அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

தமிழ் நாட்காட்டிகள் சிலவற்றில்  தமிழ் எண்களை நாம் பார்த்திருப்போம்.
க , உ , ங என்று வரும். இவைதான் தமிழ் எண்கள்.
1,2,3... என்பவை அரேபிய எண்கள் என்று நமக்கு சொல்லித்தந்திருப்பார்கள்.
 

உண்மையில் இரண்டுமே தமிழ் எண்கள்தான். இன்று உலகம் பயன்படுத்தும் 1, 2, 3,... எனும் எண்கள் தமிழ் எண்களே. அன்று சூயஸ் கால்வாய் இல்லாத காரணத்தால் நேரடியாக
 தமிழர்களின் வணிகம் அரேபிய, எகிப்திய நாடுகளோடு நின்றது. கிரேக்க, ரோமானிய வணிகர்கள் அரேபிய, எகிப்து பகுதியில் வணிக மாற்றம் செய்ததால் எண்களை, வானியலை, தத்துவஇயலை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக எண்ணிக்கொண்டார்கள்.
 http://4.bp.blogspot.com/-QfhfJrW36-g/U01LNEaUCNI/AAAAAAAAB6Y/YABNbVp3Wqg/s1600/Silk_route.jpg
அடிப்படையில் அவை தமிழர் அறிவுச்சொத்துக்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அரேபியர்கள் வழியாய் அப்படி பெற்றுக்கொண்ட கணித எண்கள் அரேபிய என்களாகிப்போனது. 15 ம் நூற்றாண்டுக்குப் பிறகு உலக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஐரோப்பா மாறியதால் அவர்களின் கண்ணோட்ட அடிப்படையில் அரேபிய எண்கள் என்பதே நிலைத்துப்போனது. மனித இனத்தின் தோற்றமே ஆப்பிரிக்காவிலிருந்துதான் என்று அவர்கள் சொல்லுவதற்கும் காரணம் இதுதான். அதைத்தாண்டி அவர்கள் பார்வை விசாலப்படவில்லை.
பின்னாளில் சில அறிஞர்கள் இந்தியாவிலிருந்துதான் கணிதம் மேலை நாடுகளுக்கு சென்றது என்பதை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டார்கள். குறிப்பாக ஐன்ஸ்டீன் கணக்கீடு செய்ய உலகிற்கு கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள் என்பதை நன்றியோடு ஏற்றுக்கொண்டார். (மேலை நாட்டவர்க்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லாமே இந்தியா தான்)
"We owe a lot to the Indians, who
 taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made." 
                                                                                 Albert Einstein. 

சரி, இந்தியா என்றால் யார்?

இந்தியாவின் சட்ட அறிஞர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் தெளிபட தெரிவித்தார்
இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழி தமிழே.
 காண்க:

The word ‘Dravida’ is not an original word. It is the sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’ when imported into Sanskrit became ‘Damilla’ and later on ‘Damita’ became Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India, and was spoken from Kashmir to Cape Comorin.
                                                                          Dr. B. R. Ambedkar. 

மூலத் தமிழ் எண்களில் இருந்து வளர்ச்சி அடைந்த தமிழ் எண்களின் படிநிலையைக் கீழுள்ள படத்தில் காணலாம்.

http://1.bp.blogspot.com/-A2Hyo3nh4YA/U01HAGce0yI/AAAAAAAAB6M/geTItplwMtA/s1600/tamil+numbers.jpg

இந்த தமிழ் மூல எண்களுக்கும் ஒரு பரிணாம வரலாறு இருக்கிறது. கீழுள்ள இப்படம் அதனைத் தெளிவாக்கும்.

http://1.bp.blogspot.com/-DM8-ra5eDxo/U01M8APKmzI/AAAAAAAAB6k/0UELSstf6A0/s1600/tamil+numeral+dev.jpg

