அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பூலித்தேவன்






மறவர்கள் வாழ்த்த, தென்னகத்து புகழ்

இந்திய விடுதலைப் புரச்சியாளன்

தாங்கா விளையுளும் தண்டமிழ் விளையுளும்

பாங்கமை சிறப்புறம் தென்பாண்டிய நெற்கட்டான் செவ்வல்

தந்த செம்மை வீரனாம் வெங்கொடுமை சாக்காட்டில்

விளைந்த வீரன் காத்தப்ப பூலித்தேவன் கோலோச் சுங்கால்

அண்டை நாட்டையும் காக்கும் பெருங்கடன் கொண்டோன்.


உருவினும் உரத்தினும் பெரியோன் ஆறடி உயரம்

முறம்போன்ற மார்பு முத்துப்போன்ற பல்

முழங்கால் வரை கை திண்தோள் உடையவன்

ஜோதிபேன்ற முகமிருக்கும்

கரியொடு மோதிய ராவணன் போல் புலியோடும் மோதும் வீரனவன்

பன்னிறு அகவையில் அரசுரிமையேற்றான்

தந்தையோ சித்திரபுத்திரர் அறுபத்து மூன்றாண்டு ஆட்ச்சி செய்தார்

ஈராறு வயதில் இணையில்லா கல்வி, கரி, பரி ஏற்றம்

மல்,வாள், வில், வேல் சிலம்பம், கவண், வல்லயம் தெளிவர கற்றான்

மனந்தார் மாமன் மகளை பெற்றார் மக்களை


இலவந்தூர் , ஈராட்சி என்ற ஊர்எல்லை தொல்லை நீக்க சென்றவேலையில் சிவகிரியான் ஆவினைக் கவர்ந்த சேதி கேட்டு புயலென பாய்ந்து மாடுகளை கவர்ந்த சிவகிரியானை துரத்தியடித்து மீட்டனன் பசுக்களை.


மதுரைதனில் மனிதர்களை மாய்த மாவேங்கைதனை மடிக்க

மாமன்னன் அழைப்புவிடுத்தான் குருநில மன்னர்களுக்கு

புலி கிலி கொண்ட பாளையர்கள் யாரும் வாராதிருக்க

தன்னந்தனியனாய் குத்துவாள் ,கூர்வாள், வேல், நெடுவாளின்றி

உயர்ந்த உருவம் பறந்த கைகள் விரிந்த மார்பு அஞ்சா நெஞ்சன்

நடந்தான் புலிப் புதர் நோக்கி;

அந்தோ பாய்ந்தது ஓர் பாய்ச்சல் வழிவிட்டு இரண்டாம் பாய்ச்லுக்கு

பின்னடி வைத்து புலிதன் பின்னங்கால்களை கவ்விப்பிடித்து அடித்தானே கோட்டடியாக நெற்கதிர் அடிப்பது போல் தலை நசுங்கி மாண்டது புலி;

மதுரை மன்னன் அளித்தான் 'வடக்காத்தான் ' பட்டம்.


பாளையத்தின் வருவாயை தானெடுத்தக்கொள்ளாமல்

நாட்டுக்களித்த நல்லவன் கோயில் கொடை அதிகமே செய்தான்

பூலுடையார் கோயில் , சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவ நல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் , மதுரை சொக்கநாதர் கோயில்களுக்கு திருப்பணியும்

தான் நெடும்பயணிக்கும் தங்க சத்திரம் உண்ண உணவு

மரம், நீர் நிலைகள், பாசன கால்வாய், மரங்கள் நட்டான்

தென்னகத்து அசோகன்

மக்கள் எக்குறையுமின்றி மாதம் மும்மாரி பொழிய

தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும்

சங்கினமும் நீரொடு உலா வரும் காட்சியைக் கண்டான்

மக்கள் நலமுடன் தேர்திருவிழா, குடமுழுக்கு,

தெருக்கூத்து இத்தியாதி என மகிழ்ந்திருக்கும் வேலை தனில்


வந்தானே பாவி பறங்கித்தலையன் பெற்றானே வரிதண்டல்

உரிமைதனை ஆர்காடு நவாப்பிடம் பாய்ந்தானே நவீன ஆயுதங்களுடன் தென்னாட்டில் ஈரமிலா நெஞ்சுடனே.

வீரமிலா நெஞ்சினர் கட்டினர் கப்பம்

மறுத்தான் மறவர்குலத்து மாவீரன்.

தொடுத்தான் கும்பினி கர்னல்ஹெரான் தலைமையிலும்

ஆற்காடு நவாபின் அண்ணன்மாபூஸ்கான் தலைமையிலும்

ஏனைய பாளைய காரர்கள் கப்பங்கட்டி சரணடைய தனியொருவனா

போராட புறப்பட்டான் சீறிப்பாய்ந்தான் மாபூஸ்கான் அதே வேகத்தில்

அடிபட்ட பந்து போல் திரும்பிவந்தான் தோழ்வியோடு மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்பி

கொண்டு வந்தான் வெடிமருந்து, துப்பாக்கி,பீரங்கி

பலநாள் முயன்ற கோட்டையை தகர்க்க முடியா

பறங்கியரின் படை உணவு குறைகண்டு பாய்ந்தான்

எதிரி குறைகண்டு பாய்வது வீவேக வீரமல்லவா?

படைகளை சின்னாபின்னமாக்கி வெற்றி கண்டான்

பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த வெள்ளையன் மற்ற பாளையக்காரர்களை

தம்வசமாக்கி மாவீரை தனிமையாக்கி வெல்ல நினைத்தான்

மதம் மாரிய மருதநாயகம் யூசுப்கானாக எதிர்தான் தேவனை

பன்னிரு ஆண்டுகள் ஓய்வில்லாமல் போரிட்டமன்னனுக்கு

திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மனும் பாளையக்காரர்களும் மன்னரைக் கைவிட்டு விட்டார்கள், தளபதி வெண்ணிக் காலடி, முடேமியா வீரமரனமடைந்தனர்.

கடைசியில் வென்ற வெள்ளையர் தேவனை கைது செய்ய

சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட விரும்ப

கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் இறைவனை வழிபட

அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும்

கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார்

பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால்

"பூலிசிவஞானம்" ஆனார் .

1755- ல் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல்

1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும்,

1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும்,

1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும்,

1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும்

1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும்,

1857-ஆம் ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது.

வீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm

வாழ்க அவரது புகழ்

12மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger எம்.கே.குமார்

வாழ்க பூலித்தேவன் புகழ்!

அன்பன்
எம்.கே.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)

என்னார் ஐயா நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். வெறும் கையால் புலியைக் கொன்றான் பூலித்தேவன் என்று கேள்வியுற்றிருக்கிறேன்.

///
அந்தோ பாய்ந்தது ஓர் பாய்ச்சல் வழிவிட்டு இரண்டாம் பாய்ச்லுக்கு

பின்னடி வைத்து புலிதன் பின்னங்கால்களை கவ்விப்பிடித்து அடித்தானே கோட்டடியாக நெற்கதிர் அடிப்பது போல் தலை நசுங்கி மாண்டது புலி;
///

நல்லா சொல்லி இருக்கீங்க. பூலித்தேவனுக்கு வாழ்க்கை முழுக்க ஒரு கவிதையில் சொல்லி கவிதாஞ்சலி படைச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

எம்.கே. குமார்,குமரன்
இருவருக்கும் எனது நன்றிகள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

அருமையான வரலாறு அழகான கவிதையில்.

பூலித்தேவனைப் பலர் புலித்தேவன் என்பார்கள். நீங்களும் குறிப்பிட்டிருப்பதைப் போல பூலித்தேவன் என்பதுதான் சரி.

முதல் முறை வெள்ளையன் தோற்றுதான் போனான். இரண்டாம் முறை யூசுப்கானின் (மருதநாயகம்) சூழ்ச்சி வென்றது.

இந்திரா சௌந்திரராஜன் "ஒரு வழி ஐந்து வாசல்" என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். நெற்கட்டும்செவலையும் பூலித்தேவரையும் நடுவில் வைத்து. படித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

GR
படித்துப்பார்கிறேன் அப்படிப்பட்ட தியாகிகளை ஏன் மக்கள் மறந்தார்கள்என்று தெரியவில்லை நடிகர் திலகம் இல்லை யென்றால் கட்டபொம்முவையும் சிதம்பரத்தையும் மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மணியன்

//நடிகர் திலகம் இல்லை யென்றால் கட்டபொம்முவையும் சிதம்பரத்தையும் மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.//
உண்மைதான்.. சங்ககால வரலாற்றை பள்ளியில் பாடமாக்கியவர்கள் அண்மைக்கால வரலாற்றை பாடமாக்க மறந்ததும் காரணம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

மணியன்
//அண்மைக்கால வரலாற்றை பாடமாக்க மறந்ததும் காரணம்.//
இந்திய வரலாற்றில் அக்பர் அசோகன் ஒளரங்கசீப் இது வெல்லாம் வந்தது அதற்கு பின்தான் வரவில்லை. ஏன் இந்த இருட்டடிப்பு என தெரியவில்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கால்கரி சிவா

//நடிகர் திலகம் இல்லை யென்றால் கட்டபொம்முவையும் சிதம்பரத்தையும் மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.//


நிச்சயம் ஐயா.

பூலிதேவன் புகழ் பரவட்டும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

கால்கரி சிவா
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வெற்றி

என்னார் ஐயா,
அருமையான பதிவு. அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெற்றி
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

ஐயா!
இப்பேரைத் தவறாகப் "புலித் தேவன்" எனக் கேள்விப்பட்டுள்ளேன். பாரதமாதாவில் சுதந்திரத்திற்கு உழைத்த முன்னோடிகள், என்பதை அறிந்து ,பெருமையாகவுள்ளது; தங்கள் சொல்நடை அழகு.
யோகன் பாரிஸ்

 

Post a Comment

<< முகப்பு