அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மருதம் - தலைவி கூற்று NOT PALLAN

மருதம் - தலைவி கூற்று பாடியவர்: ஆதிமந்தியார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் சோழன் கரிகால் வளவனின் ஒரேமகள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது. பாடலின் பின்னணி: ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாமல் வருந்தியதால், தலைவி உடல் மெலிந்தாள். அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன. தலைவியைப் பார்க்க வந்த தோழி, தலைவியின் வருத்தத்திற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள். தலைவி, “ என்னைப் பார். என் கையிலுள்ள வளையல்கள் நெகிழ்கின்றனவே என்று திகைக்கிறாயா? என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நான் என் தலைவனைப் பிருந்திருப்பதுதான். நான் ஒர் நாட்டியம் ஆடும் பெண் என்று உனக்குத் தெரியுமல்லவா? என்னைப் போலவே என் தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். சிலநட்களாக அவனைக் காணாததால், நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.” என்று கூறித் தன் காதலைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள். மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. அருஞ்சொற்பொருள்: மள்ளர் = வீரர்; குழீஇய = குழுமியுள்ள (கூடியுள்ள) ; விழவு = விழா; தழீஇய = தழுவிய; துணங்கை = ஒருவகைக் கூத்து; யாண்டும் = எங்கும்; மாண் = மாட்சிமை; தக்கோன் = தகுதி உடையவன்; யான் = நான்; ஆடுகள மகள் = ஆடுகின்ற களத்திற்குரிய பெண் (நாட்டியம் ஆடும் பெண்) ; கோடு = சங்கு; ஈர்த்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; நெகிழ்தல் = நழுவுதல்; பீடு = பெருமை; குரிசில் =தலைவன்; ஆடுகள மகன் =ஆடுகளத்தில் உள்ள ஆண் ( நாட்டியம் ஆடும் ஆண்மகன்). உரை: மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு, ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். விளக்கம்: ஆட்டனத்தி என்ற ஒரு நடனமாடும் இளைஞனைச் சோழமன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி காதலித்ததாகவும், அவன் காவிரியாற்றுக் கரையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபொழுது, காவிரியில் தோன்றிய வெள்ளப்பெருக்கு அவனைக் கவர்ந்து சென்றதாகவும், அவனைக் காணாததால், ஆதிமந்தி அவனைப் பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், பின்னர் இருவரும் ஒன்று கூடியதாகவும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பலகுறிப்புகள் காணப்படுகின்றன. ஆதிமந்தி தன் காதலனைக் காணததால் வருத்தப்பட்டுத் தேடி அலைந்ததாக, வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர் அகநானூற்றுப் பாடல் 45-இல் குறிப்பிடுகிறார். ஆட்டனத்தியைக் காவிரியாறு கவர்ந்து சென்ற செய்தியை அகநானூற்றில் நான்கு பாடல்களில் (76, 222, 376, 396) பரணர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் (வஞ்சின மாலை, வரிகள் 10- 15) சோழ மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தியின் காதலனாகிய ஆட்டனத்தியைக் காவிரி கவர்ந்து சென்று கடலில் சேர்த்ததாகவும், கடல் ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக்கு மீட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை ”ஆட்டனத்தி – ஆதிமந்தி காவியம்” என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றை “சேர தாண்டவம் “ என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி – ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து ”மன்னாதி மன்னன்” என்ற திரைப்படம் 1960- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Labels:

பாலாறு பத்திரிகை செய்தி

அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர அரசு குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை 6.12.2007 அன்று நடத்த இருப்பதாக செய்திகள் வந்தி ருக்கின்றன. இந்த அடிக் கல் நாட்டு விழாவின் போது ஆந்திர மாநில முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி யும் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை புறநகர் மக்களின் நலன்களுக்கு எதிரானது.

குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவ தற்கான முயற்சியை கடந்த இரு ஆண்டுகளாக எடுத்து வருகிறது. இதை ஆரம்ப கட்ட நிலையிலேயே நான் எதிர்த்ததோடு மட்டுமல்லா மல், உடனடியாக 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எனது ஆட்சிக் காலத்தில் ஆந்திர அரசின் முயற்சியை தடுக்கும் விதமாக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய் யப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட ஆட்சி வழக்கை துரிதப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதற் கான அடிக்கல் நாட்டு விழா தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாகும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டுவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் வருகிற 26.11.2007 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வாசு, வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரமணி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கோ.அரி எம்.எல்.ஏ. மற்றும் திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடை பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

too late

Labels:

இன்று ராஜிவ் காந்தி பிறந்த நாள்

'இந்திய இசைதான் சோறு போடுது'

ராஜிவை தாக்கியவர் நெகிழ்ச்சி!


லங்கை தலைநகர் கொழும்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையை அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் ஏற்றுக் கொண்டபோது, அணிவகுப்பில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை வீரன் ரோஹனா டிசில்வா திடீரென துப்பாக்கியை திருப்பிப் பிடித்து ராஜிவ் தலையில் அடிக்க முய்றிசித்தான். உடனே ராஜிவ் சுதாரித்து விலகினார். இதனால் அவருடைய தலைக்கு வைத்த குறி தப்பி, கழுத்தில் துப்பாக்கி இறங்கியது. ரோஹானாவை பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்து பிடித்துச் சென்றனர்.


இந்த அணிவகுப்பு நேரடியாக டி.வியில் ஒளிபரப்பானதால், இலங்கையிலும் இந்தியாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினம் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, 'அணிவகுப்பில் ஒரு வீரர் மயககமடைந்து, துப்பாக்கியை ராஜிவ் மீது போட்டு விட்டார். இதனால் ராஜிவ் சிறிதளவு தடுமாறினார்' என்று சப்பைக்கட்டு கட்டினார்.


இது நடந்து ஒரு மணி நேரம் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ், ' இது என்ன முட்டாள்தனமான விளக்கம்? உண்மையில் அவன் என்னை அடிக்க முயற்சித்தான்' ஒரு கணகத்தில் ஏதோ நகர்வது போல் என் கண்ணில் தெரிந்தது. உடனே நான் குனிந்தேன். இதனால் என் தலைக்கு வைத்த குறி தப்பி, என் இடது காதுக்கு கீழே கழுத்தில் துப்பாக்கி இறங்கியது' என்றார்.


அவருடன சென்றிருந்த சோனியா கூறுகையில், 'கழுத்தில் துப்பாக்கியால் அடிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் ராஜிவ் கலந்து கொண்டடார். நிகழ்ச்சிகள் முடிந்து டில்லி திரும்புவதற்காக விமானத்தில் ஏறிய பின்னரே, ராஜிவ் கழுத்தில் வீக்கம் இருந்தது தெரிய வந்தது. விமானத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது நடந்து பல நாட்கள் கழித்தும் அவருடைய இடது தோளில் வலி இருந்து வந்தது. அவரால் இடதுபுறமாக படுக்க முடியவில்லை' என்றார்.


இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக இலங்கைக்கு இந்திய அமைதிப்படை (.பி.எப்.) அனுப்பும் ஒப்பந்தத்தில் ராஜிவும், ஜெயவர்த் தனேயும் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி கையெடுத்திட்டனர். இதற்கு மறநாள் டில்லி திரும்பும் முன்னர் நடந்த அணிவகுப்பில் ராஜிவ் மீது தாக்குதல் முயற்சி நடந்தது.


இந்தத் தாக்குதல் குறித்து ரோஹானாவிடம் ராணுவ கோர்ட் விசாரணை நடத்தியது. இதில் ரோஹானாவுக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இரண்டு ஆண்டுகள் கழித்து ரோஹானா விடுதலை செய்யப்பட்டார். இப்போது கொழும்பு புறநகர் பகுதியில் கேசட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் 46 வயதாகும் ரோஹான.


ராஜிவ் மீது எனக்கு தனிப்பட்ட விரோம் எதுவும் கிடையாது. அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதை நான் நேரில் பார்த்தேன்.

புலிகளுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது என்று பலர் கூறினர். இதனால், இந்திய பிரதமர் ராஜிவை அவமானப்படுத்தவே துப்பாக்கியால் அடித்தேன் ஆனால், இலங்கைக்கு உதவி செய்ய ராஜிவ் வந்திருந்தார் என எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் என் செயலை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். புலிகளால் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது. அவருடைய குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதினேன்.


இந்திய பிரதமரை தாக்கிய எனக்கு இப்போது இந்திய இசைத்தான் வருமானம் அளித்து வருகிறது. என் கடையில் பிரபல இந்தி படங்களின் பாடல் கேசட்டுகள் அதிகமாக விற்பனையாகின்றன. நானும் அந்தப் பாடல்களை ரசிக்கிறேன். இவ்வாறு ரோஹானா கூறினார்.

ஆதாரம்: தினமலர்

Labels: