அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சிருஷ்டி

பூத்துக் காய்ப்பது ஒரு வகை; பூக்காமல் காய்க்கும் மரங்கள் பலாமரம், அரசமரம், இத்தி, அத்தி போன்றவைகள் பூக்காமலே காய்க்கின்றன. எதையும் செய்ய ஒரு சக்தியுண்டு என்பதை மாய்கை காட்டுகின்றது. எல்லா பாம்பினங்களும் முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பது ஒழுங்கு. ஆனால் விரியன் பாம்போதன் சரீரத்தையே இழந்து குட்டிகளை உற்பத்தி செய்கின்றது. பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் வெளவாலோ குட்டி போட்டு பால் கொடுக்கின்றது. இது வெல்லாம் சிருஷ்டியின் வேடிக்கைகள். வெள்ளையானை, வெண்காக்கை, வெள்ளை மயில் இப்படி இயற்கைக்கு ஒரு சட்டமுண்டுவிளங்கினங்களுக்கு இரண்டு கண் சிவனுக்கு முக்கண், நான்முகன் ஆறுமுகம். ஏன் இருக்கக்கூடாது என்பது போல. நீரில் வாழும் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் சுரா, திமிங்கலமோ கடளுக்குள்ளேயே குட்டிபோட்டு பால் கொடுத்துவளர்க்கிறது. ஆமையோ கரையில் வந்து முட்டையிட்டு நினைத்த மாத்திரத்தில் அவையனைத்தும் குஞ்சாக ஓடிவந்து தண்ணீரில் இறங்குகிறது. முதலையம் இப்படித்தான் என நிணைக்கிறேன். இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால் சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது. அது ஆகாயத்திலேயே முட்டையிடுகின்றது. அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும் வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு வெளிவந்து மேல்நேக்கிப் பறக்கிறது. அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அவை பூமியைப் பார்த்ததே இல்லை. தொட்டதுமில்லை நிலவு ஒளியை உண்டு வாழ்வதாக சொல்வார்கள். சிருஷ்டியின் அதிசயம் பார்த்தீர்களா?

அடுத்து தான் பெற்ற பிளையையே காணாத தாய். பெண் பிள்ளை என்றால் தாயைக் காணமலே நெல் மணி எருக்கம் பால் ஊற்றி கொள்கிறார்கள் ஆனால் தான் பெற்ற பிள்ளையைப் பார்க்காமல் இறக்கும் தாய் விரியன் பாம்பு, நண்டு, கிளிஞ்சல் போன்றவை.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்

கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் -(ஒளவையார்)

இவைகள் எல்லாம் சிருஷ்டியிலுள்ள பல ரகசியங்கள். இன்னும் சொல்லாததும் சாதாரண மனிதனுக்குத் தெரியாததும், ஏகதேசமாகத் தெரிவதும் தேவகணம் அசுரகணம், பைசாசகணம் என்று சொல்லப்படுகிற மிருதுவான தெய்வீக தேவதூத வடிவங்களும், முரட்டுத்தனமான பெருங்காரியங்களைச் சாதிக்கத்தக்க முரட்டு கூறுகளும், பிறரைத் துன்புறுத்துதல் பயமுறுத்துதல் என்ற பிசாசுக் கூறுகளும் ஆகும், இவை பூலோக சிருஷ்டி சூரிய மண்டலம், சந்திரமண்டலம், கிரகமண்டலம், நட்சத்திர மண்டலம் இவைகளிலுள்ள வசிப்புகள் பல. சிருஷ்டிகள் பல திறப்பட்டவை. இவைகளை விஞ்ஞானம் காண முயற்சிக்கிறது. ஒரு பொழுதும் காண மாட்டாது. இவை யோகியும் ஞானியும் மட்டுமே காணமுடிந்தவை. அது விஞ்ஞானத்தாலல்ல; அதற்கப்பாற்பட்ட மெஞ்ஞானத்தால்.


தேங்காய்

தேங்காயை மட்டையோடு கொண்டு வந்து அதை உரித்து அதன் பின்னால் உடைக்கவேண்டும் என்பதுதான் ஆகமவிதி. ஆனால், அப்படிச் செய்ய நேரமாகும். ஆலயமும் குப்பை ஆகும். இதற்குப் பதிலாகத்தான் மட்டையின் பிரதிநிதியான குடுமியை முதலிலே பிய்த்துவிட்டு செளகரியத்திற்காக இப்பொழுது மோளையாகக் கொண்டு வருபவர்களும்உண்டு. உடைப்பதற்கு முன் பிய்த்து விடுகிற ஆகமவிதி தெரியாத பட்டர்களும் உண்டு. அது மிக அபச்சாரம். அது குடுமியோடு வந்து அந்த மட்டையின் பிரதிநிதியாக அது நின்று அதற்குள் இருக்கின்ற சிரட்டையானது உடைபட்டதன் பிறகு தான் அந்தக் குடுமி பிய்க்கபட வேண்டும். அது பிய்க்கபட்ட பின் அங்கே தெரிவது என்ன? கண்ணாத் தோன்றி சிரட்டையாக நின்று ஒன்றும் பிரயோஜனம் அற்றதாக உள்ளது. அதில் இருக்கின்ற ஒரு கண்தான் உரத்தைப் பெறுவதற்கும், உள்ளே இருக்கிற தண்ணீரைப் பெறுவதற்கும், பருப்பை அணுகுவதற்கும் அதனுடைய வர்க்கம் முளையாக வருவதற்கும் பாத்தியாக இருக்கின்ற கண் ஆகும்.



இம்மாதிரியாக முகத்தில் இருக்கின்ற கண் சிரட்டையை போல் வீண்கண். இந்தக் கண்ணை வைத்து வாழ்கின்ற நீ தூலசரீரமாகின்ற மட்டையை நீக்கி இச்சாவடிவமாக இருக்கின்ற பாதைக்காகவோ, மனமாமகிய சிரட்டை போன்ற கடினத்தைத் தாண்டி அதற்குள் இருக்கின்ற புத்தியின் வடிவமான வெண்மையைப் பெற்று (பருப்பு) அதற்குள் இருக்கிற சிதாகாசமான ஆகாசவடிவமாகிய கங்கையை அந்தத் தண்ணீரையே பரோட்சிப்பதும் உண்டு. தண்ணீர் கிடையாது போனால் அதை நீ பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு அரை அணா தேங்காயில் இந்த ஆகம விதியை பெரியோர்கள் வைத்தார்கள். இத்தனையும் இருக்கின்றது. இந்தனைக்குள்ளாக வாழ வேண்டும் மனித வர்க்கம் என்பது சான்றோர்கள் வைத்தகருத்தாகும்.

23மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger நாமக்கல் சிபி

இயற்கை இத்தனை அதிசயங்களை தன்னுள் கொண்டுள்ளதா?

ஆச்சரியமூட்டும் தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி ஐயா

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெட்டிப்பயல் அவர்களே
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஆவி அம்மணி

நல்ல தகவல்கள்!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR. SUBBIAH

பலா பூக்காமல் காய்க்கும என்பது பொன்ற இயற்கையின் அற்புதங்கள் பலவற்றைத்தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். படிக்கப் படிக்க வியக்க வைக்கிறது உங்களுடைய இந்தப் பதிவு
நன்றி, பாராட்டுக்கள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மலைநாடான்

//சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது. அது ஆகாயத்திலேயே முட்டையிடுகின்றது. அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும் வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு வெளிவந்து மேல்நேக்கிப் பறக்கிறது. அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அவை பூமியைப் பார்த்ததே இல்லை. தொட்டதுமில்லை நிலவு ஒளியை உண்டு வாழ்வதாக சொல்வார்கள் //

என்னார்!

சக்ரவாகப்பறவைகள் பறக்கும் அதி உயரத்திலிருந்தே, பூமியில் உள்ள தன் இரையைக்குறிவைத்து வந்து கொத்திச் சென்றுவிடும் என்றுதான் வாசித்துள்ளேன். மற்றும்படி நீங்கள் கூறியுள்ள் யாவையும், படைப்பின், அல்லது உயிர்ப்பின் மகத்துவங்களே.

நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கோவி.கண்ணன் [GK]

என்னார்,
சிருஷ்டி நல்ல கட்டுரை !
அதற்கு பாராட்டுக்கள்.

சில விசயங்கள் படித்தது இங்கே பகிர்ந்து கொள்கிறேன், படைப்பு என்று எதுவும் கிடையாது, தொடர்ந்து உருமாற்றம்தான் நிகழ்கிறது. மனிதனைப் படைக்கும் போது, கறுப்பர், இந்தியர், வெள்ளையர், மங்கோலியர் என்று தனித் தனியாகவா கடவுள் படைத்தார்? காலவெள்ளத்தில் நிகழ்ந்த உருமாற்றம் தானே. தத்துவங்கள் நிறைந்த நம் நாடு தரித்திரங்களிலும் முன்னால் நிற்கிறது என்பதை நினைவு கொள்க. தேங்காய் குடுமியில் ஏதோ இருக்கிறது என்ற சூட்சமம் ஒரு வேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது சோறு போடுமா ? வாழ்வியலுக்கு உதவாத தத்துவங்கள் வெறும் வரட்டு வாதங்களே. இது போல் தத்துவங்கள் எதுவுமே இல்லாது, பொருளியல் குறித்து கவலைப்பட்டும், அதற்கான திட்டம் வகுத்து நடைமுறைப் படுத்தும் நாட்டில் தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாம் இன்னும் பழம் பெருமை பேசி அவற்றில் எதோ இருக்கிறது என்று கூறியே காலத்தை ஓட்டுகிறோம். அத்தகைய தத்துவங்கள் எக்காலத்திலாவது நமக்கோ, நம் முன்னோர்களுக்காக பயன்பட்டிருக்கிறதா என்றால் அது இல்லை. நான் சமயம் சார்ந்த தத்துவங்களைத் தான் கூறுகிறேன். மற்றபடி வாழ்வியல் நூலான திருக்குறளை போற்றவே செய்கிறேன்.

உங்கள் பதிவைப் பற்றிய கருத்துக்கள் அல்ல. அதை திசைத்திருப்பும் நோக்கமும் அல்ல. என் எண்ணங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)

இயற்கையின் அதிசயங்கள் மிக மிக ஆச்சர்யமானதுதான். எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்த தகவல் 10,00,000 பூச்சிகளுக்கு ஒரு மனிதன் தான் பூமியில் இருக்கிறான் என்பதும், பூமியில் உள்ள சிறு பூச்சிகளின் மொத்த எடை உலகில் உள்ள மற்ற எல்லா மிருகங்களின் எடையை விட அதிகம் என்பதுதான்.

///
சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது
///

சக்கரவாகம் என்பது அன்னப் பறவை போல இலக்கியங்களில் மட்டுமே வரும் கற்பனைப் பறவை தான் இல்லையா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger சிவமுருகன்

சிருஷ்டிக்கு தான் எத்தனை, எத்தனை விளக்கங்கள், எத்தனை வேலைகள். அருமை என்னார் ஐயா.

தந்ததற்கு நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வெற்றி

என்னார் ஐயா,
மிகவும் நல்ல பதிவு. உண்மையில் இவற்றையெல்லாம் என்ணிப்பார்க்கும் போது மிகவும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

//இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால் சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது. அது ஆகாயத்திலேயே முட்டையிடுகின்றது. அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும் வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு வெளிவந்து மேல்நேக்கிப் பறக்கிறது. அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அவை பூமியைப் பார்த்ததே இல்லை. தொட்டதுமில்லை நிலவு ஒளியை உண்டு வாழ்வதாக சொல்வார்கள்//

நான் சின்னப்பெடியனாக இருந்த போது எனது ஆச்சி [ அம்மாவின் தாயார்] இப் பறவையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆனால், பின்னர் வளர்ந்த பின், இது கற்பனையென்றே நினைத்திருந்தேன். உண்மையில் இப்படி ஒரு பறவையினம் இருக்கிறது என்பதைப் படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இப் பறவை உலகின் எப்பகுதிகளில் வாழ்கிறது? என்ன வடிவில்[உருவ அமைப்பு] இருக்கிறது என்பது பற்றி உங்களிடம் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கோவி.கண்ணன் [GK]

என்னார்,
சிருஷ்டி நல்ல கட்டுரை !
அதற்கு பாராட்டுக்கள்.

