அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மது சிந்துக் கலகம்

¯

இந்த வார(18-24-09-06)

தாரகை யாக தமிழ் மணம்

என்னை தேர்வு செய்துள்ளதற்கு

முதலில் அந்நிர்வாகிகளுக்கு நன்றியைத்

தெரிவித்துக்கொள்கிறேன்.எனது ஆக்கங்களுக்கு

முடிந்தவர்கள் தங்கள் கருத்துகளை வளமைபோல்

தெரிவிக்கலாம் .வேறு என்ன நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தங்களின் என்னார்

மது சிந்துக் கலகம்



இரண்டு ஆலமரங்கள் ஒரு காட்டில் இருந்தன. ஒரு மரத்தின் கிளைகளில் ஒரு தேன்ராட்டு (தேன்கூடு) இருந்தது.

இரண்டு மரத்தின் கீழ் இரண்டு நாட்டு மன்னர்கள் வேட்டையாடி களைத்து வந்து படைகளுடன் தங்கினர்.

தேன் கூட்டிலிருந்து ஒரு தேன் துளி கீழே விழுந்தது. அதில் ஒரு ஈ உட்கார்ந்தது. அந்த ஈயை ஒரு ஈப்புலி பாய்ந்து பிடித்தது. அந்த ஈபுலி மீது ஒரு பல்லி பாய்ந்தது. அப்போது பக்கத்தில் இருந்த நாய் அந்த பல்லியின் மேல் பாய இதைக்கண்ட அடுத்த ஆலமரத்தடியில் இருந்து அந்த நாட்டு மன்னன் படையில் இருந்து ஒரு நாய் இந்த நாய்மீது பாய்ந்தது. இரண்டுக்கும் சண்டை நடந்தது.

இந்த நாய்க்காரன் அந்த நாயை அடித்தான். அடிபட்ட நாய்க்காரன் அடித்தவனை அடித்தான். இரண்டு சேனைகளும் போர் செய்தது. காரணம் மற்றவர்களுக்குத்தெரியாமலே சண்டை நடந்தது.

இந்த நிலைமையில் விவரமற்ற சின்ன காரியத்திற்காக அதிக கேவலமான காரியம் நடந்து, அதன் மூலம் விபரீதமான விளைவுகள் வராமலிருப்பதற்கு இரண்டு மந்திரிகள் மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல் என்றிருந்த மந்திரிகள்:

இன்றைக்குள்ள மந்திரிகள் வரும் பொருள் சுருட்டல் என்ற நிலையில் உள்ள மந்திரிகள்.

அந்த மந்திரிகள் இரண்டுபோரும் சேனைக்கு முன் வந்து நின்றவுடன் சண்டை நின்றது. என்ன காரணம் என்று கேட்கவே எல்லோரும் சிரித்தார்கள்.

இது தான் மது சிந்துக் கலகம். ,இது போல் நாட்டில் எவ்வளவோ விளங்காத சண்டைகள் சச்சரவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சற்று நேரம் யோசித்தால் அச்சச்சரவுகளை விளக்கலாம்.

31மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger வெற்றி

என்னார் ஐயா,
நட்சத்திர வார வாழ்த்துக்கள். உங்களின் பல பதிவுகளைப் படித்துச் சுவைத்திருக்கிறேன். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். வாருங்கள். நல்ல பதிவுகளாகத் தாருங்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெற்றி
வாழ்த்துக்கு நன்றி தாங்கேட்டதை வழங்க சித்தமாக உள்ளேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

என்னார் ஐயா
நிறைந்த மகிழ்ச்சி.ஆன்மிகமும்,பல்சுவையுமாக தந்து எங்களை மகிழ்விப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.இந்த வாரம் இனி இனிய வாரம்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

செல்வன்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR. SUBBIAH

ஆகா, கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது!.
தமிழக அரசு வழங்க விருக்கும் 2 ஏக்கர் நிலம் கிடைத்ததைவிட, உண்மையிலேயே சந்தோசமாக இருக்கிறது
வழக்கம்போல சிறப்பாக எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்
வாத்தியார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சுப்பையா சார்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

ஆரம்பத்திலேயே களை கட்டிவிட்டது உங்கள் வாரம். தொடரட்டும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஓகை
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)

என்னார் ஐயா வாழ்த்துக்கள். அருமையான கதையுடன் வாரத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள். இந்த வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

என் ஆர் ஐயா!
நட்சத்திர வாழ்த்துக்கள்.
பல நல்ல விடயங்களைக் கூறுவீர்கள்;என எதிர் பார்க்கிறேன்.
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

குமரன், ஜான்
தங்கள் வாழ்த்திற்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நாமக்கல் சிபி

//சற்று நேரம் யோசித்தால் அச்சச்சரவுகளை விளக்கலாம்.
//

நல்ல கருத்துடன் வாரத்தை துவக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சிபி
நன்றி தங்கள் கருத்துக்கு

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மலைநாடான்

என்னார்!

உங்கள் நட்சத்திர வாரம் இனிதாய் அமைய நல்வாழ்த்துக்கள்.

நன்றி!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

மலை நாடன்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger சின்னக்குட்டி

உங்கள் நட்சத்திரம் வார சிறப்புற இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சின்னக்குட்டி
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

விண்மீன் வார வாழ்த்துகள் என்னார் ஐயா.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

குமரன்
வாழ்த்துக்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஞானம் சார்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மணியன்

என்னார் அவர்களே, உங்கள் பதிவுகள் பலவும் பயனுள்ளவை, கருத்து செறிந்தவை. இவ்வார எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் !!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

மணியன்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Sivabalan

அய்யா,

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சிவாபாலன்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சந்திரவதனா
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நாமக்கல் சிபி

என்னார் ஐயா,
வாழ்த்துக்கள். இந்த வாரம் இனிய வாரமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

என்னார் என்னும் இன்னார் இந்த வாரம் விண்மீனானார். மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

சிந்திய தேந்துளி இனிப்பாயினும் கசப்பான விளைவினையும் தரயியலும் என்பதே உலக உண்மை. இதைத்தான் வண்ணத்துப்பூச்சி விளைவு என்பார்கள் ஆங்கிலத்தில்.

இந்த விண்மீன் வாரத்தில் நீங்கள் சிந்துந் தேந்துளிகள் நன்மையை மட்டுமே பயக்குமென வேண்டுகிறேன். என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Machi

ஐயா ஈப்புலி என்றால் என்ன?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger VSK

விரும்பிப் படிக்கும் தமிழ்த்தேனின் ஒரு துளி கூட சிந்தாமல் சுவைத்து, மது சிந்துக் கலகம் வராமல் பார்த்துக் கொள்கிறேன்!!

வாழ்த்துகள்!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger துளசி கோபால்

அடிச் சக்கை, நீங்களா இந்த வாரம்?

வாங்க நட்சத்திரமே! வாழ்த்து(க்)கள்,

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெட்டிப்பயல் அவர்வகளே
நன்றி

 

Post a Comment

<< முகப்பு