அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மன்னர்கள் யார்தமிழகத்தில் ஒவ்வொரு சாதியும்(பெரும்பான்மை சாதிகள் என்று படிக்கவும்) சோழர் என்ற பெருமை நோக்கியே நகர்கின்றன . இது ஏன் சோழர்க்கு மட்டும் ? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியன் அவ்வளவு முக்கியம் இல்லையா ? பிரம்மதேய  நிலங்களை ஒழித்து பார்பனர் ஆதிக்கத்தை முடக்கிய களப்பிரர் இல்லையா ? பிரச்சனை அதுவல்ல சோழர்களின் பெருமை அளவுக்கதிகமாக புகழப்பட்டேதே காரணம் ஆகும். பிராமணர் எழுச்சியை , பிராமண உச்சதை கொண்டு வந்த இடைக்கால பல்லவர்களும் , அதன் பின் வந்த சோழர்களும் காரணமாய் இருப்பதால் அவர்களின் தமிழ் மூவேந்தர்களின் முக்கியமான சோழன் அடையாளப்படுத்த பட்டதே காரணமாகும்.

ராஜராஜ சோழன் தன் சாதி என்று அடித்து கொள்ளும் சாதிகளை பார்ப்போம் .
பள்ளர் :
இவர்கள் உயர்ந்த சாதியா ? தாழ்ந்த சாதியா ? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. உழவன் என்றாலே உயர்சாதிதான் . நமக்கு உணவு கொடுத்தவன் . அவனை இகழ்ந்து ஒரு சாதி பெருமை தேவையில்லை என்பதை உறுதி செய்தே இதை நான் தொடர்கிறேன் .
ராஜராஜன் என்றால் இடைக்கால சோழர் . இங்கே மருதம் , முல்லை , நெய்தல் குறிஞ்சி பாலை என்ற நிலம் வரைவியலுக்கே இடமில்லை. இடைக்காலத்தில் மள்ளர் என்று இருந்தாகவும், நாயக்கர் வந்து பள்ளர் என்று மாற்றியதாகவும் சொல்கின்றனர்.  இடைக்காலத்தில் அதவாது இடைக்கால சோழர் , பாண்டியர் காலங்களில் பள்ளர் என்ற சொல் காணப்படுகின்றது. பறையர் பள்ளர் என்ற இனங்கள் சேர்ந்தே சொல்லப்படுகின்றது. சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளகுடிக்கு வாசல் பணம் மானியமாகவும் வழங்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . (பறையர் என்ற விகிபீடியாவில் இவைகள் தென் இந்திய கல்வெட்டுகள் எண்களை கொண்டு இருந்தன , இப்போது நீக்கப்பட்டு இருக்கின்றன , அந்த எண்ணை, நான் குறிப்பெடுத்து வைத்து இருக்கின்றேன்) அதை போலவே இடைகால பாண்டியமன்னர் காலத்தில் பெரிய தேவர்க்கு வேண்டி மடையை அடைக்க முற்பட்டு உயிரை நீத்த பள்ளர் மகளுக்கு உதிரப் பற்று என்ற நிலம் அளித்ததாகவும் கூறுகிறது . இதன் படி பார்த்தால் பள்ளர் என்ற சொல் நாயக்கர் வருகைக்கு முன்னே இங்கு இடைக்கால சோழர் , பாண்டியர் காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதே உறுதி ஆகிறது .

குஞ்சர மல்லனான ராஜராஜன் பெரும்தச்சன்; ராஜராஜன் தன் காலத்தில் கோயிலில் வேலை செய்த ஊழியர்களுக்கு தன் பெயரை கொடுத்துள்ளான் . கோயில் வேலையில் தச்சனாக இருந்தவனுக்கு குஞ்சர மல்லனான ராஜராஜ பெரும்தச்சன்”  என்றும் , கோயில் பணியில் முடிவெட்டியவருக்கு “ராஜராஜ பெரும் நாவிதன்” என்றும், பறை அறிவித்தவரையும் “ராஜராஜன் பெரும் பறையர்” என்றும் கூறி கெளரவித்துள்ளான் .இதனால் ராஜராஜன் நாவிதன்
என்றோ , பள்ளர் என்றோ பறையர் என்றோகூறினால் அது அறிவு குறைவு ஆகும் . (சிலர் இப்படிதான் குஞ்சர மல்லன் ராஜராஜன் கூறிக்கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்). இன்னும் சிலர் கிரேக்கம் பாகிஷ் தானிலும் பள்ளன் மள்ளர் என்ற சொல் இருப்பதாக கூறுகின்றனர் , அப்படி என்றால் நாயக்கர்கள் கிரேக்கம் பாகிஸ்தான் சென்று அங்கும் மள்ளர் என்பதை பள்ளர் என்று திரித்தனரா? என்று கூறவேண்டும் . இது சரியாகபடவில்லை என்பதே எமது வாதம் . இவர்கள் இடைக்கால தமிழ் மன்னர்கள் காலத்திலும் சமூகத்தில் கீழ் அடுக்கிலேயே இருந்தார்கள் .இதுவே சரி . தீண்டதகாதவர்கள் ஆனது என்பது முன்பு சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் சாதியத்தில் கீழே இருந்தவை இன்னும் கீழ் நோக்கி போய் தீண்டத்தகாதவர் ஆகின என்பதே சரியாக இருக்கும்.

வன்னியர் , தேவர் , முத்தரையர், நாடார் , வெள்ளாளர் :
இது ஆபத்தானதும்(ஆபத்தானது என்றால் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்கு) பிரச்சைனைக்கு உரியதும் ஆகும், இவைகள் பெரும்பான்மை சாதிகள் ஆகும் , இவர்களில் பல அடுக்குகள் உண்டு . ஏதோ ஒரு அடுக்கை , ஒரு பிரிவை கொண்டு எதுவும் பேச முடியாது . இதில் நாடார்கள் தாங்கள் தாழ்தப்பட்டது , சூர்யா சந்திர குல சான்றோர்கள் அரச உரிமையை இழந்தது களப்பிரர் படையெடுப்புக்கு பின் என்று கூறுவதால் அவர்களை இடைக்கால மன்னரான ராஜராஜன் பட்டியலில் இருந்து விடுவதே சரியானது .

தேவர், வன்னியர் முத்தரையர் ,:
இரண்டு சாதிகளிடமும் பொது பண்பும் , வேறுபாடுகளும் உண்டு. வடக்கேயும் தெற்கேயும் உள்ள போற்குடிகளாக இருக்கலாம். இவர்கள்தான் மன்னர்கள் என்று கூற முடியவில்லை  காரணம் மிக எளிது . ஒரு பெரும்பான்மை சாதி இன்னொரு பெரும்பான்மை சாதியை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது மானுடவியலில் எளிதல்ல . அதுவும் சோழர் என்று கொண்டால் , வன்னியர்- தேவர் சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தஞ்சையிலோ , அல்லது மிக அருகில் உள்ள பழையாறை , கங்கை கொண்ட சோழ புரத்திலோ தன் தலைநகரை அமைத்து கொள்வது என்பதற்கு வாய்ப்பு இல்லை . சோழர் வன்னியர் குலத்தவர் என்றால் கடலூரில் தன் தலைநகரை அமைப்பதே சரியாக இருந்திருக்கும் . தேவர் சோழர் என்றால்  சோழர் தலைநகர் புதுக்கோட்டையாவோ, அல்லது மதுரையாவோ இருந்திருக்க வேண்டும்  மாற்று ஜாதிக்காரன் மிக அருகில் பெரும்பான்மையுடன் இருக்கும் இடத்தில (உறையூர் , தஞ்சை , பழையாறை , ஜெயங்கொண்ட சோழபுரம் ) இருந்திக்க வாய்ப்பே இல்லை. ஒரு சமூகம் எப்படி நகரும் என்பதையும், ஒரு சமூகம் தன் தலைநகரை எப்படி பாதுகாப்பாய் அமைத்து கொள்ளும் என்பதையும் சமூகவியல் ரீதியாக அறிந்தவருக்கு இதில் ஐயம் ஏதும் வரவாய்ப்பில்லை. மழவர் , மறவர் என்பது இரண்டும் ஒரே நிலத்து மக்கள் என்று சங்க இலக்கியம் கூறுகையில் இதில் மறவர், மழவர் என்று இரண்டையும் தன் சாதி என்று கூறி கொள்ளும் மறவர், படையாட்சி இருவரும் ஆய்ந்து அறியவேண்டும் , (நான் இந்த பிளாக்கை தொடங்கும் முன்னர் ஒரு சாதி சார்ந்த அன்தொரோபோலாஜி என்ற இழை சென்று கொண்டு இருந்ததது , அங்கே மன்னர்கள் என்றால் மல்லர்களே , சானர்களே என்றே பலமிக்க வாதம் சென்று கொண்டு இருந்தது , அங்கே  வன்னியர்\ தஞ்சை கள்ளர் என்ற இருவருக்கும் என்று பதிவுகளை இட்டது தஞ்சை கள்ளர் சங்கம் என்பது குறிப்பிட தக்கது பின்புதான் நான் கள்ளர் வன்னியர் என்று பதிவிட்டேன் என்பதை அறிவீர்களாக) பிச்சாவரம் பாளையக்காரர் இரண்ய வர்மன் வம்சம் என்று கூறுகின்றனர் , இவர் பல்லவர் வம்சம் என்று அவர்களே கூறியதாக ஒரு வெள்ளைக்காரர் பதிந்து இருந்தாலும் , சிதம்பரம் கோயிலை கட்டிய கோசெங்கட்  சோழனை குறிக்கிறது என்று முத்தரையர் வரலாற்றில் பார்த்தேன் . அது போல முத்தரையர் தங்களை கரிகால சோழன் வம்சாவழியினர் என்று கூறுகின்றனர். ஏன் விஜயலயசோழன் வம்சாவழியினர் என்று சொல்ல வில்லை என்பது ஆராயத்தக்கது .மூன்றும் வெவ்வேறு ஆட்களின் வம்சாவழியினர் என்று இருக்குமோ? தெரியவில்லை ....

தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது பள்ளி , வன்னியர், மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்பவர்கள், அப்படி இருக்க வேறு என்ன பெயரில் இருந்தார்கள்? என்பது ஆராயத்தக்கது ...

வெள்ளாளர்:
நிறைய பேர் பேசுவதை பார்க்கும் போது அவர்கள் சொலவது தேவர்கள் தங்களை மூவேந்தர் என்று எழுதிகொண்டார்கள் என்று உண்மை அதுவல்ல , பாடங்களிலும் , வரலாற்றிலும் தங்களை மூவேந்தர்கள் என்று எழுதிகொண்டவர்கள் வெள்ளாளர்கள் . இது உண்மையோ பொய்யோ ? ஆனால் ஒரு அபத்தம் கோலி பறையர் என்று அழைக்கப்பட்ட  நெசவு தொழில் செய்த சென்குந்தர்களை நிலப்படையாக கூறி வைத்துள்ளனர் . இவர்கள் போர் செய்யும் குடியா ??? கைக்கோளர் என்பது செங்குந்தர் அல்ல, கைகொளர் எனபது கை வலைத்தடி என்று வலைத் தடி வைத்திருபவர்களை குறிக்கிறது , பலமாக கைகளை உடையவர் என்று குறிப்பதாகவும் சொல்கிறார்கள் . வலைதடி வைத்திருந்தவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் சமீப காலம் வரை வலைதடி பயனபடுத்தியர் யார் என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆட்கள் வரை யாரை  குறிப்பிடுகிறார்கள்  என்பதை அறியவேண்டும்  கோலி பறையர் படைகலங்களில் பணியாற்றியவரா எனபதே ஆச்சர்யம் அளிக்க கூடியது .