சில விசயங்கள் படித்தது இங்கே பகிர்ந்து கொள்கிறேன், படைப்பு என்று எதுவும் கிடையாது, தொடர்ந்து உருமாற்றம்தான் நிகழ்கிறது. மனிதனைப் படைக்கும் போது, கறுப்பர், இந்தியர், வெள்ளையர், மங்கோலியர் என்று தனித் தனியாகவா கடவுள் படைத்தார்? காலவெள்ளத்தில் நிகழ்ந்த உருமாற்றம் தானே. தத்துவங்கள் நிறைந்த நம் நாடு தரித்திரங்களிலும் முன்னால் நிற்கிறது என்பதை நினைவு கொள்க. தேங்காய் குடுமியில் ஏதோ இருக்கிறது என்ற சூட்சமம் ஒரு வேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது சோறு போடுமா ? வாழ்வியலுக்கு உதவாத தத்துவங்கள் வெறும் வரட்டு வாதங்களே. இது போல் தத்துவங்கள் எதுவுமே இல்லாது, பொருளியல் குறித்து கவலைப்பட்டும், அதற்கான திட்டம் வகுத்து நடைமுறைப் படுத்தும் நாட்டில் தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாம் இன்னும் பழம் பெருமை பேசி அவற்றில் எதோ இருக்கிறது என்று கூறியே காலத்தை ஓட்டுகிறோம். அத்தகைய தத்துவங்கள் எக்காலத்திலாவது நமக்கோ, நம் முன்னோர்களுக்காக பயன்பட்டிருக்கிறதா என்றால் அது இல்லை. நான் சமயம் சார்ந்த தத்துவங்களைத் தான் கூறுகிறேன். மற்றபடி வாழ்வியல் நூலான திருக்குறளை போற்றவே செய்கிறேன்.

உங்கள் பதிவைப் பற்றிய கருத்துக்கள் அல்ல. அதை திசைத்திருப்பும் நோக்கமும் அல்ல.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அமானுஷ்ய ஆவி
நன்றி

ஆசிரியர் சுப்பையா அவர்களுக்கும் நன்றி

குமரன்
//சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது//
எதுவும் இல்லாமல் வராதது கற்பனையாக இருக்க முடியாது என்பது எனது முடிவு.

சிவமுருகன்
நன்றி

கோவி.கண்ணன்
நாம் வீடு கட்டுகிறோம் அதுவும்ஒருவகையில் உருமாற்றம் தான் அந்த வீட்டைக்கட்டுபவர் கொத்தநார் அந்த கொத்தநாரை வேலைவாங்கியவர் நாம் ஆக நாம் தான் அந்த வீட்டைப் படைத்தோம்.
முன்னவர்கள் அனுபவ ரீதியாக கண்ட அனுபவங்களைத்தான் எழுதி, சொல்லி வைத்தனர். உதாரணமாக அஷ்டமியில் ஒரு காரியம் செய்தால் அந்த காரியம் சிறப்பாக நடைபெறுவதில்லை அல்லது அதை நடைமுறைப்படுத்த கஷ்டப் படவேண்டிருக்கிறது. எனது நண்பர் சொல்வார் 'இவ்வளவு மக்கள் எப்படி வந்தனர் என்று தெரியுமா ஆடு, மாடுகள் எல்லாம் மனிதர்களாக பிறந்து விட்டது அது தான் ஆடுமாடுகள் குறைந்துவிட்டது' என்பார் சிலர் தேவையற்ற மூடநம்பிக்கையிலும் இருப்பர் அது வேறு.

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மெளலி (மதுரையம்பதி)

கோவியாரே,

தாங்கள் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்ததுண்டா?...

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மெளலி (மதுரையம்பதி)

மிக ஆச்சரியமான தகவல்களை தந்துள்ளீர்கள்....நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Sud Gopal

பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

என் ஆர்!
படைப்பு ஆச்சர்யம் நிறைந்தது. இதைப்பற்றி தொலைக்காட்சிக்கு முன்; நான் வாய்வழி பெரியோரால் கேட்ட பல சேதிகள்; இப்போ எனக்கு சிரிப்பை வரவழைக்கும். கற்பனை; கட்டுக் கதையும் இப்போ நவீன உபகரணங்களால் தெளிவு படுத்தப்படுகின்றன. சக்கரவாகப் பறவை ஓர் கற்பனையே; ஆனால் குமரன் குறிப்பிட்டது போல் அன்னம் கற்பனையல்ல! நிசமாக உண்டு. ஆனால் பாலும் நீரும் பிரித்து உண்ணும் என்பது அதீத கற்பனை!!!!அன்னத்தில் உணவு பாலல்ல. வளர்ப்பன்னம் கூட பால் கொடுத்து வளர்ப்பதில்லை.
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

மெளல்ஸ், சுதர்ஸன் கோபால் இருவருக்கும் நன்றி

ஜான்
சக்கரவாக பறவை நிலவு ஒளியை உண்டு வாழும் என்பது தான் நம்ம முடியவில்லை.
ஆனால் முன்னோர் சொன்னதை நம்பாலிருக்கவும் முடியவில்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger தருமி

சிருஷ்டியின் அதிசயம் பார்த்தீர்களா? //

முதல் பத்தி மட்டுமே வாசித்தேன். நீங்கள் பலவற்றைப் போட்டுக் குழப்பியுள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது. கற்பனையான விஷயங்கள், தவறான அறிவியல் செய்திகள் ( சான்றாக, பறவைகளோடு வெளவாலைச் சேர்ப்பது; திமிங்கிலங்களோடு மீன்களைச் சேர்த்துக் குழப்புவது என்று...) இவைகளின் தொகுப்பாக இருக்கிறது.

குறை சொல்லவில்லை; குற்றங்களைக் குறிப்பிடுகிறேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

தருமி
குழப்பினால் தான் தேடியது கிட்டும் பாற்கடலை குழப்பி அமுதம் கண்டது போல்
பறப்பது பறவை, தண்ணீரில் நீந்துவது மீன்.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இதில் ஒன்றை விட்டு விட்டேனே முட்டையிட்டு குஞ்சு பொறித்து பாலுட்டும் விளங்கு பிளாடிபஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

பிறப்பின் ரகசியத்தையும் இறப்பின் தடுப்பையும் மனிதனாலும் காண முடியும் என்று தெரியவில்லை.

கோவி, பயனுள்ள கருத்து என்றால்? பத்து ருவாய் கிடைக்கும் கருத்தா? பணவளம் மட்டுமல்ல...மனவளமும் பெற வேண்டும். அதற்குதான் தத்துவங்கள். காலப்போக்கில் தத்துவங்கள் திரிந்து போவதும் உண்டு. திரியாமல் இருப்பவைகளும் உண்டு. வேண்டியதை எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

மற்றபடி, சாமி கண்ணைக் குத்துமா என்ற பதிவில் என்னுடைய கருத்தையும் இட்டிருக்கிறேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கோவி.கண்ணன் [GK]

//கோவியாரே,

தாங்கள் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்ததுண்டா?... //

அர்த்தமுள்ள இந்துமதமும் படித்திருக்கிறேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

GR
தியாகராஜ பாகவதருக்கு கண்தெரியாமால் போய்விட்டது சமபுறம் மாரியம்மன்கோவிலில் அமர்ந்து பாடினாராம் கொஞ்சநேரம் கண்தெரிந்ததாம் மனிதனுடைய நம்பிக்கையே அவரை குணப்படுத்தும்
//சாமி கண்ணைக் குத்துமா//
இதன் தொடுப்பைக் கொடு்ங்கள்
நன்றி ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger தருமி

பறப்பது பறவை, தண்ணீரில் நீந்துவது மீன்.

:)
:)

 

Post a Comment

<< முகப்பு