அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

விஜயாலய சோழனின் பட்டப்பெயர் கோநேரின்மை கொண்டான்


விஜயாலய சோழனின் பட்டப்பெயர் கோநேரின்மை கொண்டான்
புதிய பரம்பரையின் முதல் அரசனாகவே இவனையே எல்லாச் சரித்திரங்களும் கூறுகின்றன. திருவாஙலங்காட்டுச்செப்பேடுகளிலே இவன் தன்னுடைய இன்பத்துக்காகவே ஏற்பட்டதோ வென்னும்படி தஞ்சாவூரைக் கைக்கொண்டு அங்கேநிசும்பசூதினி என்னும் பெயரால் துர்க்கைக்கு ஓர் ஆலயம் எடுப்பித்தான் என்று கூப்படுகிறது. (சுலோகங்கள்45,46,)
,அவன் எவ்விதம் தஞ்சையை அடைந்தான் என்பதைப்பற்றிய விவரமே கிடைக்க வில்லை.
(தஞ்சாவூர் நகரத்தை விஜயாலயனே நிர்மாணித்தான் என்று கன்யாகுமரிக் கல்வெட்டு கூறுகிறது. (திருவாங்கூர் ஆர்க்கியலாஜிகல் ஸீரிஸ், வல்யூம் III பக்கம் 142,சுலோகம் 54). இது கவிஞரின் புனைந்துரையே. அந்தக் காலத்துக்கு முன்னரே முத்தரையர் அந்நகரிலிருந்து வந்தனர் என்பதும், அவர்கள் தஞ்சைக்கோன், தஞ்சை நற்புகழாளன் போன்ற விருதுகளைத்
தாங்கியிருந்தனர் என்பதும் செந்தலைக் கல்வெட்டுக்களால் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. (எ.பி.இந்தி., வால்யூம் XIII, பக்கம் 134 முதல்.)மூவருலாவும் சங்கர சோழனுலாவும் அம்மன்னன் தன்னுடைய மார்பில் தொண்ணூற்றாறு புண் கொண்டவன் என்று புகழ்ந்து கூறுகின்றன. "ஏன்கொண்ட தொண்ணூற்றின்மேலுமிரு மூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனும்"  (விக்கிரம சோழன் உலா - கண்ணி 15)
"சீறுஞ் செருவிற் றிஐமார்பு தொண்ணூறும்
ஆறும் படுதழும்பின் ஆர்த்தோன்" (குலோத்துங்க சோழன் உலா - கண்ணி 21)

"தொழும்புடைய வாகத்துக்த் தொண்ணூறு மாறுந்
தழும்புடைய சண்டப்ர சண்டன்" (இராசராச சோழன் உலா - கண்ணி 19)

"புண்ணூறு தன்றிரு முனியிற் பூணாகத்
தொண்ணூறு மாறுஞ் சுமந்தோனும் " (சங்கர சோழன் உலா - கண்ணி 17)

மேலே கூறியவற்றைத் தவிர, அம்மமனனைப் பற்றி வேறு விவரம் ஏதும் தெரியவில்லை. எனினும் அவன் உண்மையில் அரசு புரிந்திருக்கிறான் என்பது திருச்சிராப்பள்ளித் தாலூகாவில் உள்ள திருநெழுங்களத்திலிருந்து கிடைக்கும் ஒரு கல்வெட்டால் தெரிகிறது. திரிபுவன சக்கரவர்த்திகள் கோநேரின்மை கொண்டான் ஒருவனுடைய சாசனம் அது. பரகேசரி வர்மரான விஜயாலய சோழ தேவருடைய ஒரு பழைய சாசன்படி நிலம் தானம் அளிக்கப்பெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது. (1909 - ஆம் ஆண்டு 673 நெ.சாசனம்), அன்றி வட ஆர்க்காடு ஜில்லாவில் உள்ள கீழப்புத்துரிலிருந்து கிடைக்கும் விக்கிரம சோழனுடைய ஐந்தாம் ஆண்டு கொண்ட கல்வெட்டு ஒன்று விஜயாலய சோழனுடைய நான்காம் ஆண்டுக் கல்வெட்டு ஓன்றைக் குறிப்பிடுகிறது. (1915 - ஆம் ஆண்டு 164 நெ. சாசனம்) தஞ்சைப் பெரிய கோயிலிலே காணும் முதலாம் இராஜராஜனுடைய கல்வெட்டுக்களில் அந்தக் கோயிலில் ஊழியம் பார்ப்பதற்காக என்த எந்த ஊரார் அந்தக் கோயிலில் ஊழியம் பார்ப்பதற்காக எந்த எந்த ஊரார் மாணிகளை அனுப்பவேண்டும் என்று குறிக்கும் இடத்தில் பிரம்மதேயம் விஜயாலய சதுர்வேதிமங்கலத்தின் பெயரும் அத்தகைய ஊர்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. (தெ.இ.சாசனங்கள்,இரண்டாம் வல்யூம், நெ.69) பழைய புதுக்கோட்டை ராஜ்யத்தில் நார்த்தாமலை என்னுமிடத்திலிருந்து கிடைக்கும் பிற்காலத்துப் பாண்டியர் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு
ஒன்று விஜயாலய சோழீச்வரம் என்றும் ஆலயத்தின் பெயரைக் குறிக்கிறது.
