அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

விடைபெறுகிறேன்

அன்பு நன்நெஞ்சங்களே !ந்த நாள் இனியநாளாக இருக்கட்டும் என்று சொல்வது போல இந்த வாரம் இனிய வாரமாக இருக்க வேண்டும் என்று தான் தொகுத்தேன் அதிகமாக எழுதாமல் குறைவாகவே எழுதிஉங்கள் நல்ல நேரத்தை நான் கெடுக்காமல் இருந்தேன். என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ் மண நிர்வாகிகளுக்கு நன்றியையும் எனது ஆக்கங்களை படித்து விமர்சித்த நல்ல உள்ளங்களுக்கும் என நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது ஊர் துவாகுடி என்கிற துழாய்குடி இது திருச்சி தஞ்சைக்கு இடையே திருச்சியிலிருந்து 16 கிமீ. யில் உள்ளது இங்கு தான் பாதர மிகு மின் நிலையம் உள்ளது பல சிறு தொழிற்சாலைகளும் உண்டு.


பல அண்டுகளுக்கு முன்னர் புஞ்சைகாடுகளும் வனங்களும் நிரைந்த ஊர் தான்; விவசாயம் தான் முக்கிய தொழில் பல ஏறிகள் உண்டு மழைபெய்தால்தான் விவசாயம் நல்ல மழைபெய்தால் நஞ்சை சிறு மழைபெய்தால் புஞ்சை .மக்கள் சந்தோசமாக வாழ்கையை ஓட்டி வந்தனர்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இரணுமுகாம் இங்கும் வைத்திருந்தனர் மக்களின் புஞ்சை நிலங்களில் அதற்கு குத்தகையாக ஏக்கருக்கு ஒரு அணா என நினைக்கிறேன் அது சரியாகத் தெரியவில்லை. அவர்கள் குளிப்பதற்கு ஒரு மூங்கிலை இரண்டாகப் பிளந்து பிஸ்கட் டின் இரண்டிலும் தண்ணீர் எடுத்து காவடி போல கொண்டு கொடுப்பர் ஒரு டின் தண்ணீருக்க அரையணா காசு. கிணருகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கொடுத்து சம்பாதித்து வந்தனர். ஆனால் அன்று இருந்து வெள்ளைய இராணுவத்தினர் ரொப்பவும் கெளரவமாக நடந்தனர். ஒரு முறை கிராமத்திற்குள் சில படையினர் வர மக்கள் பயந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். பட்டாளத்தான் வருகிறான் வந்துட்டான் பட்டாளத்தான் என சத்தம் போட ஆங்கிலம் தெரிந்தவர்கள் வந்து,' இங்கு கிராமத்திற்குள் நீங்கள் வரக்கூடாது' என எடுத்துச் சொல்லவும் அவர்கள் சென்று விட்டனர். அதற்கு பிறகு யாரும் வரவில்லை.இது நான் கேள்விப்பட்டது.


எங்கள் கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் அய்யனார், செல்லாயி அம்மனுக்கு தேர் திருவிழா எடுத்தனர் ஒரு மாதம் நடைபெற்றது. அந்த காலத்தில் இருந்தது போல் இல்லை யென்றாலும் பராவயில்லை.


துப்பாக்கித் தொழிற்சாலைக்கும் பரதமிகுமின் நிலையத்திற்கம் இடையே கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு குளங்களுக்க தண்ணீர் கொண்டு வரப்பட்டது இது பெருந்தலைவரின் சாதணைதான். இதற்கு பிறகு தான் மழையில்லையென்றாலும் நஞ்சை சாகுபடி செய்யப்பட்டது அதன் மதிப்பீடு என்ன வென்று தெரியவில்லை ஆனால் 20 ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 11 ரூபாய் நாங்கள் அரசுக்கு பெட்டர்மெண்ட் லெவியாக செலுத்தி வந்தோம் அதாவது விவசாயத்திற்கு அரசு செலவழித்த பணத்தை எங்களிடம் வசூல் செய்து விடும்.

எங்கள் ஊருக்கும் தெற்கு பக்கத்தில் உள்ளவர்கள் (திருடர்கள்) இன்று BHEL இருக்கும் பக்கத்தில் இருந்து ஐடிஐ இருக்கும் இடம் அதாவது அன்று 1930 என நினைக்கிறேன் மூதரிஞர் ராஜாஜி திறந்து வைத்து வானொலி நிலையம் இருந்த இடம் வரை கோட்டைக்குச் சென்று நெல் விற்றுவிட்டு வரும் விவசாயிகள் வரிசையாக ஐந்து வண்டிக்கு மேல் வரும் முதல் வண்டிகாரர் தூங்கமல் வண்டியை ஓட்டிவருவார் மற்ற வண்டிகாரர்கள் வண்டியில் படுத்து தூங்கிக் கொண்டு வருவார்கள். கடைசி வணிடியின் நுகத்தடியை இருவர் பிடித்து இழுத்துக்கொண்டு போவார்கள் மற்ற இரண்டு திருடர்களும் இரண்டு மாட்டையும் அவிழ்த்து பிடித்துக்கொண்டு காட்டு வழியே சென்றுவிடுவார்கள் சற்று தூரம்வரை அவர்கள் வண்டியை இழுத்துக் கொண்டு சென்று கீழே வைத்துவிட்டு இவர்களும் காட்டில் இறங்கிவிடுவர். அந்த இடம் வரும்போது மட்டும் யாரும் தூங்கக் கூடாது என வருவார்கள். அந்த காலங்களில் போக்கு வரத்து அதிகம் இல்லை எனக்கு தெரிந்தே 15முதல் 30 நிமிடம் வரை மோட்டார் வண்டிகள் வராது ட்ரங்ரோடுதான். அப்பொழுது அதிக வேகமாச் செல்லும் போரூந்து express bus அதைத்தான் கலைஞர் த்துரிதவண்டி என மொழி மாற்றி பிறகு அது தமிழ் மொழியில்லை என சொன்னபிறகு விறைவு வண்டி என மாற்றினார். அந்த வண்டி வந்தால் நாங்கள் எல்லாம் ரோட்டில் சென்றால் சற்று தள்ளிப் போய்விடுவோம். கோகுழ் கூட தனது கதையில் எங்கள் ஊரை மையமாக வைத்து ராஜகேசரி என்ற கதையை எழுதியுள்ளார்.

எங்கள் ஊருக்கு தவடி என்றும் ஒரு பெயர் உண்டு இப்பெயரில் இலங்கையிலும் ஒரு ஊர் உண்டு. தாவடி என எதற்க பெயர் வந்தது என்று தெரியவில்லை ஆனால் அதன் விளக்கம் சண்டைநடக்கும் இடம் சைனியத்தை நிருத்தி வைத்த இடம் என அர்த்தமுண்டு. துழாய்க்குடி என்றும் அந்த காலத்தில் பெயர் இருந்ததாக முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறுகிறது. துழாய் என்றால் துளசி எங்கள் ஊர் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் தலைமையாகும் அந்த காலத்தில் துளசிமாநாடு என இந்த பகுதிக்கு வைத்து துளசிமாநாட்டுக்குத் தலைநகர் துழாய்க்குடி என வைத்து அது மாற்றமடைந்து துவாக்குடி யாக மாறிவிட்டது.

பிறகு மீதத்தை எழுதுகிறேன்.


நன்றி வணக்கம்

தங்கள்

என்னார

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger leomohan

என்ன மலரும் நினைவுகளா?
"மார்கழியில் ஒரு காலை....நிறைவு பகுதி":

ஹா ஹா ஹா ஆம் ஐயா.

 

Post a Comment

<< முகப்பு