அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஆனையூர் பெயர் வரக்காரணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், பொட்டுலுப்பட்டிக்கு வடக்கே இருக்கும் ஆனையூர், என்ற பெயர் வரக்காரணம். இங்கு மிகப் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்து சிவன் கோவில் இருந்து வருகிறது. இந்தச் சிவலிங்கம் சுயம்புலிங்கமாக இருக்கிறார். இந்த சிவனை, ராசராச சோழமன்னரின் முன்னோர்கள் வந்து வணங்கியும் இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் இந்த ஊரின் பெயர் திருக்குறள் முல்லூர், அப்போது இங்கு இருந்து வரும் சிவனுடைய பெயர் அக்கினி ஈஸ்வரர் என்றும் திருக்குறமுல்லூர் தேவர், என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்தக் கோவில் வரலாறு திருவிளையாடல் புராணத்தில் இரண்டாவது பாடலாகவும் இருக்கிறது.


துர்வாச முனிவர், சிவ பூசை செய்து இந்தப் பூசையினால் கிடைத்த தாமரை மலரை; தேவலோகத்தில் ஐராவத்தின் (யானை) மேல் அமர்ந்து தேவர்கள் படைசூழ பெரும் ஆரவாரத்துடன் வரும் தேவேந்திரனிடம் துர்வாச முனிவர் தாமரை மலரை கொடுத்தார். அந்த மலரை இந்திரன் மிக சாதாரணமாக வாங்கி அவருடைய வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைத்து விட்டார். அந்த மலரை யானை தன் துதிக்கையால் கீழே தள்ளி விட்டு தனது காலால் மிதித்து விட்டது. இதைப் பார்த்த முனிவர் கோபம் அடைந்து ஐராவதம் இன்றிலிருந்து நான்கு கொம்புகளுடன் காட்டு யானையாகக் கடவது என்று சாபம் கொடுத்து விட்டார். உடனே ஐராவதம் முனிவரை வணங்கி எனக்கு சாப விமோசனம் எப்போது என்று கேட்க, முனிவர் மனம் உருகி நீ நூறு ஆண்டுகள் காட்டுக்குள் அனாதியாக திரிந்து உன் சுய உருவம் பெறுவாய் என்று கூறிவிட்டார்.


இது நூறு ஆண்டுகள் முடிந்து,திருக்குறள் முல்லூரில் வந்து அக்கினி ஈஸ்வரர் என்ற சிவனை, தாமரைக்குளத்து நீர் கொண்டு தினசரி பூசை நடத்தி வழிபட்டு வந்தது. இந்தப் பூசையை மெச்சி, ஈஸ்வரர் காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று யானையிடம் கேட்கிறார். இதற்கு யானை என்னை உங்கள் ரதத்தில் இருக்கும் எட்டு யானைகளோடு ஒன்பதாவது யானையாக சேர்க்க வேண்டுகிறேன் என்று கேட்டது . இதைக் கேட்ட சிவபெருமான் இந்திரன் எனக்கு மிக வேண்டியவன். அதனால் நீ அவனிடமே ஐராவதமாக சென்று சேர்ந்து கொள்வாய் என்று வரம் தந்தார். யானையாக இருந்து வரம் பெற்ற ஐராவதம் உருவம் பெற்று இந்தினிடம் போய் சேரந்தது. யானையாக இருந்து சிவனை வணங்கியதால் ஆனையூர் என்று ஊர் பெயரும் வரத்தால் ஐராவதம் உருவம் பெற்றதால் ஐராவத ஈஸ்வரர் என்ற பெயர் சிவனுக்கு இப்போது,


இந்த ஐராவத ஈஸ்வரர் ஆலயம் மேற்கு பார்த்து இருக்கிறது. கோவிலுக்குள், அன்னை மீனாட்சி தெற்கு பார்த்து இருக்கிறாள். ஆஞ்சநேயர் தாய் ஆஞ்சனாதேவி வடக்குப் பார்த்து இருக்கிறார். மேலும் பல முக்கிய சாமிகள் இருக்கின்றன. இந்த ஐராவர் கோவிலை ராசராச சோழன், இவர்மகன் ராசேந்திர சோழன். இவர்களுக்குப் பிறகு சோழ மன்னர்கள் வாரிசுகளான பாதுகாத்து தங்கி வணங்கி வந்த முதல் கோவில் தென் தமிழ்நாட்டில் இந்து ஆனையூர் தான். இவர்கள் இங்கு கோட்டை கட்டி வாழ்ந்து வந்ததால் கோட்டையூர் என்றும் சொல்வதும் உண்டு. இந்த ஆணையூர் தான் மதுரையின் முதல் தாலுகா 1754ம் ஆண்டு வரை.

ஆர்.கே. கண்ணனின் ஆய்வு நூலில் இருந்து

4மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger மா.கலை அரசன்

நல்ல பயனுள்ள வரலாற்று தகவல்.

தங்களின் உயரிய பணி தொடரட்டும்.

வாழ்த்துக்கள் இரத்தினவேலு சார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

கலை
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger kannabiran, RAVI SHANKAR (KRS)

//திருக்குறள் முல்லூர்//

பேரே அழகு என்னார் சார்.

ஐராவதேஸ்வரர் பற்றி நன்கு சொல்லி உள்ளீர்கள்; நன்றி!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

Ravi
நன்றி

 

Post a Comment

<< முகப்பு