இவற்றால் விஜயாலயன் நாட்டிலே முறையாக அரசு செலுத்தியிருக்கிறான் என்னும் விஷயம் நன்கு வெளியாகும்.
                பல்லவர்களுடைய ஆட்சியின் கடைசிக் காலத்திலே அவர்களுடைய சாசனங்கள் சிலவற்றில் சோழர்களுடைய பெயர் காணப்படுகிறது. திருப்பதிக்குப் பக்கத்தில் உள்ள திருச்சானூரிலிருந்து கடைக்கும் கல்வெட்டு ஒன்று (தெ.இ.சாசனங்கள், வல்யூம் XII,நெ.43.) தந்தி விக்கிரம வர்மனுடை ஐம்பத்தோரம் ஆண்டில் (சுமார் கி.பி.850) திருவேங்கடக் கோட்த்துத்
திருச்சோகினூரிலே திருவேங்கடத்துப் பெருமானடிகள் கோயிலில் நிருவிய திருஇளங்கோயில் பெருமானடிகளுக்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காகச் சோழ நாட்டுச் சோழனார் உலகப் பெருமானார் முப்பது கழஞ்சு பொன் அளிகத்த செய்தியைக்
குறிக்கிறது. மூன்றாம் நந்திவர்மனுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டில்சுமார் கி.பி.856) அளிக்கப்பெற்ற வேலூர்ப்பாளையம் செப்பேடுகள் யஜ்ஞ பட்டர் என்பார் எழுப்பிய சிவலயத்துக்குத் திருக்காட்டுப்பள்ளி என்னும் கிராமத்தைச் சோழ மகாராஜாகுமாரங்குசன் அளித்த செய்தியைத் தெரிவிப்பனவாகும்.  விஜயாலயன், குமாமரங்குசன் ஆகேிய இருவரும் ஒரே வமிசத்தைச்சேர்ததவர்களாக இருத்தல்கூடும் என்று சில சமயங்களில் நினைத்தது உண்டு. அவ்விதம் இருத்தற்கில்லை. அங்குசன் என்ற விகுதியுடன் முடியும் பெயர்களை வேங்கி நாட்டுச் கீழைச் சாளுக்கிய மன்னர்களே தரித்துவந்தனர்.
'ரேநாட்டுச் சோழர்கள்' எனப்படும் தெலுங்குச் சோழர்களில் பல்லிய சோழன் என்பான் குமாரங்குசன் என்ற  பெயரைத் தரித்திருக்கிறான் (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி, வால்யும் XV, பக்கம் 258) தங்களை வேங்கிச் சாளுக்கி யர்களுடை சிற்றரசர்கள் என்று குறிப்பதற்காகவே அவர்கள் அவ்விதம் தரித்துவந்தார் போலும். ஆகவே, விஜயாலயனையும் குமாராங்குசனையும்  ஒரே கிளையினராக் கொள்ளமுடியாது. விஜயாலயனைத் திருச்சானூர்க் கல்வெட்டில் கண்ட உலகப்பெருமானாராகவோ அவனுடை மகனாகவோ கொள்ளலாம் என்று எண்ணத் தோன்றுவது இயற்கையே, ஆனால், அவ்விதம் கொள்வதற்கு ஓர் ஆஷேபணையும் உண்டு. தஞ்சையிலிருந்து ஆண்ட சோழ மன்னர்களுடைய சாசனங்களிலே அவர்களுடைய வமிசாவளியைக் கூறுமிடத்துச் சங்க காலத்திலிருந்த தங்கள் மூதாதையருக்குப் பிறகு விஜயாலயனையே குல முதல்வனாகக் குறித்திருக்கிறார்கள். இவர்களுடை ராஜ பாரம்பரியத்தைக் கூறும் இலக்கிய நூல்களிலும் இதையேதான் காண்கிறோம். உலகப் பெருமாளுடைய பெயர் காணப்படவில்லை.  விஜயாலயனுடைய தந்தையாக உலகப்பெருமானார் இருப்பானாகில் வமிச பரம்பரையை நிச்சயம் அவனையே முதல்வனாக்கொண்டு ஆரம் பித்திருப்பர்.  விஜயாலயனுக்கு உலகப்பெருமானார் என்ற பெயர் இருந்ததாகவும் நமக்குத் தெரியவில்லை.
