அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மூக்கறுப்புப் போர்

கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை; மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.


அதே நேரத்தில் தன்னரசு படைகள், கண்ணிவாடி, பிருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் மூக்குப்பரி என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு திருமலை சேதுபதி என்ற பட்டமும் ராணி சொல் காத்தான் என்ற பெயரும் வழங்கினார். இதோடு நிற்காமல் சேதுபதி இனிமேல் நீ எனக்கு கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவும் கொடுத்து இராமநாதபுரத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார். சேதுபதி மறைந்த பின் சேதுபதி மருமகன் இராசசூரியத்தேவன் சேதுபதியானார்.
8மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger செல்வன்

மைசூர் மக்களின் மூக்கையும் அறுத்ததாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னாளில் சேதுபதிக்கும் ராணிமங்கம்மாவுக்கும் மனஸ்தாபம் உண்டாகிவிட்டது. கடைசியில் ராணிமங்கம்மாவை அவர் பேரனே ஜெயிலில் போட்டு அவர் உயிர்விட்டு,அதன்பின் அவனும் செத்து அவன் விதவை மனைவி ராணிமீனாட்சி ஆர்க்காட்டு நவாபால் ஏமாற்றப்பட்டு,அதன்பின் நவாபும் பிரிட்டிஷாராலும் யூசுப்கானாலும் ஏமாற்றப்பட்டது பெருங்கதை

 
மணிக்கு, எழுதியவர்: Blogger செல்வன்

மைசூர் மக்களின் மூக்கையும் அறுத்ததாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னாளில் சேதுபதிக்கும் ராணிமங்கம்மாவுக்கும் மனஸ்தாபம் உண்டாகிவிட்டது. கடைசியில் ராணிமங்கம்மாவை அவர் பேரனே ஜெயிலில் போட்டு அவர் உயிர்விட்டு,அதன்பின் அவனும் செத்து அவன் விதவை மனைவி ராணிமீனாட்சி ஆர்க்காட்டு நவாபால் ஏமாற்றப்பட்டு,அதன்பின் நவாபும் பிரிட்டிஷாராலும் யூசுப்கானாலும் ஏமாற்றப்பட்டது பெருங்கதை

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

அறியாத தகவல். நன்றி என்னார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger செந்தழல் ரவி

வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்களை சிறப்பாக எழுதுகிறீர்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

செல்வன்
உண்மைதான் நான் எல்லாவற்றையும் எழுதநினைக்கிறேன் ஆனால் ஜல்லியடிப்பார்கள் என்பதற்காக சிலவற்றை மறைக்க வேண்டியுள்ளது அதாவது உண்மையைச் சொன்னால் சிலருக்கு உடமபெல்லாம் எரிகிறது என்ன செய்ய?

ஓகை ,செந்தழல் ரவி
இருவரது பின்னூட்டத்திற்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வவ்வால்

மதுரை நாயக்கர்கள் வரலாறு பற்றிய உங்கள் பதிவு சுருக்கமாகவும், தெளிவாகவும் வந்துள்ளது. நாயக்கர்கள் அரசாட்சியில் குறிப்பிடத்தக்கவர் திருமலை நாயக்கரே.

//கடைசியில் ராணிமங்கம்மாவை அவர் பேரனே ஜெயிலில் போட்டு அவர் உயிர்விட்ட//

ராணிமங்கம்ம .. திருமலை நாயக்கரின் மருமகல், அவர் கணவன் உடல்னிலை சரி இல்லாமல் இறந்தார், பின்னர் மங்கம்மாலின் மகன் பதவிக்கு வந்தார் அவரும் இறக்கவே மங்கம்மால் அரசு பொறுப்பேறார், அப்போது அவரது மருமகள் , கர்ப்பிணியாக இருந்தார் எனவே அக்காலமரபு படி உடன்கட்டை ஏறாமல் காலம் தாழ்த்தி , குழந்தை பிறந்ததும் அவர் உடன்கட்டை ஏறிவிட்டார்.

எனவே குழந்தையின் பொறுப்பாளராகா மங்கம்மால் அரசாட்சி புரிந்தார், அவன் வளர்ந்து வாலிபன் ஆன பிறகும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை, மேலும் மங்கம்மாளுக்கு கணக்கப்பிள்ளையுடன் முறை தவறிய உறவும் இருந்தது எனவே தான் அவரை சிறையில் அடைத்து விட்டு ஆட்சிக்கு வந்தார்.

ராணி மீனாட்சியை ஏமாற்றியது தோஸ்ட் அலி என்ற ஆர்காட் நவாபின் தம்பி ஆவர் , உதவி செய்வதாக வந்து பின்னர் அவரை சிறையில் அடைத்து ஆட்சியை பிடித்துகொண்டார் , இதனால் மனம் வெறுத்த மீனாட்சி விழம் அருந்தி உயிரைப் போக்கிக்கொண்டார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வவ்வால் தாங்களும் சில வரலாற்று நடப்புகளை எழுதியுள்ளதைப் படித்தேன் இப்பொழுது நான் http://visvacomplex.com/MUkkaRuppu_Yuththam.html
இதைப்படித்தேன் ஆகவே என்னுடைய பழைய பதிவை தொடுப்பு எடுப்பதற்கு திறந்தேன் அப்பொழுத அது தமிழ்மணத்தில் வந்து விட்டது. ராஜாதேசிங்கு கதையை தங்கள் தளத்தில் படித்தேன் நன்றாக உள்ளது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வவ்வால்

நன்றி என்னார்,

பெரும்பாலும் வரலாற்று பதிவுகள் எங்கு கண்டாலும் மூக்கை நுழைத்து விடுவேன்(பின்னூட்டம் வெளிவருமா ,வராத என்ற கவலை எல்லாம் இல்லாமல்)

தனியாக அப்படி பதிவுகள் இடுவதில்லை, சமிபகாலமாக அதிகம் அப்படி பதிவுகள் வரவில்லையே என்று தான் நானே சிலவற்றை பதிவிட்டேன் , வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜ தேசிங்க் என்று , இன்னும் பல போட ஆயத்தம் ஆகி வருகிறேன் விரைவில் பதிவிட வேண்டும்.(சோம்பல் தான் தடுக்கிறது)

 

Post a Comment

<< முகப்பு