வெள்ளாளர்களில் பல பிரிவுகள் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை . இவர்களில் ஒரு பிரிவு மன்னராக இருந்திருக்குமா தெரியவில்லை . ஆனால் இவர்கள்தான் தங்களை மன்னர்களாக எழுதி கொண்டனர் . நிறைய வரலாற்று ஆசிரியர்களும் கூறி இருப்பதாக சொல்கின்றனர் . விக்கிபீடியாவிலும்(விக்கி யில் போய் எழுதவே ஒரு கூட்டம் இருக்கிறது இவர்களை மீறி ஒன்றும் பதிவிட முடியாது அங்கே) இவர்கள் மூவேந்தர்களாக நிறுத்தி கொண்டனர் . இவர்கள் தான் வரலாற்றை எழுதி கொண்டார்களே அன்றி முக்குலத்தோர் இல்லை , இன்னும் சொல்ல போனால் முக்குலத்தோரில் இருந்து ஒரு வரலாற்று ஆசிரியர் கூட வரவில்லை , (இதை நானே சொல்லி இருக்கிறேன், ஜெயமோகனும் சொல்லி இருக்கிறார் . இங்கிருந்தே ஒருவர் வந்து எழுத வேண்டும் என்றும் கூறி இருந்தார் . ஆனால் ஒருவரும் இதுவரை வரவில்லை . குறைந்தபட்சம் பழக்க வழக்கங்களை பிரிவுகளை கூற ஆட்கள் வருமென்றால் அதுவும் இல்லை. அதனால் நானே எனக்கு தெரிந்த சிலவற்றை தஞ்சை கள்ளர்களிடம் இருந்து மட்டும்எடுத்து பதிவிடலாம் என்று இருக்கிறேன் . ஒரு சாதியாக இருந்தால் ஆர்வமாக இறங்கலாம் , நான் இறங்குவது எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சி இருந்தேன் . இனி நானே முயற்சி செய்கிறேன்) . இந்த நிலயில் அவர்கள் தங்களை பற்றி எழுதி கொண்டார்கள் என்று சொல்வது அபத்தமானது .

இப்போது போர்த்தொழில் பற்றி பார்ப்போம்...போர்த்தொழில் செய்ததால் அந்த சமூகத்தில் சில பழக்க வழக்கங்கள் காணப்படும் . தற்காப்பு கலைகளை வம்சம் வம்சமாக பயில்வது, அதைபோல போரில் அதிகம் உயிர்கள் போவதால் இளம் விதவைகள் மிக அதிகமாக் அவர்கள் என்பதால் விதவை மறுமணம் போன்றவையும் காணப்படும் . இதை முக்குலத்தோரில் எல்லா பிரிவுகளிலும் காணலாம். சென்குந்தருக்கு அப்படி ஏதாவது உண்டா ???? இல்லை சத்திரிய முறைப்படி எல்லா பெண்களும் தீக்குளித்தார்களா??? நிச்சயம் தமிழ் சமூகத்தில் அப்படி ஒரு சமூகம் இல்லை . (சுந்தர சோழனின் மனைவியை தவிர ).

தமிழ் இணைய பல்கலை கழகத்தில் படையாட்சி செங்குந்தர் நிலைப்படை என்று ஒரு பக்கத்திலும் , இன்னொரு பக்கத்தில் பிற்காலத்தில் வந்து நிலைப்படையில் சேர்ந்தவர் வன்னியர் செங்குந்தர் என்றும் இருக்கிறது ..வன்னியர் படையாட்சி வேறு வேறு என்றால் சரி , ரெண்டு செங்குந்தர் எப்படி வந்தது ? கோலி பறையர் எப்படி போர் செய்தவர் ஆகின்றனர் ? வெள்ளாளர் களில் பல பிரிவுகள் உண்டு , கார்காத்த வெள்ளாளர் , சைவ வெள்ளாளர்கள் நாகை பகுதிகளில் உண்டு . இவர்கள் பல கோயில்களில் உரிமை பெற்று இருக்கின்றனர். சோழர்களின் இன்னொரு தலைநகரமான சீர்காழியில் (இது சங்க காலத்தில் கழுமலம் என்று அழைக்கப்பட்டது ) தோணியப்பர் சிவன் கோயிலில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். (அதைபோல இந்த கோவிலில் தேவர், வன்னியர் சாதிகளில் மண்டகப்படியும் உண்டு(இவைகள் எப்போது வந்தது என்று தெரியவில்லை) எனவே வெள்ளாளர் தான் வேளிர்கள் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் ஐராவதம் மகாதேவன் முதற்கொண்டு சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள் . அது உண்மையா ? தெரியவில்லை .
ஒருவேளை அரச குலம் என்பது தனிக்குலமா ? இது மிக முக்கியமான ஐயம். ஏன் என்றால் பெரும் சாதிகள் குறுநில மன்னர்களாக இருக்க வேறு ஒரு சிறுபான்மை இனம் இவர்களை அரவணைத்து பெரும் அரசை தோற்று வித்து இருக்கலாம் . இன்றைய அரசியல் சூழல் கூட அப்படித்தான் இருக்கிறது என்பதையும் நிராகரிக்க முடியாது .
எது எப்படி இருப்பினும் பள்ளர்கள் மனன்ர் சமூகம் அல்ல , ஏன் அபப்டி சொல்கிறேன் ? ஒருமுறை நக்கீரனில் சோழன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று போட்டு இருந்தார்கள் . நானும் அதை படித்துவிட்டு நிறைய பேரிடம் சொல்லிவிட்டேன் . ஆனால் அது இல்லை என்பது எனக்கு உறுதியாகிவிட்டது .

காரணம் ஒரு அரச குலம் என்றால் வறுமையில் இருந்தாலும், அவர்கள் முன்பு சமூகத்தில் எந்த நிலையில் இருந்தனர்  அவர்கள் மரபணு காட்டி கொடுத்துவிடும். உயர் சாதிகளாக இருந்தால் அவர்கள் மாற்று சாதிகளுடனும் திருமணம் செய்யும் தகுதி பெற்று இருப்பர், ஒதுக்கி வைக்கப்பட்ட சாதி என்றால்  அங்கு அனேகமாக பெண் எடுத்தல் , பெண் கொடுத்தல் போன்றவற்றை மற்ற சாதிகள் செய்யாது . இதில் வன்னியரை பற்றி பார்த்தல்  உயர் சாதியாக அவர்கள் இருந்ததை மரபியலாளர்கள் ஒத்து  கொள்கின்றனர், மாற்று சாதிகளின் ஜீன் புலோ அதிகமாக இருக்கிறது. ஆனால் பள்ளர் பறைய வகுபாரில் மாற்று சாதிகளின் ஜீன்களே அதிகம் வரவில்லை. நீண்ட நெடுங்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் . அரச குடியாக இருந்தால் இப்படி இருக்க வாய்ப்பே இல்லை . தங்களை தாங்களே ஒதுக்கி வைத்துகொண்டு ஆண்ட அரசர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை        

வலங்கை இடங்கை சாதிமுறைக் கேடுகள்-கீற்று
பண்டைய நம் தமிழகத்தில் சாதி, குலம், வருணம் என்பன போன்ற சொற்கள் தமிழ் மொழியில் இல்லாமையால் அவை தமிழ்நாட்டிலும் இருந்ததில்லை என்பது வெள்ளிடை மலை. இடைக்காலத்தில்தான் பார்ப்பனர் தமிழர் களிடையே நால்வகைச் சாதியினை நாட்டினர். பின்பு நான்கினை நாற்பதாக்கி அதன்பின் நாலாயிரமாக வளர்த்துவிட்டனர். இப்பார்ப்பனர்கள் இத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழர்களிடையே ஏற்றத் தாழ்வினைக் கற்பித்தும் ஒரு சாதியினரைப் பிரிதோர் சாதியா ரோடு மோதவிட்டும் வேடிக்கை பார்த்ததோடு அல்லாமல் அதனால் பலனும் அனுபவித்து வந்துள்ளனர். இவற்றில் ஒன்றுதான் “வலங்கை இடங்கை” சாதி பாகுபாடுகளும் அதன் காரணமாக இவ்விரு சாதிக் குழுவினர்களுக்குள்ளும் ஏற்பட்ட சண்டைகளும் ஆகும்.

இந்தப் பிரிவினை எப்போது ஏற்பட்டது? எவ்வாறு தோன்றின? என்பவைகள் பற்றி திட்ட வட்டமாகக் கூறுவதற்கு இல்லை. ஆனால் இந்தப் பாகுபாடுகள் தமிழகத்தில் இருந்து இருக்கின்றன என்பது மட்டும் கல்வெட்டுக்களாலும், செப்பேடுகளாலும், சில இலக்கியச் செய்யுள்களாலும், ஏன்? ஆங்கிலேயர்களின் குறிப்புக்களாலும் அவர்கள் கால நீதிமன்றத் தீர்ப்புகளாலும் அறிகின்றோம். இவற்றின் பெயர்க் காரணம் பற்றி கூறப்படும்  வரலாற்றினை சிறிது காண்போம். கரிகாலச் சோழனது ஆட்சியின்போது பல்வேறு சாதிகளைக் கொண்ட இரு கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்கள் தங்கள் குறைகளை முறையிட்டுக் கொள்ள மன்னன் கரிகாலச் சோழன் அவைக்குச் சென்றார்களாம். அப்படிச் சென்றவர்களில் மன்னனுக்கு வலக்கைப் பக்கம் நின்று முறையிட்டவர்கள் “வலங்கை” சாதியார் என்றும் இடக்கை பக்கம் நின்று முறையிட்டவர்கள் “இடங்கை”யினார் என்றும் கரிகாலனால் அழைக்கப் பட்டார்களாம். அதில் இருந்து இவ்விரு கட்சியினர்களைச் சார்ந்த சாதியினர்களுக்கும் இப்பெயர்களே நிலைக்கலாயின என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், இது சங்க காலத்து கரிகாலன் காலத்தில் நடந்திருக்க முடியாது. இதற்குத் தக்க ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படவே இல்லை. ஆனால் இந்த வலங்கை - இடங்கை சாதிப் பகுப்பு முறைகள் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில்தான் தோன்றின என்பதற்கு வேண்டுமானால் தக்க ஆதாரங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் முன்நாளில் சலபநாயகன் என்னும் பார்ப்பனத் தலைவன் தலைமையில் வலங்கை சாதியார் 98 பிரிவினர்களும், இடங்கை சாதியார் சில பிரிவினர்களும் தங்களுக்குள் கட்சி உண்டாகியதால், தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டனர் என்று ஓர்சாசனம் தெரிவிக்கின்றது. இந்த வலங்கை இடங்கை பிரிவின் காரணமாக பார்ப்பனர்களுக்குப் பகையாக கம்மாளர்களும், கோமுட்டிகளுக்குப் பகையாக பேரிச் செட்டிகளும்,  “பறையர்களுக்குப் பகையாக பள்ளர்”களும் இப்படிப் பல வகுப்பினர்களும்  ஒருவருக்கொருவர் பகையாளர்கள் ஆயினர்.

விழாக் காலங்களில் வலங்கை சாதியார்களுக்கு மாதிலர் என்னும் தீண்டப்படாத இடங்கை சாதியார்களுக்கு மாதிகர் என்னும் அருந்ததியனரும் வாத்தியங்கள் வாசிக்க வேண்டும் என்றிருந்திருக்கின்றது. பிற்கால சோழராட்சிக் காலங்களில் ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றூர்களிலும் கூட வலங்கை, இடங்கையார்கள் வசிப்பதற்கு வீதிகள் எல்லாம் தனித்தனியே இருந்திருக்கின்றன. ஒரு பிரிவினர் வசிக்கும் வீதியில் வேறு பிரிவினர் வசிப்பதில்லை. சுபகாரியங்களில் ஆகட்டும் அல்லது துக்கக் காரியங்களில் ஆகட்டும் ஒரு பிரிவினர் வசிக்கும் வீதி வழியே மற்றொரு பிரிவினர் ஊர்வலம் வருவதோ, பிணம் தூக்கிச் செல்வதோ கிடையாது. இரு பிரிவினர்களுக்கும் பொதுவான வீதிகளில் வேண்டுமானால் போகலாம். மற்றும் கோயில் சாமிகளுக்கு நடத்தப்படும் விழாக்களும்கூட அந்த அந்த பிரிவினர்கள் தெருக்களில் மட்டுமே நடக்கும்.

இந்த வலங்கை இடங்கை கட்சிகளுக்கு தாசிகள், பணி செய்வோர் முதலானோர்களும் தனித்தனியே இருந்திருக்கின்றனர். வலங்கைதாசிகள் இடங்கை சாதியார்களுடைய கோயில்களுக்கோ, அல்லது இடங்கையார்கள் வீடுகளில் நடக்கும் திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில் நாட்டியம் ஆடுவதற்கோ செல்வதில்லை. அதுபோலவே இடங்கை தாசிகள் வலங்கை யார்களின் கோயில் விழாக்களுக்கோ செல்ல மாட்டார்கள். அதுபோலவே வலங்கை பணி செய்வோர் இடங்கையார்களுக்கு நேரில் போய் சாவு சொல்வதில்லை. அப்படி வலங்கையார் இடங்கையார்களுக்கு சாவு முதலியன தெரிவிக்க வேண்டு மானால் இடங்கைப் பணி செய்வோரைக் கொண்டு தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், இடங்கை யார்கள் தம் பணியாளர்களைக் கொண்டு வலங்கை யார்களுக்கு தெரிவிக்கலாம் என்று இருந்தது.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் இந்தப் பிரிவுகளினால் நாட்டு மக்களிடையே பல குழப்பங்களும், பூசல்களும் ஏற்பட்டு அரசர்களாலும், ஊர் சபையினர்களாலும் ஏராளமான வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வலங்கை இடங்கை பிரிவின் காரணமாக நாட்டில் பல்வேறு சாதி மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து அவதியுற்று இருக்கின்றனர். பெரும்பாலும் பிற்காலச் சோழர்களும், நாயக்க மன்னர்களும், வைதீக மனப்பான்மையுடையவர் களாகவும், பார்ப்பனர்கள் தனி உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர் களாகவும் இருந்திருக்கின்றனர். சாதிகள் வகுப்புகள் என்பவைகள் தர்ம நியாயமானது என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக வேரூன்றி இருந்தது. ஆகவே அந்த அந்த சாதியார்கள் அவர் அவர்களுக்கு உரிய விதிகளுக்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்தும் உடையவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்.

இந்த மன்னர்கள் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை விதிக்காது குலம், பிரிவு, அந்தஸ்து இவற்றிற்கு ஏற்றவாறு தண்டனை விதித்து இருக்கின்றார்கள். குற்றவாளியானவன் உயர்சாதிக்காரனாகவோ அல்லது செல்வவானாகவோ இருந்து விட்டால் விசாரித்தோம் என்று பெயரளவில் மட்டும் விசாரித்துவிட்டு லேசான தண்டனையோ, அபராதமோ விதித்து விடுவார்கள். இப்படி இவர்கள் குலம், கோத்திரம், சாதி ஆச்சாரத்திற்கு ஏற்றவாறு தண்டனை வழங்குங்காலை வேதப்பார்ப்பனர்கள் சொற்படியும், அவர்களின் ஆலோசனைப் படியும், வருணாச்சிரம தர்மத்திற்கு மாறுபடாலும் தீர்ப்புகள் வழங்கி இருக்கின்றனர்.

மற்றும் கோயில்களில் விழாக் காலங்களில் எந்த எந்த சாதியார்களுக்கு முதல் மரியாதை, எந்த எந்த வகுப்பினர்களுக்கு இரண்டாவது மரியாதை என்பது பற்றியும், யார் யார் எந்த எந்த இடங்களில் இருந்து எந்த எந்த நேரங்களில் கடவுளை வணங்க வேண்டும் என்பது குறித்தும் எந்த எந்த சாதியார்கள் முறையே எந்த எந்த வாகனங்களிலும், பல்லக்குகளிலும் ஏறிச் செல்ல தகுதி உடையவர்கள் என்பது குறித்தும், எந்த எந்த வழக்க ஒழுக்கங்களைக் கையாள வேண்டும் என்பது குறித்தும், அடிக்கடி ஆட்சேபணைகள் பூசல்கள் ஏற்படும் போது அரசர்கள் பார்ப்பனப் பண்டிதர்களைக் கொண்டே வருணாச்சிரம முறைப்படி தீர்ப்புகள் வழங்கி இருக்கின்றார்கள்.

கம்மாளர்கள் தங்கள் வீட்டிற்கு சாந்து இட்டுக் கட்டிக் கொள்ளுதல், இரட்டை நிலை வைத்துக் கட்டிக் கொள்ளுதல், நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதுதல், வெளியில் செல்லும் போது காலில் செருப்பணிந்து செல்லுதல் ஆகிய உரிமைகள் கூட அற்றவர்களாக முன்பு இருந்திருக் கின்றனர். ஆனால் பிற்காலத்தில் கொன்னேறி மெய் கொண்டான் என்ற சோழன் தென்கொங்கு நாடு, காஞ்சிக்கோயில் நாடு, வெங்கால நாடு,தலையூர் நாடு முதலிய ஏழு நாடுகளில் வாழும் கம்மாளர்களுக்கு மட்டும் மேற்கண்ட உரிமைகள் பெற அனுமதி அளித்தார்கள். இது பற்றி கொங்கு நாட்டில் பேரூர், கரூர், பாரியூர், மொடக்கூர், குடிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் இவ்வுரிமைகள் கல்வெட்டுகளாக வெட்டப்பட்டு உள்ளன. கி.பி.1623 இல் பிறப்பிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் பிரமதேய சாசனத்தில் கம்மாள சாதியார்கள் தங்கள் கிளை வகுப்புக்களுக்குள் கலப்பு மணம் செய்து கொள்ளுதல் கூடாது என விதிக்கப்பட்டுள்ளது.

பட்டு நூல் வகுப்பினர்கள் உபகர்மங்கள் செய்து கொள்ளும் உரிமை இல்லாதவர்களாகவும் இருந்து இருக்கின்றனர். பிறகு இவர்கள் இராணி மங்கம்மாள் காலத்தில் அவரிடம் முறையிட்டு மேற்படி உரிமைகளுக்குச் சாசனம் பெற்றனர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் முற் பகுதியில் நாடார் இனப் பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களான பள்ளர், பரதவர் குலப் பெண்களைப்போல் மார்பினை மூடாது இருப்பது போலவே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

திருவாங்கூர் மகாராஜாவானவர் இவர்கள் (நாடார் குலப்பெண்கள்) செம்படவர்கள் பெண்கள் மார்பினை மூடுவது போல உடை தரிக்கலாமேயன்றி உயர்சாதிப் பெண்கள் தரிப்பது போல் தரிக்கலாகாது என்று கட்டளை இட்டு இருக்கின்றார். ஆனால், கி.பி. 1859 இல் ஆங்கிலேயரான சார்லஸ் டிரிவிலியன் என்பார் இவர்களும் மார்பு மீது துணி அணிந்து கொள்ளலாம் என்று உத்தரவு இட்டிருக்கின்றார். மற்றும் வெள்ளக் கோயில், தென்காசி நீதிமன்ற தீர்ப்புக்கள் மூலம் நாடார் சமூகம் எத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டு இருந்தன என்பதுதெற்றென விளங்குகின்றது. கி.பி.1809 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் தேதி செங்கற்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜார்ஜ் கோல்மென் துரை அவர்கள் அதற்கு முன் இவ்விரு வகுப்பினர்களும் விழாக் காலங்களிலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஊர்வலம் வரும்போது தரித்துக் கொள்ளும் விருதுகள் மற்றைய அடையாளங்கள் பற்றி ஏற்பட்ட சச்சரவுகளைத் தீர்த்து இறுதியாக இன்ன இன்னாருக்கு இன்ன இன்னபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தம் தீர்ப்பில் கூறியுள்ளார். இது பற்றி விரிப்பின் பெருகும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன். இந்த வலங்கை, இடங்கைச் சண்டை காரணமாக பல்வேறு சாதியினர்க்குள்ளும் பூசல்களும், மனக்கசப்பும் பிற்காலத்தில் மிகுதியாக வளரலாயின. ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பாரது சாதிப் பெயரினைச் சொல்லி ஏளனமாகத் திட்டிக் கொள்ளலாயினர். இன்றும் நம் தமிழகத்தில் ஒவ்வொரு சாதியினைப் பற்றியும் கூறப்படும் வசவு மொழிகள் எல்லாம் கூட மேற்கூறிய மனக்கசப்புகள் காரணமாகத் தோன்றியவைகளேயாகும்.

புலவர் கோ.இமயவரம்பன்

Labels:

நிவந்தத்தின் வகை

நிவந்தத்தின் வகை
இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருமொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இருகுருணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்கு திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராசராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம்  ஏற்பட்டால், அவற்றைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் இரு கலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக்கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும்,அதற்கு வரிக்கு உரிய பணத்தையும்  தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச்சதுர்வேதிமங்கலத்துச் சபையார், கண்ணன்
ஆருரானிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல் (நிலத்தை விற்றுக் கொடுதது
அத்தர்மத்தை நடததுவதாய் இசைந்தனர் 

நல்ல ஊதியம் கொடுத்துள்ளார் எனக்குத் தெரிந்து 1962 வாக்கில் ஒரு நாள் முழுதும் வேலை செய்பவர்களுக்கு ஒரு மரக்கால் நெல் மட்டுமே கொடுத்தனர் இது இரட்டிப்பாக உள்ளது அந்த காலத்திலேயே பரவாயில்லை மன்னன் தொழிளார்களுக்கு ஊதியத்தை வாரிவழங்கியுள்ளார் .

Labels:

உத்திர மேரூர் கல்வெட்டுக்கள் (முதலாம் பராந்தகன் )

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம் : உத்திரமேரூர், காஞ்சிபுரம்வட்டம், செங்கல்பட்டுமாவட்டம்
அரசன் : முதலாம் பராந்தகன் (பொ.ஆ 907 - 856)
ஆட்சியாண்டு : 12 மற்றும் 14
பொ. ஆ. : பொ.ஆ. 919 , 923
மொழி : தமிழ்
எழுத்து : 10ஆம் நூற்றாண்டு தமிழும் கிரந்தமும்
உத்திரமேரூர் ஊர்ச் சிறப்பு :
வரலாற்றுச்சிறப்புமிக்க ஊரான உத்திரமேரூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் நான்மறையுணர்ந்த வேதியர்கள் நிறைந்து விளங்கியதால் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் என்றும், உத்திரமேரூர் என்றும் வழங்கப்பட்டது. உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலப் பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.
மற்ற பெயர்கள் :
உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம், ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை, உத்திரமேலூர், பாண்டவவனம், பஞ்சவரத ஷேத்திரம், இவ்வாறாகப் பலவிதமாக அழைக்கப்பட்டுள்ளன.
உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுக்கள் :
உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் அங்கத்தினர் தேர்வு செய்யப்பட்டது போன்ற சிறப்புமிக்க ஊராட்சிமுறையைப் பற்றி 2 கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் ஒன்று முதலாம் பராந்தகனின் 12 ஆம் ஆட்சியையும் (கி.பி917), மற்றொன்று 14ஆம் ஆட்சியாண்டையும் சேர்ந்தது (கி.பி919). உத்திரமேரூர் இரண்டாம் நந்திவர்மனது காலத்திலேயே முதன்முதலாக உத்திரமேரூர் (கி.பி.750) சதுர்வேதிமங்கலமாக உருவாக்கப்பட்டது. 1200 வேத வைஷ்ணவ பிராமணர்களுக்குத் (சதுர்வேதிமங்கலமாக) தானமாக வழங்கப்பட்ட நிலமாகும். எனவே ஆரம்பமுதலே இது ஒரு பிராமண குடியிருப்பாக திகழ்ந்துள்ளது.
குறிப்பு :
குடவோலை முறைப் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாம் கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுப் பாடம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ (;) மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது (;) உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை
2. யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த
3. பரிசாவது ;) குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம்
4. எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி
5. ருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு ...........
கல்வெட்டுச் செய்தி :
மதுரையைப் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி917), 14ஆம் ஆட்சியாண்டிலும் (கி.பி. 919) உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது. அவ்வமைப்பின்படி அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம் தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன அவர்களது பதவிக்காலம் போன்றவை இக்கல்வெட்டில் விளக்கப்பெற்றுள்ளன. உத்திரமேரூர் சபையில் 30 குடும்புகளும், 12 சேரிகளும் உள்ளன. எனவே அவை அனைத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் முறையில் தேர்தலானது நடத்தப்படவேண்டும். அவ்விதம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வுக்குப் பின் நடைபெறவேண்டிய நடைமுறைகள் ஆகியவை கல்வெட்டுக்களில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில விதிமுறைகளின்படி ஊராட்சித் தேர்வு நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் 14 ஆம் ஆண்டு மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இடைப்பட்ட ஆண்டில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கும் போல் தோணுகிறது. மேலும், உத்திரமேரூர் ஊராட்சித் தேர்தலை நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்கள், இது மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்று விளக்குகின்றனர். உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் எனும் பெயரிலிருந்தே அது ஒரு பிராமணக்குடியிருப்பு என்பதைத் தெளிவாக்குகின்றது.