இந்த தமிழ் எண்களின் தோற்றம் பற்றிய வரலாறு மிக முக்கியம். வடிவேலு சொல்வதைப்போல வரலாறு முக்கியம் அமைச்சரே. திரு ம. சோ. விக்டர் அவர்களின் எபிறேயமும் தமிழே என்ற நூலில் இது குறித்து அவர் விரிவாக எழுதி இருக்கிறார். ஒரு சில தகவல்களை அதிலிருந்தும், பிறவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்கிறேன்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" இதை யார் சொன்னது என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவோம், கணியன் பூங்குன்றனார் என்று. இந்த கணியன் என்றால் கணிப்பவர் என்று பொருள். பூங்குன்றனார் ஒரு  தமிழ்க் கனிதவியலாளர். வானியல் கணித்த விஞ்ஞானிகளும் அவ்வாறே அழைக்கப்பட்டனர். வெறும் செய்யுள் இயற்றிய ஒரு புலவர் என்ற புரிதல் தான் நமக்கு தரப்படுகிறது. எத்தனை தமிழ் விஞ்ஞானிகளை, சித்தர் விஞ்ஞானிகளை, சித்த மருத்துவ நிபுணர்களை இவ்வாறு மறந்து போய் விட்டோம், மறக்க வைக்கப்பட்டுவிட்டோம். கொடுமை.

அந்த தமிழ்க்கணிதக் கணக்கீடுகளை சற்று தேடித்தான் பார்ப்போமே.

ஒன்று

1. உல் - உல்கு - ஒல்கு - ஒன்று என்பார் பாவாணர். ஒல் - ஒல்கு என்றால் ஒன்றானது என்று பொருள்.
2. உடலும் உயிரும் இணைந்தால் உயிரினம் என்பதைப்போலே மெய்யெழுத்தின் முதலும், உயிரெழுத்தின் முதலும் இணைந்தது எண்களின் முதல் எழுத்து. க் + அ = க (1)
3. க் + அ = இக்க என்பதே ஏக=ஒன்று, ஹிந்தியில் இது ஏக்.
4. க என்பது எபிரேயத்தில் கத் (kat) பின்னர் அகத் (akat) என்றானது.
5. ஒல்கு என்ற மூலத்திலிருந்து ஒல்கு - ஒல்பா -  அல்பா - ஆல்பா என்ற கிரேக்க எழுத்து. 
http://3.bp.blogspot.com/-3Uz_5JgKuvs/U1Q3ImNELVI/AAAAAAAAB_U/pqlwUMXOxJk/s1600/800px-Alpha_uc_lc.svg.png

6. ஒன்று (onru)  என்ற மூலத்திலிருந்து en (Gk), eine (Ger), unum (Latin), uno (Italian), one (English ), yin (China).
7. Cambridge Dictionary பக் 309 ல் Numerals என்ற தலைப்பில் எண்கள் இந்திய மூலத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்கிறது.
Number, Numer என்பதன் மூலம் நொய்மை அதாவது சிறிய அலகு. 
இரண்டு 
1. ஈர் - ஈர்தல் - இரண்டாதல். (குட்டி ஈன்றது)
2. பீட்டா என்ற கிரேக்க சொல் ஒரே நேர்கோட்டில் இரு வட்டங்கள் (β) பிடு-பிட்டு -பீட்டா 
3. இரண்டுக்கான தொடக்க தமிழ் எழுத்து உ. இது குறிப்பது இரண்டு கொம்புடைய உடு அல்லது ஆடு. இரண்டுக்கான சிந்து வெளி எழுத்து Y இரண்டு கொம்புடைய ஆட்டைக் குறிக்கிறது.
4. எபிரேய மொழியில் இரண்டு என்பது துமா (Tuma) எனப்படுகிறது. கிரேக்கத்தில் திமுஸ் (Dymus), இலத்தீனில் duo, இத்தாலியில் due, ஆங்கிலத்தில் two, சமஸ்க்ருதத்தில் துவி (dwi). தமிழில் துமி என்றால் இரண்டாக்கு என்று பொருள். (Thoma அ Thomas என்றால் இரட்டையர் என்றே பொருள். திதிமு என்ற தோமா)
5. எபிரேயர்கள்  மாதத்தினை ஈரா என்று அழைத்தனர். இது நிலவின் இரண்டு நிலைகளைக் குறிக்கும் (வளர்பிறை, தேய்பிறை) தமிழர்களைப்போல எபிரெயரும் நிலவின், மதியின் அடிப்படையில் மாதத்தின் பெயர் கொண்டனர். திங்களால் வளரும் வருடம் அதனால் ஆங்கிலத்தில் ஈர், ஈரா, year எனப்பட்டது.

மூன்று 
1. மூன்று என்ற எண் மூக்கை உருவகமாகக் கொண்டது என்கிறார் பாவாணர். மூக்கின் மூன்று பக்கங்கள். முன், முன்னி வருவது, 'மூக்கை நீட்டாதே' என்ற சொல் வழக்கு. மூக்கால் ஒலிக்கப்படும் ஒலி 'ங' மூன்றுக்கான தமிழ் எழுத்தும் '௩'. சிந்துவெளி மக்கள் மூன்று என்ற வார்த்தைக்கு மூக்கைப்போல உருவம் கொண்ட '௰' என்ற என்னைப்பயன்படுத்தினார்கள்.
2. மூன்று என்ற வார்த்தைக்கான மூலமாக முப்பக்கமும் தரையுள்ள கடற்கரையாக இருந்திருக்கலாம் என்கின்றார்.
3. நான் தேடியவரை எனக்கு பட்டது, திரி என்பதே மூலச்சொல்லாக இருந்திருக்க வேண்டும். இரண்டு கயிறால் திரி உருவாக்க முடியாது. குறைந்தது மூன்று கயிறுகள் தேவை. திரிசூலம் என்பதும் உயிர் உருவாக சூல் கொள்ள மூன்று காரணிகள் தேவை. ஒன்று பிராண வாயு, இரண்டு சூரிய ஒளி, மூன்று அண்டவெளி (space) இதுதான் உலக உயிர் உருவாக்கத்திற்கும், மத உருவாக்கத்திற்கும் (பிரம்மன், சிவன், விஷ்ணு) அடிப்படையாய் இருந்திருக்கிறது. இதுபற்றி  விளக்கமாய்  பின்னர் பேசலாம். தற்போது  எண்கள் மட்டும்.
திரி-தமிழ், thiri-வடமொழி, Tria - கிரேக்கம், Tres- இலத்தீன்,
Tre- இத்தாலியன், Three-ஆங்கிலம்.

நான்கு 
1. சதுரம்= ச-தூரம், சம-தூரம். நான்கு சம தூரங்கள் கொண்டது.
சதுக்கம் - சதுரமான பரப்பு. 
2. சதுர் - தமிழ், chatushk - சமஸ்க்ரிதம், Char - ஹிந்தி , Tessera- கிரேக்கம், Quartos - இலத்தின் , Quattro - இத்தாலி, Quarter, Four - ஆங்கிலம்.
3. இந்த சதுர் எப்படி Quarter ஆகுது என்று தேடியபோது இத்தாலி நாட்டுக்காரரே உதவி செஞ்சார். (காண்க) அவர் கொன்ஸ்தன்சோ ஜோசப் பெஸ்கி என்ற நம்ம வீரமாமுனிவர். 
http://4.bp.blogspot.com/-X1uYk8VG2fw/U1Od22ExPgI/AAAAAAAAB8k/l6c5hv8VRFU/s1600/veeramaamunivar.jpg

இவர் இத்தாலி மிலான் நகரத்துக்கருகில் காஸ்திலியோனே (Castiglione) என்ற நகரத்தில் பிறந்தவர். இந்த நகரை காஸ்திகிலியோன் என்று நாம் தவறாக எழுதுவது இங்கு வந்ததும் தான் தெரிந்தது. இவர்தான் தமிழ் மீது கொண்ட பற்றால், கற்று, தேர்ந்து தமிழில் முதல் முறையாக அகராதியைத் தொகுத்தவர். ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் 'Thesaurus' போல. 

சதுர் அகராதி. சதுர் என்றால் நான்கு. சதுரம் என்றால் நான்கு பக்கமும் சம தூரத்தில் இருக்கும் வடிவம். சதூரம் - சதுரம். நான்கு அகராதி. இதில் 
1. சொல் அகராதி (சொல்லும் பொருளும்) 
2. பெயர் அகராதி (ஒரு சொல் பல பொருள்) 
3. தொகை அகராதி (கலைச்சொற்கள்) 
4. தொடை அகராதி (எதுகை மோனை) 
என சதுர அகராதியை 1732 ல் எழுதி முடித்தார். இப்ப நம்ம விசயத்திற்கு வருவோம். 

இந்த நான்கு என்ற சதுர், ஹிந்தியில் சார் (ஏக், தோ, தீன், சார்) ஆகி சதுர்- சதூர்-chadhoor - cha என்பதை இத்தாலியர்கள் க என்றுதான் உச்சரிப்பார்கள், ஆக சதுர்-சதூர்-கதூர்- ஆகியிருக்கிறது. இது அப்படியே ஆங்கிலத்தில் 'quarter நான்கில் ஒரு பாகம்' என்றாகி விட்டது. 

இந்த வகையில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வாகன ஓட்டிக்கு சாரதி என்று தமிழில் பெயர். பார்த்தசாரதி என்ற பெயர் நமக்கு அறிமுகமான பெயர். பார் என்ற உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரியனுக்கு தான் அப்பெயர். கதிர்கள் என்ற குதிரைகள் பூட்டிய தேர் சூரியன். இதில் சாரதி என்பது சதுர அ சார் எனும் நான்கு சக்கரங்கள் கொண்ட தேருக்கு அதிபதி என்றே சாரதி பொருள் படுகிறது. இந்த சார்- சதுர்-கதூர்-கார் என்பதும் நான்கு சக்கரங்கள் பூட்டிய வாகனம். 
German மொழியில் car ஐ (வாகனம்) வாகன் என்றே அழைக்கிறார்கள். Volkswagen (f) வோல்க்ஸ்வாகன் அ மக்கள் வாகனம். 
நான்கு கரங்கள் கொண்ட இணைப்போடு இருப்பதால் (நான்கு) சதுர்-கரம், சக்கரம் என்று தமிழன் தான் முதன் முதலில் சக்கரத்தையே கண்டுபிடித்திருக்கிறான்.
(தங்க நாற்கர சாலை - Golden Quadrilateral road)
ஐந்து

1. ஐந்து என்பது ஒரு கையின் ஐந்து விரல்களைக்கொண்டே உருவானது என்பார் பாவாணர். ஐந்து முதலில் கைந்து என்றே சொல்லப்பட்டது. கை - கைந்து - ஐந்து. 
2. சிந்துவெளி மக்கள் ஐந்திற்காக பயன்படுத்திய குறியீடு 
http://2.bp.blogspot.com/-q_3Nt1h7F-g/U1MFt_sSf0I/AAAAAAAAB8U/7Kt4HyzLJoE/s1600/Untitled2.png

3. ஐந்து என்பது அஞ்சு, பஞ்ச, பஞ்சம, பாஞ்ச் - ஹிந்தி, penta - கிரேக்கம், Cinque - இத்தாலி,  
4. விவிலியத்தில் Pentateuch என்பது முதல் ஐந்து புத்தகங்களைக்குறிக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒரு கட்டு, அல்லது ஒரு தூக்கு என்ற பொருளில். அஞ்சுதூக்கு, பஞ்சதூக்கு, Pentateuch. 
5. தமிழில் ஒவ்வொரு பதின்ம கூட்டுக்கு (Decade) கொத்து என்ற பதம் உள்ளது. கிரேக்கத்தில் இது kosthe என மாறுகிறது. Pentecost என்பது அஞ்சு கொத்து (5x10=50) 50ம் நாள். 
6. அமெரிக்க Pentagon ஐங்கோண வடிவ கட்டடம், Pentagonal, Pentathlon போன்ற பல சொற்கள். அஞ்சு கோணம், பஞ்சகோணம், Pentagon.
http://2.bp.blogspot.com/-y2YSeh3B1tI/U1FKv0K4PjI/AAAAAAAAB7c/G0qHXYeXh1Y/s1600/G4S_Pentagon_1.jpg


 ஆறு 
1. சிந்து எழுத்து    '௬'  
2. இதன் உச்சரிப்பு 'சே' இதன் வடிவம், மீனைக்குறிக்கும் வார்த்தை. மனித இனத்தின் முதல் தொழில் மீன் பிடித்தல். அதனால் வான் நட்சத்திரங்களையும் விண்மீன் என்றே அழைத்தனர். 
காண்க:

http://3.bp.blogspot.com/-sGYjS1chnvE/U1L6MQEymQI/AAAAAAAAB78/oQDOiNV3PGI/s1600/harappan-script.jpg

மீன் பிடித்த தொழிலின் காரணமாய் இந்தியாவின் தொன்மையான பெயர் பரத நாடுதான். பிரிட்டனின் தொன்மையான பெயர் பரத்தான், பிரித்தன், பிரிட்டன், (Briton) பரத நாடுதான்.
3. தமிழில் சே, வட மொழியில்-சே (che), எபிரேயத்தில் - sesh, கிரேக்கத்தில்-seks, இலத்தீனில்-sex, ஜெர்மானியத்தில் - sechs, இத்தாலியில் - sei, ஆங்கிலத்தில்-six.
4. தமிழர் கடவுள்களில் ஒருவர் சேயோன் என அழைக்கப்படுகிறார். அவர் முருகன். காரணம் அவருக்கு இன்னொரு பெயர் அருகன், ஆறு படை கொண்டவன். இந்த சேயோன் தமிழர்களின் வானவியல் கண்டுபிடிப்பு. அதனால்தான் 6 முனை கொண்ட நட்சத்திரம் அடையாளமாய் கொள்ளப்படுகிறது. 

எபிரேயர்களின் 'சீயோன்' என்பதற்கும் அடையாளகுறியீடு இதேதான். இந்த ஒப்புமை பற்றி பிறகு பேசலாம்.

வானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே. கிரேக்கத்தில் இந்த 6 நட்சத்திரங்களுக்குப்பதிலாக,
 7 நட்சத்திரங்கள் கொண்டதாக Pleiades என இதே நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகிறது. 
காண்க: 
அந்த நட்சத்திரக்கூட்டம் இது தான்.
http://1.bp.blogspot.com/-gD-R1choOwg/U1Ppn5FL6aI/AAAAAAAAB9Y/KDBfedSF9Os/s1600/pleiades+2.jpg


இந்த ஆறு நட்ச்சத்திரக்கூட்டம் இருக்கும் நட்ச்சத்திரக்குடும்பத்தின் பெயர் இடபம் (taurus) காளை என்பதே இதன் பொருள். இது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

http://1.bp.blogspot.com/-GN1EAGt3dXQ/U1PnU9yXyxI/AAAAAAAAB9M/U1Lbq-temdo/s1600/taurus.jpg

ஜப்பானில் உள்ள ஒரு வாகன நிறுவனத்தின் பெயரே தமிழ் 'ஆறு' என்பதைக்கொண்டிருப்பதோடு இந்த ஆறு நட்சத்திரங்களை நிறுவன அடையாளமாகவும் வைத்திருக்கிறது. அந்தப்பெயர் சுபஆறு (Subaru)ஏழு
 
1. ஏழு என்கிற ஒலி இசையில் உருவாகிறது என்கிறார் பாவாணர். ஏழு சுரங்கள், சப்த சுரங்கள் என்றும் அழைக்கப்படுதல். பாவாணர் இவை சப்த சுரங்கள் அல்ல, சப்த சரங்கள் அதாவது ஒலி அளவீடுகளின் ஏழு வரிசை அல்லது நிலை என்பார்.
2. ஏழு என்ற எழுத்திற்கான சிந்து வெளி வரி வடிவம் கதவின் அமைப்போடு உள்ளது.
http://1.bp.blogspot.com/-HgcKLqi6YPA/U1PhQWuT8TI/AAAAAAAAB80/HSwUNojsFWg/s1600/7.jpg
3. எபிறேயத்திலிருந்தும் இதற்கான விளக்கம் பெறலாம். விவிலியத்தில் வாரத்திற்கு ஏழு நாள் என்கிறது. ஏழாம் நாளை சப்த் (sabt) என்கிறது. இதன் பொருள் சாத்துதல் என்பதே. ஆறு நாட்களையும் சாத்துகிற, மூடுகிற நாள். (காண்க: The New American Bible Dictionary. பக். 194.)
4. சாத்து - தமிழ், சாபத் (sabt) - எபிரேயம், சப்த - வடமொழி, septe - கிரேக்கம், septem - இலத்தீன், sette - இத்தாலி, seven - ஆங்கிலம்.

எட்டு
1. எட்டு என்பது  'அ' என்ற குறியீடு  மூலம் குறிக்கப்படுகிறது.
2. எட்டு என்பதற்கு சிந்து வெளி குறியீடு இந்தப்படத்தில் உள்ள இறுதிக்குறியீடு (h)
http://2.bp.blogspot.com/-bh5wTY2zHBA/U1P3-9GOxCI/AAAAAAAAB-E/L15WOGVBzpI/s1600/h.jpg

3. எட்டு என்பது எட்டு வகை தானியங்களைக் குறிக்கும் என்பார் பாவாணர். நெல், துவரை, பயிறு, அவரை, கடலை, எள், உளுந்து, கொள் என்பதே எட்டு வகை, கோதுமை ஆரியர்களால் சேர்க்கப்பட்டது என்பார் அவர். இந்த 8 வகை தானியங்களைக்கொண்டு அடுவில் (அடுக்களை, அடுப்பு) சமைப்பதைக்கொண்டு அடு -  அட்டு - எட்டு என உருவாகியிருக்கலாம் என்பார்.
4. அட்டு - தமிழ், அஷ்ட - வடமொழி, okto - கிரேக்கம், octo - இலத்தீன், otto - இத்தாலி, eight - ஆங்கிலம்.

ஒன்பது 
1. ஒன்பது தொல்காப்பியர்  அறிமுகப்படுத்திய சொல். அதற்கு முன்பு தொண்டு என்ற சொல்லே புழக்கம். இது பற்றிய விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.
2. தொண்டு என்ற இலக்கத்தை குறிக்க   கீழ்க்கண்ட குறியீட்டை சிந்து சமவெளி தமிழர் பயன்படுத்தி இருக்கின்றனர்.
http://4.bp.blogspot.com/-T25LP4cLAqU/U1MFiv8Zm3I/AAAAAAAAB8M/bPeh7s02K6M/s1600/Untitled.png

தொள்ளம் மரக்கலத்தைக் குறிக்கும் சொல். துளை, துளைத்தல், தொள்ளம், தொண்டு. தொண்டுகள்  வந்து போகும் இடம் தொண்டி, சிவகங்கை மாவட்டத்தின் கடற்கரை துறைமுக நகரம்.
3. தொண்டு என்பதும் மறக்கலப்பெயரே, நாவி என்பதும் மறக்கலப்பெயரே (நாவி - Navy, Navigator). இரண்டுமே ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கப் பயன்படுகிறது.
4. நவ - தமிழ், வடமொழி, Nea - கிரேக்கம், Novem - இலத்தீன், Neun - ஜெர்மானியம், Nove - இத்தாலி, Nine - ஆங்கிலம்.

பத்து
1. 
http://2.bp.blogspot.com/-INWmmSooYBA/U1ThLxQGSYI/AAAAAAAAB_o/ZEEGWhHRUiE/s1600/hand.jpghttp://2.bp.blogspot.com/-INWmmSooYBA/U1ThLxQGSYI/AAAAAAAAB_k/G_vsj4NIGgg/s1600/hand.jpg
    என்ற சிந்து வெளி குறியீடு இரு கை பத்து விரல்களைக் குறிக்கிறது. காலநீட்சியில் இடைவிரல்கள் நீங்கி '௰' என மாற்றம் பெற்றுள்ளது. 
2. பத்து என பெயர் வர இரண்டு காரணங்கள்:
          1. பற்று என்பதே பத்து என  ஆனது. அதாவது 1 முதல் 10 வரை உள்ள எண்களைப் பற்றி இருப்பதால் இப்பெயர்.
          2. தசை உடலில் ஒட்டி இருப்பதைப்போல என்களைப்பிணைத்திருப்பது. தச்சன் - மரங்களை வெட்டி இணைப்பவன். கிரேக்கத்தில் தச்சன் என்பதற்கான வார்த்தை tekton என்பதே.
          3. பத்து என்ற எண்ணின் மூலச்சொல்லிற்காக நான் தேடியவரையில் எனக்குப்புலனானது: திசைகள் பத்து (நான்கு திசைகள், நான்கு இடை திசைகள்-வட கிழக்கு, வட  மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, இவை தவிர மேல், மற்றும் கீழ் ஆக மொத்தம் பத்து.) இவற்றின் அடிப்படையில் உருவாகி இருக்கலாம்.

4. தசமி - 10 ம் நாள், டிசம்பர் - 10ம்  மாதம், தசமுகன் - இராவணன் (பத்து முகங்கள் கொண்டவன்), தசாவதாரம் - 10 அவதாரங்கள், தசமபின்னம் (Decimal)-1-10.
5. தசம் - தமிழ், தச - சமஸ்க்ரிதம், tesha - எபிரேயம், deca - கிரேக்கம் (Decapolis- பத்து நகரங்கள்), Decem - இலத்தீன், Dieci - இத்தாலி,Ten - ஆங்கிலம்.

பாழ் எண் (0)
1. Zero அ Cipher என்றழைக்கப்படும் எண் பரிபாடலில் பாழ் எனப்படுகிறது. பாழாய்ப்போ என்றால் ஒன்றுமில்லாமல் போ என்று நமக்குத்தெரியும்.
2. இதற்கு இன்னொரு பெயர் சுன்னம். சுன்னம் என்றால் வளைவு என்று பொருள். சுனை - வளைந்தோடும் காட்டருவி. சுனுக்கு சுந்தரி - வளைந்து நெளிந்து நடக்கும் பெண். சுன், சுனி - வளைந்த வளையங்களைக்கொண்ட காரி அல்லது சனி கிரகம். 
http://3.bp.blogspot.com/-nkHl59uCDcE/U1L1-1xWObI/AAAAAAAAB7w/k4Qf8X7zdj8/s1600/saturn.jpg


சுனி தான் சனி ஆகிவிட்டது. சுனிப்பாழ் - வளைவுக்குள் உள்ள வெற்றிடம். சுனிப்பாழ் - சுப்பாழ் - சுப்பார். அரபு மொழியில் (Zifr) சிப்பர், மேலை நாட்டில் சைபர். Cipher என்பதிலிருந்து Zero என்கிறது Oxford Dictionary ப. 1070.
3. பாழ் என்ற சொல்லை வட இந்தியர் உச்சரிக்க முடியாததால் ழ் என்பது ஜ் ஆகி பாழ் - பூஜ் - பூஜ்யம் ஆகிவிட்டது. 

ஒரு சில முக்கிய ஐரோப்பிய மொழிகளில் எண்களுக்கான வார்த்தைகள் தரப்பட்டுள்ளது. ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். இன்னும் பல மொழிகள் சேர்க்கலாம், ஆனால், அதிகம் இடம் தேவைப்படும் என்பதால் ஐரோப்பிய மொழிகளோடு நிறுத்திக்கொள்வோம்.

1. பிரெஞ்சு எண்கள் 
http://2.bp.blogspot.com/-e8yJlVWY8FE/U1P_gRC_S2I/AAAAAAAAB-U/_GIwjqn3j0o/s1600/french.jpg

2.ஜெர்மானிய எண்கள்
http://3.bp.blogspot.com/-okraXSJ39cE/U1P_47K-QtI/AAAAAAAAB-c/u53w36zJsoY/s1600/german.jpg
   3. கிரேக்க எண்கள்    
http://3.bp.blogspot.com/-8YOGU7oYhxg/U1QAM6BdT2I/AAAAAAAAB-k/EbbWacTVAPk/s1600/greek.jpg
     
4. இலத்தீன் எண்கள் 
http://2.bp.blogspot.com/-EXBSNGv6WBs/U1QAang6kSI/AAAAAAAAB-s/il3gIUcB3uo/s1600/latin.jpg
                                                                                
      5. இத்தாலிய எண்கள் 
http://4.bp.blogspot.com/-jBVAyLevgWw/U1QAmmnI1zI/AAAAAAAAB-0/u-49E5-cG8E/s1600/italian.jpg
                                                    
6. ஸ்பானிய எண்கள் 
http://3.bp.blogspot.com/-RHcrjY633GE/U1QA4fJSk6I/AAAAAAAAB-8/7xE0UBAFv7k/s1600/spanish.gif
 
7. போர்த்துகேசிய எண்கள் 
http://1.bp.blogspot.com/-8CDzRSVvb0o/U1QBQ5RzptI/AAAAAAAAB_E/eAF7hu9VA_I/s1600/portuguese.jpg


0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு