அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இன்று ராஜிவ் காந்தி பிறந்த நாள்

'இந்திய இசைதான் சோறு போடுது'

ராஜிவை தாக்கியவர் நெகிழ்ச்சி!


லங்கை தலைநகர் கொழும்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையை அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் ஏற்றுக் கொண்டபோது, அணிவகுப்பில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை வீரன் ரோஹனா டிசில்வா திடீரென துப்பாக்கியை திருப்பிப் பிடித்து ராஜிவ் தலையில் அடிக்க முய்றிசித்தான். உடனே ராஜிவ் சுதாரித்து விலகினார். இதனால் அவருடைய தலைக்கு வைத்த குறி தப்பி, கழுத்தில் துப்பாக்கி இறங்கியது. ரோஹானாவை பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்து பிடித்துச் சென்றனர்.


இந்த அணிவகுப்பு நேரடியாக டி.வியில் ஒளிபரப்பானதால், இலங்கையிலும் இந்தியாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினம் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, 'அணிவகுப்பில் ஒரு வீரர் மயககமடைந்து, துப்பாக்கியை ராஜிவ் மீது போட்டு விட்டார். இதனால் ராஜிவ் சிறிதளவு தடுமாறினார்' என்று சப்பைக்கட்டு கட்டினார்.


இது நடந்து ஒரு மணி நேரம் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ், ' இது என்ன முட்டாள்தனமான விளக்கம்? உண்மையில் அவன் என்னை அடிக்க முயற்சித்தான்' ஒரு கணகத்தில் ஏதோ நகர்வது போல் என் கண்ணில் தெரிந்தது. உடனே நான் குனிந்தேன். இதனால் என் தலைக்கு வைத்த குறி தப்பி, என் இடது காதுக்கு கீழே கழுத்தில் துப்பாக்கி இறங்கியது' என்றார்.


அவருடன சென்றிருந்த சோனியா கூறுகையில், 'கழுத்தில் துப்பாக்கியால் அடிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் ராஜிவ் கலந்து கொண்டடார். நிகழ்ச்சிகள் முடிந்து டில்லி திரும்புவதற்காக விமானத்தில் ஏறிய பின்னரே, ராஜிவ் கழுத்தில் வீக்கம் இருந்தது தெரிய வந்தது. விமானத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது நடந்து பல நாட்கள் கழித்தும் அவருடைய இடது தோளில் வலி இருந்து வந்தது. அவரால் இடதுபுறமாக படுக்க முடியவில்லை' என்றார்.


இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக இலங்கைக்கு இந்திய அமைதிப்படை (.பி.எப்.) அனுப்பும் ஒப்பந்தத்தில் ராஜிவும், ஜெயவர்த் தனேயும் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி கையெடுத்திட்டனர். இதற்கு மறநாள் டில்லி திரும்பும் முன்னர் நடந்த அணிவகுப்பில் ராஜிவ் மீது தாக்குதல் முயற்சி நடந்தது.


இந்தத் தாக்குதல் குறித்து ரோஹானாவிடம் ராணுவ கோர்ட் விசாரணை நடத்தியது. இதில் ரோஹானாவுக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இரண்டு ஆண்டுகள் கழித்து ரோஹானா விடுதலை செய்யப்பட்டார். இப்போது கொழும்பு புறநகர் பகுதியில் கேசட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் 46 வயதாகும் ரோஹான.


ராஜிவ் மீது எனக்கு தனிப்பட்ட விரோம் எதுவும் கிடையாது. அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதை நான் நேரில் பார்த்தேன்.

புலிகளுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது என்று பலர் கூறினர். இதனால், இந்திய பிரதமர் ராஜிவை அவமானப்படுத்தவே துப்பாக்கியால் அடித்தேன் ஆனால், இலங்கைக்கு உதவி செய்ய ராஜிவ் வந்திருந்தார் என எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் என் செயலை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். புலிகளால் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது. அவருடைய குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதினேன்.


இந்திய பிரதமரை தாக்கிய எனக்கு இப்போது இந்திய இசைத்தான் வருமானம் அளித்து வருகிறது. என் கடையில் பிரபல இந்தி படங்களின் பாடல் கேசட்டுகள் அதிகமாக விற்பனையாகின்றன. நானும் அந்தப் பாடல்களை ரசிக்கிறேன். இவ்வாறு ரோஹானா கூறினார்.

ஆதாரம்: தினமலர்

Labels:

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger செல்வன்

இந்திய பிரதமரை தாக்கிய எனக்கு இப்போது இந்திய இசைத்தான் வருமானம் அளித்து வருகிறது//

எப்படியோ திருந்தி நல்லா இருந்தா சரி:)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

செல்வன் நன்றி

 

Post a Comment

<< முகப்பு