அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ராஜிவ் காந்தியின் அந்த நாள்

அன்று நடந்த கொடூரத்தை யாரும் எழிதில் மறக்க முடியாது இரவு பத்து முப்பது மணி அன்புத்தலைவர் இராஜீவ் காந்திக்குத் தெரியாது அது தான் தனது கடைசி நிமிடம் என ஸ்ரீபெரும்புதூரில் அன்னை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அத்தலைவர் அங்கு அமைக்கபட்ட மேடைஏற வந்தார் கூட்டம் இளய தலைமுறைத் தலைவரைச் சூழ்ந்து மாலை சால்வையை அன்புத்தலைவருக்கு ஆசையாக பாசத்துடன் அணிவிக்க நெருங்குகிறது அந்தோ அங்கே ஒரு சண்டாளி கருணாநிதி நடையில் சொன்னால் வட்டமிடும் கழுகு வாய்பிளந்து நிற்கு ஓணாய் இவர்களிலும் கொடியவளாய் வெறும் கண்ணால் கண்டால் மணம் மாரிவிடும் என கண்ணாடி அணிந்து வந்தாளோ!!! பாவி கையில் வைத்திருந்த சந்தன மாலையை ராஜிவ் கழுத்தில் அணிவிக்கிறாள். அதோடு குனிந்து அவர் காலைத் தொட முயல்கிறார். சட்டென்று ஒரு சத்தம். அந்த இடமே புகைமூட்டத்துடன் அதிர்கிறது. சற்று முன் புன்னகைத்தபடி இருந்த தலைவர் தரையில் விழுந்து கிடக்கிறார் முகம் மரக்கூழ் போலகிவிட்டது. அவருடன் 16 நபர்கள் பலர் காயம்..

இந்தியாவை ஏன் உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருந்த அந்த சண்டாளியின் உடல் சிதைந்து தலைப்பகுதியும் , இரண்டு கால்பகுதியும் , சற்று தூரத்தில் கிடந்தது . அது மனித வெடிகுண்டாக வந்த தனுவின் உடல்தான் என்பதைப் பின்னர்நடந்த விசாரனை புலப்படுத்தியது. சம்பவம் நடந்த ஒரு சில தினங்களிலேயே 'விடுதலைப் புலிகள் தான் இதற்குக் காரணம்'

22 - ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார். ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது "விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்" என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.


விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு "மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்" என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார். அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார்.


பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.


அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார். இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார். அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள்.


கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன. ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை.


தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை. புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள்.


இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். "ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?" என்று கதறினார் மூப்பனார். ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.


விடுதலைப் புலிகளின் ஒப்புதல் குறித்து நான் ஆச்சரியமடையவில்லை. ஆரம்பத்திலிருந்து இதுவே உண்மை என்பதும் ஒரே உண்மை என்பதும் எனக்குத் தெரியும - இந்திய முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கார்த்திகேயன்

இந்திய முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கார்த்திகேயன் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததை விடுதலைப் புலிகள் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டமைக்கு இந்தியாவின் எந்த அரசியல்வாதியும் காரணமாகவிருக்க முடியாதென தான் கருதுவதாக ராஜீவ் காந்தியின் படுகொலையை விசாரணை செய்த முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இணையத்தளமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக இந்திய அரசின் நிலைப்பாட்டில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் கருதியே விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ராஜீவ் காந்தியின் கொலையை புலிகள் ஏற்றுக் கொண்டமைக்கு முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பு உள்ளது எனக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் விடுதலைப் புலிகள் தற்போது இதனை ஒப்புக் கொள்வதற்கு இந்தியாவின் எந்த அரசியல்வாதியும் காரணமாக இருக்க முடியாது என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளும் அவைபோன்ற ஏனைய அமைப்புகளும் தமது நலன்கள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பது உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களுக்கு நன்கு தெரிந்த விடயம் எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு இது வரையில் எதனையும் செய்யவில்லை. இந்தியா - இலங்கையின் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு எதனையும் செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த நாகரிக நாடும் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தவே பாடுபடும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது படுகொலைகளுக்குத் தீர்வு காண்பது இந்தியாவின் நலன்களுக்கும் முழு உலகின் நலன்களுக்கும் உரியது எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெருமளவு அகதிகள் தமிழ்நாட்டுக்குள் வருவது எந்த நன்மையையும் கொண்டுவரவில்லை. அது வெடிகுண்டுகளை தென்னிந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இந்தியா சட்டரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் நெருக்கடிக்கு தீர்வுகாண அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரின் ஒப்புதல் இந்தக் கொலை தொடர்பான சட்டரீதியான சூழலில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை. தலைமறைவாக உள்ளவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்னமும் நீதிமன்றத்தின் முன்னிலையில் காத்திருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இவ்வாறு வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியின் படுகொலையை அவர்களே மேற்கொண்டனர் என்பது சர்வதேச அளவில் உறுதியாகியுள்ளதால் அவர்கள் தற்போதைய சூழலில் இதனை ஏற்றுக்கொள்வது நல்லது எனக் கருதியிருக்கலாம். சில தரப்பிடமிருந்து பாராட்டை இது கொண்டு வரும் எனவும் அவர்கள் கருதியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தளர்ச்சியடைந்திருக்கலாம் எனவும் அவர்கள் கருதியிருக்கலாம். மேலும் இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்யாவிடில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காது என எண்ணியிருக்கலாம் எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் ஒப்புதல் குறித்து நான் ஆச்சரியமடையவில்லை. ஆரம்பத்திலிருந்து இதுவே உண்மை என்பதும் ஒரே உண்மை என்பதும் எனக்குத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார் அவர்.

இந்தியாவின் உயர் நீதிமன்றத்தின் தலை சிறந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்பிற்குப் பின்னர் உலகின் நான்காவது பெரிய ஜனநாயகத்தின் உயர்நீதிமன்றம் வேறு எவரினதும் தீர்ப்பிற்காக நான் காத்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளிடமிருந்து கூட எமது நாட்டின் சுயநலமிக்க அரசியல்வாதிகள் பலர் இந்த விசாரணைகளை குழப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் உலகின் மிகவும் வலிமை வாய்ந்த பயங்கரவாத அமைப்பு இதனை ஏற்றுக் கொண்டுள்ளமை எனக்கு தொழில் ரீதியாக திருப்தியளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


ராஜிவின் கொலை14மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger செல்வன்

என்னார் ஐயா

தேதியை மாற்றி கூறிவீட்டீர்கள். இன்று ராஜிவின் பிறந்தநாள்.ராஜிவ் இறந்த நாள் மேமாதம் 22ம் தேதி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SurveySan

கடைசிப் பாதி பதிவு படிக்க முடியலியே? கச்சா முச்சா எழுத்துக்களா இருக்கு.

ராஜீவ் மரணம் பெரிய வலிதான்.
அன்றிலிருந்து இன்று வரை என் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, சம்பவம் நடந்தபோது, ராஜீவ் அருகில் வேறு எந்த மூத்த தலைவரும் நில்லாதது.

இவ்ளோ பெரிய தலைவரு வரும்போது அப்படி தனியாவா விடுவாங்க அவர? ஒண்ணும் பிரீல.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger விஜயன்

எந்த நாள்?

பிறந்த நாளை தெளிவாகச் சொல்லுங்களய்யா.

பதிவில் எங்கேயும் அதைப் பற்றி ஒரு வரி கூட காணோம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

மன்னிக்கவும் செல்வன் சென்னது சரிதான்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Kiran

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Kiran

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Bharathi

தமிழ் விக்கிபீடியாவில் இந்த பதிவினை வெளி இணைப்பாக சேர்த்திருக்கிறேன்.

தமிழ் விக்கிபீடியா கட்டுரையை மேலும் வளர்த்திடுக்க உதவுவீர்களா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger சீனு

//தேதியை மாற்றி கூறிவீட்டீர்கள். இன்று ராஜிவின் பிறந்தநாள்.ராஜிவ் இறந்த நாள் மேமாதம் 22ம் தேதி.//

ஐயையோ! மே 21 இல்ல?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

பாரதி அவ்வாறே செய்யுங்கள்
தமிழ் விக்கிபீடியாவில் எனது பங்கு

உண்டு
இரத்தினவேலு என்ற பெயரில்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சீனு
மன்னிக்கனும் செல்வன் சொன்னப்பவே சரி செய்து இருக்கவேண்டும் மறந்து விட்டேன்

 
மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

 
மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

 
மணிக்கு, எழுதியவர்: Blogger kkrn

t"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து" என்பதற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு டிரைவரை மன்னிக்கவும் பைலட்டை பெரிய பதவியில் உட்கார வைத்ததால்தான்(athuvum ivvalavu பெரிய naattil ) என் இனம் அழிய சில மல்லுகளின் சொல் கேட்டு நடந்தார் இவர் ..தண்டனை ஆண்டவன் கொடுத்ததாய் இருக்குமோ ?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger kkrn

I feel Driver Rajiv deserved that after witnessing lankan carnage

 

Post a Comment

<< முகப்பு