                தஞ்சாவூர் தாலுகா திருப்பழனத்திலிருந்து கிடைத்த ராஜகேசரி வர்மனுடைய இருப்தொன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, உலக்பெருமாள் விண்ணப்பத்தால் கோயல் ஊழியத்துக்ப் பன்னிருவர், கண்காடிட்கள் இருவர், நந்தவனக்குடிகள் இருவர் ஆகப் பதினாறு பேர்களுக்கும் காணிகாய அரசன் நிலம் அளித்த செய்தியைத் தெரிவிக்கிறது. தெ.இ.சாசனங்கள், வல்யூம் XIII, நெ.295). இந்தச் சாசனம் அளித்த அரசன் முதலாம் ஆதித்தியனே எனக் கொள்ளலாம். இதில் காணும் உலகப் பெருமாளுக்கும் திருச்சானூர்க் கல்வெட்டில் கண்ட உலகப் பெருமானாருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருத்தல்வேண்டும்
                மைசூர் ராஜ்யத்திலே பங்களூர் ஜில்லாவில் கூடலூர் என்னுமிடத்திலிருந்து அரைகுறையாகக் காணும் தமிழ்க் கலவெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. ஆரம்பமும் முடிவும் இல்லாமல் ஒரே வரி கொண்டதாக் காணப்படும் அது சோழ விஜயாலயனைக் குறிக்கிறது: அவனைப் '"பத்தினிப்பரா நாடன்(?) என்றும், வாள் வலிமிகுந்த கையை உடையவன் என்றும்,கூடலில் வசித்து  வந்தான்" என்றும் குறித்துச்சொல்கிறது. மைசூர் ஆர்க்கியலாஜிகல் அறிக்கை, 1909-ஆம் ஆண்டு பக்கம் 17, பாரா 68) சாசனம் கிடைத்திருக்கும் அளவைக்கொண்டு நாம் எதையும் நிச்சயமாகக் கூறமுடியாது. எனினும், இதனை ஆராய்நத மைசூர் புதையல் இலாகாத் தலைவர் காலஞ்சென்ற ஆர்.எஸ.நரஸிம்ஹாசாரியார் இதைத் தஞ்சையில் புதிய பரம்பரை நிறுவிய விஜயாலய சோழனுடை கல்வெட்டு என்றே கொண்டார்.
                சாசனத்திலே அவன் கூடலில் தங்கிவந்தான் எனக்காணப்படுகிறது. கூடல் என்பது பாண்டியர் தலைநகரான மதுரையையே பீரசித்தமாகக் குறிக்கும். சுந்தரமூர்த்திகள் சேரமான் பெருமாளுடன் மதுரை மாநகருக்குச் சென்றபோது அவர்களைப் பாண்டிய வேந்தன் ஒருவனும், பாண்டியன் மகளை மணம்புரிந்து அந்நகரில் முன்னரே போய்த் தங்கியிருந்த அவன் மருமகன் சோழ மன்னன்ஒருவனும் எதிர் கொண்டு அழைத்தார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.
                "சேரமான் தோழரும் மச்சேரர் பிரானும் பணிப்பூண்
                ஆரமார் பரைமதுரை ஆலவாயினில் வணங்க
                வாரமா வந்தணைய வழுதியாக மனக்காதல்
                கூரமாநகர் கோடித் தெதிர்கொண்டு கொடுப்புக்க்ார்

                "தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
                தொன்மதுரை நகரின்டகண் இனிதிருந்த சோழனார்
                அன்னவர்கள் உடன் கூட அணையவ வருங்கூடி
                மன்னுதிரு ஆவலாய் மணிக்கோயில் வந்தணைந்தார்" (கழறிற். புராணம் 91-2)

ஆயினும் இவ்விடத்திலே குறிக்கபட்டிருக்கும் கூடல் மதுரை மாநகரமாக இருக்குமா வென்பது சந்தேகம். சாசனம் கிடைத்த கூடலூரே அதில் குறிக்கப்பட்ட கூடல் போலும் அவ்விதமாயின் விஜயாலய சோழனுடைய சாசனம் மைசூர் ராஜ்யத்திலே காணப்பெறுவது எங்ஙனம்?
                திருக்கோவலூர்த் தாலூகாவிலே வீரசோழபுரம் என்னும் இடத்திலிருந்து தஞ்சை கொட்ட கொப்பரகேசரி வர்மருடை மூன்றாம் ஆண்டு கொண்ட ஒரு வீரக்கல் கிடைத்ததிருக்கிறது..(1936-ஆம் ஆண்டு 31 நெ. சாசனம்) சாசனத்திலே வரும் நஞ்சை கொட்ட என்பதைத் தஞ்சை கொண்ட என்பதாகக் கொண்டு தஞ்சையைக் கைப்பற்றிய பரகேசரி வர்மனுடைய மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டென அதைக் கொள்வர். அவ்விதம் கருதக்கூடியவன் விஜயாலயனே ஆவான். சாசனம் பொறிக்கப்பட்டுள்ள எழுத்திதன்ட வரிவடிவமும் அதற்கு ஒத்ததாகவே இருப்பதாகவும் கருதப்படுகிறது.  இதிலிருந்து விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியே தன் அரசை அவ்விடம் நிறுவினான் எனவும் கொள்வர். ஆனால் கொண்ட என்னும் சொல் கோட்ட என்று உருவத்தில் எங்கும் வழங்கியதில்லை அன்றி,'கொட்ட' என்னும் சொல் 'கொண்ட' என்னும் பொருளில் வழங்கியதும் இல்லை. அதனால் அவ்விதம் திருத்துவது பொருந்தாது. சாசனத்தில் காணும் கொட்ட என்ற
சொல் கோட்டம் அல்லது கோட்டை என்பதாகவே இருத்தல் வேண்டும். கோட்டை என்னும் சொல் அப்பொழுது பெரு வழக்கில் வரவில்லை.  தவர சாசனத்திலே ஐகாரவிகுதியில்லாமல் 'கொட்ட' என்றே இருப்பதால் இச்சொல் கோட்டம் என்பதையே குறிப்பதாகும் கோட்டம் என்னும் சொல் அந்நாளிலேயே வழக்கில் இருந்திருக்கிறது. இது மேலே நாம் குறிப்பிட்ட
திருச்சானூர்க் கல்வெட்டில் திருவேங்கக் கோட்டத்தின் பெயர் காணப்படுவதிலிருந்து நன்கு விளங்கும். அதனால், சாசனத்தில் கண்ட அரசன் பெயர் தஞ்சைக் கோட்டத்துப் பரகேசரி வர்மன் என்றே ஆகும்.
                விஜயாலயன் தஞ்சாவூரை முத்தரையரிடமிருந்து கைப்பற்றி அந்த இடத்திலே தன்னுடைய அரசை நிருவினான் என்று பொதுவாகக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்விதமாயின், முத்தரையர் தங்கள் அரசுரிமையை இழந்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் இழந்துவிட்டதாகத் தெரியவில்லை. சரித்திர அரங்கிலிருந்து அவர்கள் மறைந்துவிடவும் இல்லை. அதற் குப் பிறகு நீண்ட காலம்வரை அவர்கள் அந்தப் பகுதியிலே முக்கிய புருஷர்களாகத்தான் விளங்கியிருக்கிறார்கள். நாட்டின் அரசியலிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களைப் போலவே பக்கத்தில் கொடும்பாளூரில் வேளிர்குல
அரச பரம்பரை வேறு ஒன்று இருந்திருக்கிறது. அவர்கள் அந்த நாளிலே பலம் பொருந்தியவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் தில்லைஸ்தானம் கல்வெட்டில் காணும் உலகப்பெருலுமாளுக்கும் திருச்சானூர்க் கல்வெட்டில் காணும் உரகப்பெருமானாரும்கும்
உறவுமுறை இருந்திருக்குமாயின், (அவ்விரண்டு சாசனங்களுக்கும் உள்ள இடைவெளி சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகள் இருப்பதையும் அவர்களுடைய பெயரையும் கொண்டு பாட்டனும் பெயரனுமாகக் கருதலாம்) சோழ வமிசத்தின் மற்றோருகியைினரும் அந்தப் பகுதியில் இருந்து வந்தார்கள் என்று எண்ணலாம்.                    
                மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவு கூரவேண்டும். சோழ நாட்டின் காவிரிக்கரைப் பிரதேசம் அந்தநாளில் ஒரு போர்க்களமாக விளங்கியிருக்கிறது. இந்நிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாதாபிச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தியன் பல்லவர்மீத படையெடுத்து வந்து (கும்பகோணத்துக்குப் பக்கத்திலே திருநாகேச்வரம்
என்று வழங்கப்பெறும் பாம்பூராகிய) உரகபுரத்தில் பாடி இறக்கி இருந்தகாலம் முதலே ஏற்பட்டுவிட்டது. பழையாறை குடமூக்கு (கும்பகோணம்) திருப்புறம்பயம், இடவை, நியமம் எனப் பல்வேறு இடங்களில் போர் அடிக்கடி நிகழந்திருக்கின்றன. சில இங்களிலே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் நிகழ்ந்திருக்கின்றன. இதைக் கவனிக்கும் போது, அந்தப் பகுதி எதிரி மன்னர்களார் அடிக்கடி தாக்குண்டு போர் நேரக்கூடிய எல்லைப்புறப் பிரதேசமாக இருந்து வந்ததென்பது
தெளிவாகும். தந்திவர்மனுடைய ஆட்சியின் பிற்பகுதியிலே அவனுடைய சாசனம் ஏதும் சோழ நாட்டில் கிடைக்க வில்லை. அப்பொது பாண்டியர்கள் அதைக் கைப்பற்றி ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆதலின் பல்லவர்கள், அவ்விதம் மேலும் அடிக்கடி நேராமல் அந்த இடத்தைக் கவனித்துப் பாதுகாக்க விரும்பியிருந்த்தல் இயற்கையே. இதை கைகூடுவதற்குத்
தங்களுக்கு நம்பிக்கை வாய்ந்த ஒருவன் அந்த இடத்திலே இருக்க வேண்டியது அவசியம்.  விஜயாலயனே அவனுடைய தோள்வலிமையாலும், புழைய சோழ  பரம்பரையச் சேர்ந்தவனாதலாலும் இந்தகைய தகுதியும் நம்பிக்கையும் வாய்ந்தவனாகக் கருதப்பட்டான் போலும்.  பல்லவமன்னன் அவனைத் தேர்ந்தெடுத்து, சோழ நாட்டில் அப்போது இருந்து வந்த குறுநிலமன்னர்களை ஏதும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு, அவர்களுக்கு மேலாக ராஜப்பிரதிநிதிபோன்ற ஒரு நிலையில் நியமித் திருத்தல்கூடும். அந்தப்பதவியை அடைவதற்கு முன் அவன் அதேபோன்ற ஒரு பதிவியில் மைசூர் ராஜ்யப் பிரதேசத்தில் இருந்திருக்கவும் கூடும். இவ்விதம்தான் நாம் அவனுடைய கூடலூர்க் கல்வெட்டுக்கான காரணம் காட்ட முடியும். திருவாலங்காட்டுச்செப்பேடுகளிலே விஜயாலயன் தஞ்சையை அடைந்தான் என்று பொதுவாகக் கூறப்பட்டிருப்பதும் இதனையே வலியுறுத்தும். இவ்விதம் விஜயாலயன் சோழன் நாட்டு அரசுரிமையை அடைந்தது, மூன்றாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தின் இறுதியில், அரிசிலாற்றங்கரையில் நடந்த சண்டைக்குப் பிறகு, அதாவது சுமார் கி.பி.860-க்குப்பிறகு, நேர்ந்திருத்தல் வேண்டும். நிருபதுங்கனுடைய ஆட்சியின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்ததாகுவும் கொள்ளலாம்.
                விஜயாலயன் அந்தப்பதிவியை நீண்டகாலம் ஆண்டனுபதித்தாகத் தெரியவில்லை. அவனுடைய ஆட்சியைக் குறிப்பாதாக நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கு மேல் நமக்குத் தெரியவில்லை. அவன் மகன் ஆதித்திய சோழனும் கி.பி. 870-1-ல் பட்ட மெய்தியிருக்கிறான். ஆகவே அவனுடைய ஆட்சி பத்து வருஷத்துக்குமேல் இருந்திருக்க முடியாது.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு