அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சனி, நவம்பர் 11, 2006

நெல் வயல் அழிப்பு

பன்னாட்டு கம்பெனி மாதிரி நெல் வயல் அழிப்பு கோவை அருகே விவசாயிகள் ஆவேசம் அதிரடி


கோவை அருகே பன்னாட்டு கம்பெனி சார்பில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெல் மாதிரி வயலை நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு சென்று அழித்தனர்.


பாரம்பரிய விவசாய பயிர்ரகங்களுக்கு மாற்றாக மரபணு மாற்றப்பட்ட விதைகளை உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. மரபணு மாற்றப் பட்ட பி.டி. பருத்திரகத்தை மகாராஷ் மகாராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாகிகோ நிறுவனம் அமெரிக்காவின் மான்ஸாண்டோ நிருவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது.


பி.டி. ரகங்களை நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்காது. சாதாரண ரகங்களை விட 3 மடங்கு அதிய விளைச்சலை தரக்கூடியது என்று கூறப்பட்டாலும், மரபணு மாற்றப்பட்ட ரகங்களில் உள்ள விஷத்தன்மை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும். மனிதஉடலு:க்கும், மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது என்றும் கூறி, உலகம் முழுவதும் இதற்கு எதிர்ப்ப கிளம்பி வருகிறது.


பி.டி. ரக பயிர்களில் விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும் விதைகம்பெனிகளிடம் இருந்தே வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து பி.டி.ரகங்களை பயிரிட்டால் பாரம்பரிய விதைகள் அழிந்து, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இந்நிலையில் மான்ஸாண்டோ நிறுவனம் அறிமுகப் படுத்திய பி.டி.ரக பருத்தியை பயிரிட்ட ஆந்திர விவசாயிகள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காமல் பெரும் நஷ்டமடைந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். பல விவசாயிகள் இழப்பீடு கோரி விதை கம்பெனனிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


ஆனால் இதை கண்டுகொள்ளாமல் மான்ஸண்டோ நிறுவனமும், மாகிகோ நிறுவனமும் இணைந்து இப்போது மரபணு மாற்றபட்ட பி.டி.நெல்ரகங்கள் குறித்த ஆராய்சியில் ஈடு பட்டு வருகின்றன.


இதற்காக உத்திரபிரதேசம், மகாராஷ்ட்டிரா, குஜராத், சட்டிஸ்கர்,அரியானா,மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய இடங்களில் மாதிரி வயல்களை அமைத்து பி.டி. நெல்பயிரிட்டுள்ளனர். இதற்கு விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்பகளும் கடும்ம எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


கடந்தசில தினங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் ராம்புரா என்ற கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெல்வயலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு சென்று அழித்தனர்.


இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஆலாந்துறை அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தில் 500க்கும் அதிகமான விவசாயிகள் திரண்டு, ரங்கராஜ் தோட்டத்தில் மாதிரி வயலில் இருந்த பி.டி. நெல் பயிர்களை பறித்து எறிந்தனர்.


சரியாக 30 நிமிடங்களில் பயிர்களை எல்லாம் அழித்தனர். இதில், உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து, தமிழக பசுமை இயக்க தலைவர் ஜீவானந்தம் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்திட்டம் நரசிம்மராவ் காலத்திலேயே ஆலோசிக்கட்டது அப்போதுஎதிர்ப்பு கிளம்பியது

5மறுமொழிகள்:

11 நவம்பர், 2006 22:14 மணிக்கு, எழுதியவர்: Blogger Sivabalan

அய்யா

விவசாயிகளின் போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டம் வெற்றி பெறட்டும்.

நானும் இது சம்பந்தமாக ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_116321702010117431.html

நன்றி

 
11 நவம்பர், 2006 23:50 மணிக்கு, எழுதியவர்: Blogger Kannabiran, Ravi Shankar (KRS)

பயனுள்ள பதிவு என்னார் ஐயா!

பசுமைப் புரட்சி செய்த நம் நாட்டில், இந்த மிரட்சிக்கு எல்லாம், இப்போது MS சுவாமிநாதன் போல் இன்னொருவர் தேவை! பயனுள்ள மாற்றங்களை வரவேற்று, மற்றவற்றைப் புறம் தள்ளும் நாள் என்னாளோ?

கோவை விவசாயிகள் முயற்சி தொடர வேண்டும். "களை" போல் பரவ வேண்டும்.

 
12 நவம்பர், 2006 04:50 மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

என் ஆர்!
இங்கு கூட இவ்வகை சோளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் தலைவர்; சிறை சென்று இப்போ முழு நேர அரசியல் வாதியாகிவிட்டார். பொன்முட்டை வாத்தாகத் தான் பல முடிவுகளை; சகல அரசும் எடுக்கிறது. செய்திக்கு நன்றி
யோகன் பாரிஸ்

 
12 நவம்பர், 2006 11:20 மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

//மரபணு மாற்றப்பட்ட ரகங்களில் உள்ள விஷத்தன்மை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும். மனிதஉடலு:க்கும், மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது//

மேல் விவரமோ சுட்டிகளோ தரமுடியுமா?

 
12 நவம்பர், 2006 15:46 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி
கண்ணபிரான்
யோகன் பாரிஸ்
ஓகை
சில ஆண்டுகளுக்கு முன்னமே இப்படி ஒரு விதை வரப்போவதாக சொன்னார்கள் அதை தடுக்க வேண்டும் என்றும் நமக்கு விதை வேண்டுமென்றால் அமெரிக்காவை எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்றும் அதாவது எந்த விவசாய விதைகள் வேண்டுமானாலும் அங்கிருந்துதான் வாங்க வேண்டும் என்றும் அந்த விதை சாகுபடி செய்தால் எந்த பூச்சிகளும்,பூஞ்சாள நோயும் நாசம் செய்யாது என்று பூச்சியைக் கொள்ளும் விசத்தன்மையுடன் தயாரிக்கப்பட்டதாம் அதாவது பெப்சியைப்போல. மண்ணின் தரத்தையும் கெடுக்கும் என்றும் சொல்லப்பட்டது அது எந்த அளவிற்கு உண்மைஎன்று தெரியவில்லை.

 

Post a Comment

<< முகப்பு