அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வரலாற்றின் துண்ப நிகழ்வுகள்

சதாம் தூக்கிலடப்பட்டார் செய்தி

வரலாற்றில் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏன் ஏற்படுகின்றன

முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் மற்றம் பலர்

ஒவ்வொருவராக நாம் நினைவுபடுத்துவோம்


பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார்.
அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை,
அதிபர் ஜியா நிராகரித்தார். தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சூரியனை பார்க்கவில்லை

7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார். அவர் மேலும் கூறுகையில், "பூட்டோ உணவு எதையும் சாப்பிட வில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது" என்று தெரிவித்தார்.

கண் கலங்கினார்

விசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார். "இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்" என்று அவர் முறையிட்டார்.

பூட்டோவின் மன உறுதி

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை. கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
ஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.

மனைவி மகள் கடைசி சந்திப்பு

பூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர். பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது. அதன்படி அவர்கள் 3.4.1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க மணி நேரம் தான் கொடுக்கப்படும். ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, "எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை" என்று பூட்டோ கூறினார்.

உலக நாடுகளை புறக்கணித்த ஜியா

பூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் காப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.

தூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான்.

பூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11.30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.

இரவோடு இரவாக

பொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.

கடைசி நேரம்

தூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.

கைகளை கட்டினார்கள்

பிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.

25 ரூபாய் கூலி

பூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.

தந்தைக்கு அருகில்

பூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா' அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உலக தலைவர்கள் கண்டனம்

பூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:

"பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்."

இந்திரா காந்தி கூறியதாவது:

"இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார்.
பூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.
பூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972.ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன்.
பாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.

5மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

மீதியையும் பதிவு செய்யுங்கள், இது காலத்துக்குத் தேவையான முக்கிய சாட்சியம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இலக்கியா!!
என்னதான் அதிகாரத்துடன் நாடாண்டாலும் கடைசியில் அவர்களது நிலமையைப் பார்த்தீர்களா? அரிச்சந்திரன் மயான காண்டத்தில் பாடுவானே அப்படித்தான் கொடுங்கோலன் என்ற கிட்லர் முஸோலினி இவர்களையும் பார்ப்போம் தினம் ஒன்றாக எழுதுவோம்.

 
மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

//வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள்//

இவர்களையும் சதாமையுமா ஒப்பிட போகிறீர்கள் ? நியாயமா ?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இல்லை நியாயமில்லை ஒருவகையில் என்றாலும் இவர்கள் அனைவருமே ஏகாதிபத்திநாடுகளினால் தூக்கில் ஏற்றப்பட்டவர்கள்.
இவர்களை தூக்கில் ஏற்ற இவர்கள் யார்? தவறுதானே

 
மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

//இவர்களை தூக்கில் ஏற்ற இவர்கள் யார்? தவறுதானே //

வேறு யார் செய்வது சார் ? ஒரு சர்வாதிகாரியால் ஆளப்படும் மக்கள் அவனால் கொல்லப்படும் மக்கள் , எதித்து கேள்வி கேட்பவனின் கிராமத்தையே விஷவாயுவால் கொல்லுபவனின் குடிகள் எப்படி அவனை எதிர்க்க இயலும் ?

அமரிக்க ஆக்கிரமிப்பு இல்லாவிட்டால் அவர்கள் வெளியேறுவதால் மட்டும் அங்கே ஜனநாயகமா திரும்ப போகிறது ?

மீண்டும் எவனாவது சர்வாரிகாரியோ கொமேனி போல இரு மத வெறியனோதான் வரபோகிறார்கள் .

சதாம் தண்டிக்க படுவது சரியென்பதால் அமரிக்க ஆதரவுநிலை என பொருள் இல்லை , அவர்கள் வந்த வேலை முடிந்தது , இனி அவர்கள் வெளியேரலாம் .

( பெட்ரோல் திருடும் வேலை அவர்களுக்கு பாக்கியுள்ளதால் வெளியேற வாந்ப்பில்லைதான்)

 

Post a Comment

<< முகப்பு