மேலும் இக்கல்வெட்டில் உறுப்பினர்களின் தகுதிகள் குறிப்பிடப்படும் பொழுது, வேத, சாஸ்திரத்தில் வல்லுனர்கள் மட்டுமே இதில் உறுப்பினராகத் தகுதி படைத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், இது போன்ற தேர்தல் முறை (குடவோலை முறையிலான ஊராட்சித்தேர்தல்) வேறேங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. பாண்டிய மன்னன் மாறன் சடையனின் காலத்தைச்சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்)கல்வெட்டும் பிரம்மதேய ஊர்களுக்கான சபைத் தேர்வுமுறை பற்றிப் பேசுகிறது. நடனகாசிநாதன், ஒட்டு மொத்தமாக கல்வெட்டுச்செய்திகள் பற்றிக் கூறுகையில் தமிழ்நாடு முழுவதுமே குடவோலை முறையிலான ஊராட்சித்தேர்தலே நடைபெற்றதாகக் கூறுகின்றார். எனவே இதை மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்பதற்குப் பதிலாக பிராமண ஊர்களின் சபைத்தேர்தல் என உரைப்பது சாலச்சிறந்ததாகும். இனி கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம். இதில் வாரியங்கள் ஸம்வத்ஸர வாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரவாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பணி என்ன? என்பது நேரடியாக்க் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஆய்வாளர்கள் ஸம்வத்ஸர வாரியம் என்பது - ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மேற்பார்வைக்குழு என்றும், தோட்டவாரியம் - தோட்டப்பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரிவாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (1/5 ஐந்தில் ஒரு பங்கு நிலவருவாய் பெறும் குழு ) என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சபை உறுப்பினராக்க் கோரப்படும் தகுதிகள்(முதல் கல்வெட்டு) :
1. 1/4 வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30மேல் 60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்
5. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
சபை உறுப்பினராக்க் கோரப்படும் தகுதிகள்(இரண்டாம் கல்வெட்டு) :
1. கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக் கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.
2. அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.
3. வயது வரம்பு முந்தைய கல்வெட்டில் 30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள் என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. மந்தர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவன்.
5. 1/8 நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
7. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
8. ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை); தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரிமக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இது போன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.
9. ஆகமங்களுக்கு எதிராக (அகமிஆகமான) பஞ்சமா பாதஹங்கள் செய்தார், கொள்கையை மீறுபவன் (ஸம்ஸவர்க்கப்பதிதரை), பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள் அதற்கான பரிஹாரகளைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்களை உறுப்பினராகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக்குற்றஞ்செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர் (சஹசியர்), அடுத்தவர் பொருளை அபஹரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாய் இருப்போர் (கிராம கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.
10. கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோராவர். இதன் மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
தேர்தல் முறை: Mode of Election :
இவ்விதம் தகுதிஉடைய உறுப்பினர்களின் பெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு குடும்பும் ஒலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதன் வாயைக்கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். தேர்தல் நாள் அன்று மஹாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்கவேண்டும். ஊரில் உள்ள நம்பிமார்களும் (பூசாரிகள்) இருக்கவேண்டும். அதில் ஒருவர் உள் மண்டபத்தில் இருக்கவேண்டும். கூடி நிற்கும் நம்பிமார்களில் வயோதிகராய் உள்ள ஒருவர் ஒரு குடும்பிலிருந்து ஓலை இடப்பட்டுள்ள ஒரு குடத்தைத் தூக்கி எல்லோரும் நன்கு காணுமாறு மக்களிடம் காட்டுவார். அவ்விதம் காட்டிய பின் அக்குடத்திலிருக்கும் ஓலைகளை வேறொரு குடத்திலிட்டு நன்றாக்க் கலக்குவர். பின் ஏதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு ஒரே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச்செய்வர். எடுத்த ஓலையை மத்யஸ்தன் தனது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையில் வாங்கவேண்டும். வாங்கிய ஓலையை அவர் வாசிக்கவேண்டும். வாசித்த பிறகு உள் மண்டபத்திலிருக்கும் நம்பிமாரும் அதை வாசிப்பர். அவ்விதம் வாசித்த பெயரைப் பின்னர் எழுதிக்கொள்வர். இவ்விதமே 30 குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர்.இப்படி உள்ளவர்களை தேர்ந்தெடுத்தால் தவறு நடக்காமல் இருக்கும்

Labels:

ஜல்லிக்கட்டுக்கு யாருமே கேட்காமலேயேஜல்லிக் கட்டுக்கு யாருமே கேட்காமலேயே நீதி மன்றம் தடை விதித்த உண்மை தற்பொழுதுதான் பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எல்லோரும் இது ஏதோ பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் போன்ற அமைப்புகள் போட்ட மனுக்களால் வந்த வினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் யாருமே, எந்த தனி மனிதரோ அல்லது அமைப்புகளோ கேட்காமலேயே நீதிமன்றம் ஜல்லிக் கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. இந்த தடையை விதித்தது சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை. தடை விதித்தவர் நீதிபதி ஆர்.பானுமதி. இவர் தற்போது உச்ச நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்!
நடந்தது இதுதான். மார்ச் 29, 2006 ல் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கே.முனுசாமி தேவர் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். இவரது கோரிக்கை என்னவென்றால் ராமநாதபுரம் தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான். இந்த ரிட் மனு நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வருகிறது. அன்று முனுசாமி தேவருக்காக ஆஜரான வழக்கறிஞர் எல்.ஷாஜி செலான் இவ்வாறு கூறுகிறார்:
"நான் மிகவும் சாதாரணமாக, பதற்றமின்றித்தான் வாதாட ஆரம்பித்தேன். ஏனெனில் இதற்கு முன்பு பல மாவட்டங்களிலும் ரேக்ளா ரேஸ் பந்தயத்தை நடத்துவதற்கு பல நீதிபதிகள் வெவ்வேறு வழக்குகளில் அனுமதி கொடுத்திருந்தார்கள். ஆனால் திடீரென்று நீதிபதி இவ்வாறு பேச ஆரம்பித்தார்: ரேக்ளா ரேஸ் பந்தயங்களை நாம் எப்படி அனுமதிக்கலாம்? இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தப் படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திற்கு எதிரானது இந்தப் போட்டிகள்,'' என்று தெரிவித்ததாகக் கூறும் ஷாஜி அடுத்து நடந்ததை சொல்லுகிறார்;
"உணவு இடைவேளை வந்தது. பின்னர் நீதிமன்றம் கூடியது. யாருமே கேட்காமலேயே, ஜல்லிக்கட்டு பற்றி எந்த பிரஸ்தாபமும் இல்லாமலேயே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக நீதிபதி திடீரென்று அறிவித்தார். என்னுடைய மனுவில் நான் குறிப்பிட்டிருந்த எதிர் மனு தாரர்கள் அதாவது அரசு தரப்பு உள்ளிட்டவற்றின் கருத்தை நீதிபதி கேட்காமலேயே திடீரென்று இந்த தீர்ப்பை அளித்தார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்,'' என்று கூறும் ஷாஜி அன்றைய தினம் எதையும் கேட்கும் மன நிலையில் நீதிபதி பானுமதி இல்லையென்றும் கூறுகிறார்.
"நான் எனக்கு ஆதரவாக நீதிபதி எஃப். எம். இப்ராஹீம் கலிஃபுல்லா வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டினேன். பிள்ளையார்நத்தம் தூத்துக்குடியில் ஆகஸ்ட் 13, 2004ல் ரேக்ளா ரேஸ் நடத்த நீதிபதி கலிஃபுல்லா அனுமதி வழங்கியிருந்தார். இவரும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள நீதிபதி பானுமதி மறுத்து விட்டார். சட்டங்கள் என்பவை காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கடந்த கால சட்டங்கள் தற்போதய நிலவரத்துக்கு பொருந்தாது. மேலும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்ச்சி மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது,'' என்று கூறி விட்டார் நீதிபதி பானுமதி என்கிறார் ஷாஜி.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துத்தான் தமிழக அரசு டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீட்டுக்கு 2006 பிற்பகுதியில் போனது. அப்போதுதான் இந்த மேல் முறையீட்டில் விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் வந்து சேர்ந்து கொள்ளுகின்றன. சில பாதுகாப்பு அம்சங்களுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உயர்நீதி மன்றம் அனுமதி வழங்குகிறது. பின்னர் 2009 ல் அன்றைய திமுக அரசு இதற்கான சட்டம் ஒன்றினைக் கொண்டு வருகிறது. 2011 ல் காட்சிப்படுத்தப்படுத்தப்படக் கூடாத விலங்குகள் பட்டியிலில் காளையை அன்றைய காங்கிரஸ் அரசு சேர்த்துவிடுகிறது. ஆனால் 2014 மே மாதம் 7 ம் தேதி நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திர கோஸ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திமுக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைபடுத்தும் சட்டத்தை ரத்து செய்து விடுகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடையும் விதித்து தீர்ப்பு வழங்கி விடுகிறது.
அந்தாண்டு இறுதியில் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு ஒரு விருது வழங்குகிறது. "ஆம். 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு ஆண்டின் சிறந்த மனிதர் அதாவது Man of the year 2014 என்ற விருதினை வழங்குகிறது. விலங்குகள் நலனில் அதிக அக்கறை காட்டியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது'' என்கிறார் வழக்கறிஞர் ஷாஜி.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா மற்றும் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டிருந்தனர். இதில் சிலரது சார்பாக அன்றைய காலகட்டத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் தற்போதய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி. அதாவது தற்போதய மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு கூடாது, அதற்கு தடை வேண்டும் என்று கேட்டு வாதாடினார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஆகவே அந்த முகுல் ரோத்தகி எப்படி தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் சார்பாக ஆஜராகி வாதாடப் போகிறார்?
"ஆம். இதுவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த ஒரு வழக்கறிஞர், பின்னர் அதற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து வாதாட முடியாதுதான். அப்படியென்றால் வேறு மூத்த வழக்கறிஞர்களை வைத்து மத்திய அரசு, விரைவில் கொண்டு வரப்படவிருக்கும் அவசர சட்டத்தைக் காப்பாற்ற வாதாட வேண்டியிருக்கும். மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து நிச்சயம் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்துக்குப் போகும். அப்போது மத்திய அரசும் நீதிமன்றத்தில் வந்து நிற்கும். அந்த கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை ஆதரித்துத் தான் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாட வேண்டியிருக்கும்'' என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.
"கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கே அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்று திரும்ப திரும்ப முகுல் ரோத்தகி கூறுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை,'' என்று நமட்டுச் சிரிப்புடன் மேலும் கூறுகிறார் அந்த வழக்கறிஞர்


இது தெரியாமல் பல லட்சமக்கள் போராட்டம் தேவையா?
எப்படியோ ஒரு ஒற்றுமையை ஏற்படுத்திவிடடார்கள்


ஏறு தலுவதல் தொடறும்

Labels: