்லால் அமைத்தால் போதும் அப்பகுதிக்கு இருபுறமும் மண்இ அணைகளை நெடுந்தொலைவுக்குக் கட்டி மண்ணைக்கெட்டிப்படுத்தலாம் என்ற முறையில் அமொpக்கா சில அணைகள் கட்டி உலகினாக்கு உணாத்தினா. இக்காலத்தில் கட்டப்பட்ட கீழ்பவானி போன்ற அணைகள் இம்மாதிரி அமைந்தவையே.

முழுவதும் கல்லால் கட்டப்பட்ட அணையையும் அணைகளில் மேட்டூருக்கு இணையாக எந்த அணையையும் சொல்லுவதற்கில்லை. கட்டு வேலையிலும். உறுதியிலும் மேட்டூர் அணையைக் குறை கூறும் வாய்ப்பு ஒன்றும் இத்தனை ஆண்டுகளாக ஏற்படவில்லை இனி ஏற்படுவதற்கும் இல்லை.

பொறியியல் கலையின் பொலிவு முழு உருவம் பெற்ற இடம் மேட்டூர் பார்த்து மகிழவும் படகோட்டி இன்புறவும்  மீன் பிடித்து உண்ணவும் பூந்தோட்டத்தில் பொழுது போக்கவும் மேட்டூர் மேலான இடம் மின்சாரப் பெருக்கத்தாலும் புத்தம் புதிய தொழிற்சாலைகள் மேன்மேலும் தோன்றி வருவதாலும் மேட்டூர் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது.

மேட்டூர் திட்டத்தில் பணியாற்றிய அலுவலர்கள்
தலைமை பொறியாளர்கள்
சர் C.T.முல்லிங்ஸ்
V.ஹர்ட்
F.M.டொவ்லி
R.F.ஸ்டோனி
M.R.Ry.S.பாஸ்கர அய்யங்கார்
M.R.Ry.N.சாமிநாத அய்யங்கார்
M.R.Ry. R.நரசிம்ம அய்யங்கார்
M.R.Ry.G.ராமசாமி அய்யர்
W.P.ராபர்ட்ஸ்

பணி கண்காணிப்பாளர்
C.G.பார்பெர்

செயற்பொறியாளர்கள்
M.R.Ry .R.நரசிம்ம அய்யங்கார்
W.P.ராபர்ட்ஸ்
F.M.விபன்
M.R.Ry.N.பரமேஸ்வரம் பிள்ளை
D.W.கொல்லன்
T.I.S.மெக்கே
M.R.Ry.L.வெங்கடகிரிஷ்ண அய்யர்
M.R.Ry.N.கெசவ ராவ்
M.R.Ry.N.கோவிந்தராஜ அய்யங்கார்
H.G.ஜேக்சன்
J.மாதை
M.R.Ry.A.R.வெங்கட ஆச்சார்யா
W.H.டர்னர்
M.R.Ry.R. மஹாதேவ அய்யர்
M.R.Ry.M.S.திருமலை அய்யங்கார்
M.R.Ry.T.S.வெங்கடராம அய்யர்
M.R.Ry.R.S. பத்மநாப அய்யர்
M.R.Ry.S.V.ரஜங்கம் அய்யர்
M.R.Ry S.V.கனகசபை பிள்ளை
L.ஹென்சா
H.A.இர்வின்
A.H.S.கேம்பேல்
F.T.லெர்ன்மோத்

உதவி பொறியாளர்கள்
M.R.Ry U.S.ராமசுந்தரம்
M.R.Ry.T.R.நரசிம்ம ஆச்சார்யா
M.R.Ry.R. ராஜகோபால ஆச்சார்யா
M.R.Ry.M.B. கிரிஷ்ணசாமி அய்யங்கார்
M.R.Ry.G.G.கிருஷ்ண அய்யர்
M.R.Ry.P.S. விஸ்வநாத அய்யர்
M.R.Ry.S. ராமானுஜ ஆச்சார்யா
M.R.Ry. ஹரிநாராயணா
M.R.Ry.MV. ராமசாமி அய்யர்
M.R.Ry.R. வைத்தியநாத அய்யர்
M.R.Ry.N. சுந்தரசிவ ராவ்
M.R.Ry M.S.பாஸ்கர அய்யர்
M.R.Ry. ஸ்ரீனிவாச அய்யர்
M.R.Ry.K.வெங்கட ஆசார்லு
M.R.Ry.S.கிருஷ்ண அய்யர்
M.R.Ry.S.பஞ்சாபகேச அய்யர்
M.R.Ry.P. ஸ்ரீனிவாச அய்யர்
M.R.Ry.M.முகம்மது சிகந்தார் சாகிப்
M.R.Ry.T.V. சுந்தரேச அய்யர்
M.R.Ry.V. சேகர மேனன்
M.R.Ry.K.S.நல்லபெருமாள் பிள்ளை
M.R.Ry.T.V.செஷ அய்யர்
M.R.Ry.G.V.லஷ்மிநாராயணா
M.R.Ry.S.வைத்யநாத அய்யர்
M.R.Ry.S.V.பாலசுப்ரமண்ய அய்யர்
M.R.Ry.M.சத்யநாரயணமூர்த்தி
M.R.Ry.a. சிதம்பரம் பிள்ளை
M.R.Ry.P.அய்யாசாமி அய்யர்
M.R.Ry.P.ரகுநாத ராவ்
M.R.Ry.N.S.சுப்ரமண்ய அய்யர்
M.R.Ry.G.கிருஷ்ணசாமி அய்யர்
M.R.Ry.S.R.பூர்ணய்யா
M.R.Ry.S.R.கோபாலன்
M.R.Ry.M.N.வெங்கடேஷ்வரன்
M.R.Ry.P..சுப்ரமண்யன்
M.R.Ry.S..R.நரசிம்மன்
M.R.Ry.V.நரசிம்ம காமத்
M.R.Ry. டி சில்வா
M.R.Ry.V.ராதாகிருஷ்ண அய்யர்
M.R.Ry.K.S. விஸ்வநாத அய்யர்
M.R.Ry.V.சேது சர்மா
M.R.Ry.L.M.சுந்ரேச அய்யர்
M.R.Ry.N.தணிகாசல முதலியார்
M.R.Ry.N.காமத்
M.R.Ry.N.ராமசாமி அய்யர்
M.R.Ry.N.அச்சுத மேனன்
M.R.Ry.B.R.சோமயாஜுலு

மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும்உள்ளது.
CP.சரவணன், வழக்கறிஞர்.


References
General Sir Arthur Cotton, His Life and Work by Lady Elizabeth Hope, William Digby 1900
History of the Cauvery-Mettur Project_ C.G.Barber 1954
நன்றி