அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இரண்டு ஏக்கர் நிலம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி நில மற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தை தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி திருவள்ளூரில் முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

அன்று தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில்லாத 6,881 ஏக்கர் தரிசு புறம் போக்கு நிலம், பண்படுத்தப்பட்டு 5076 நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு உள்ள 10,564 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், நிலமற்ற 14,083 சிறு குறு விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

5,790 சிறு குறு விவசாயி களுக்குச் சொந்தமான 8,876 ஏக்கர் பட்டா தரிசு நிலங்களை, அரசின் செலவில் மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி அவர்களுக்கே வழங்கப்படு கிறது.

17-ந் தேதி அன்று திட்டம் தொடங்கி வைக்கப்படும் ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்து 949 ஏழை விவசாயக் குடும் பங்களுக்கு 26 ஆயிரத்து 321 ஏக்கர் நிலம் பண்படுத்தி வழங்கப்பட உள்ளது.

இதைப் போல நிலமற்ற ஏழை விவசாயக்குடும்பங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் கரு ணாநிதி இத் திட்டத்தை தொடங்கி வைக்கும் 17-ந் தேதி அன்று அதே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச நிலம் வழங்கும் விழாக்களில் கலந்து கொள் ளும் அமைச்சர்கள் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை-அமைச்சர் அன்பழகன்

பெரம்பலூர்- மத்திய மந்திரி ராஜா

தஞ்சாவூர்- அமைச்சர் கோ.சி.மணி

சேலம்- அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்

வேலூர்- அமைச்சர் துரைமுருகன்

விழுப்புரம்- அமைச்சர் பொன்முடி

திருச்சி- அமைச்சர் கே.எëன்.நேரு

கடலூர்- அமைச்சர் பன்னீர் செல்வம்

திண்டுக்கல்- அமைச்சர் பெரியசாமி

கரூர்- அமைச்சர் பரிதி இளம்வழுதி

திருவண்ணாமலை- அமைச்சர் எ.வ.வேலு

ராமநாதபுரம்- அமைச்சர் சுப.தங்க வேலன்

விருதுநகர்- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

காஞ்சீபுரம்- அமைச்சர் அன்பரசன்

சிவகங்கை- அமைச்சர் பெரியகருப்பன்

ஈரோடு- அமைச்சர் எம்.கே.கே.பெ.ராஜா

தேனி- அமைச்சர் தங்கம் தென்னரசு

கிருஷ்ணகிரி- அமைச்சர் உபயதுல்லா

நாகை- அமைச்சர் மைதீன்கான்

தர்மபுரி- அமைச்சர் செல்வராஜன்

கோவை- அமைச்சர் சாமிநாதன்

நெல்லை- அமைச்சர் பூங்கோதை

தூத்துக்குடி- அமைச்சர் கீதாஜீவன்

கன்னியாகுமரி- அமைச்சர் தமிழரசு

திருவாரூர்- அமைச்சர் மதிவாணன்

நாமக்கல்- துணை சபா நாயகர் வி.பி.துரைசாமி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
மாலை மலர்

11மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

நல்ல செய்தி...

எனக்கு என்னமோ அப்படியே இந்த நிலங்களை அனுபவிக்கும் உரிமையை மட்டும் ஏழைகளுக்கு கொடுக்கலாம்..இலவச குத்தகை அடிப்படையில் விவசாயத்திற்காக மட்டும்.

குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வறுமை/திருமணச் செலவு காரணமாக விற்றுவிட்டு மீண்டும் தெருவுக்கு வந்த ஏழைகளை கண்டுள்ளேன்...

ம்ம்ம்.. நானா முதலமைச்சர்..

இதாவது நடக்கிறதே..

நல்லது

 
மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

10,564 -ஐ 14,083 -ஆல் வகுத்தால் விடை இரண்டு வரும்?

பை தி வே தமிழகத்தில் வி.ஏ.ஓ.-வாக பணி புரியும் நீங்கள் கூறுங்களேன். இது நடக்கும் திட்டமா? விவசாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு ஷரத்தாக இருக்கிறதா? இல்லை, வேறு ஏதாவது தகுதி தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

துக்ளக்கில் நடக்க சாத்தியமில்லை என்பது போல் எழுதியிருந்தார்கள். எப்படியோ! இருப்பதையாவது கொடுத்தால், வரவேற்ப்போம்.
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே இதை நடை முறை படுத்துவது சிறமம் சிக்கல் தான் பொருத்திருந்த பார்ப்போம் 10 விழுக்காடு சரியாக இருக்கலாம்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஜான் கொஞ்சம் கடினம் தான் இதற்கு ஒரு பதிவு போடலாம் அதுசரியாக இருக்காது அதனால்விட்டு விட்டேன். நிலங்கள் கிடையாது

 
மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

நிர்வாகத்தில் உங்களுக்கு டச் இருக்கிறது. நீங்கள் கூறுங்களேன் இந்தத் திட்டம் ப்ராக்டிகலா?

அவர்கள் கொடுத்த எண்ணிக்கையிலேயே இரண்டு ஏக்கர்கள் வரவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

டோண்டு சார்
சிறமம்தான் சார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Amar

//குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வறுமை/திருமணச் செலவு காரணமாக விற்றுவிட்டு மீண்டும் தெருவுக்கு வந்த ஏழைகளை கண்டுள்ளேன்...//

பொதுவாக இந்த மாதிரி grantகளில் கண்டிஷன் பட்டா தான் கொடுப்பார்கள்.
30 வருஷம் விற்க முடியாது.

தனியாரிடம் நிலம் எடுத்து கொடுப்போம் என்று ஜொக் அடித்த முதல்வர் அதை அப்படி மறந்துவிட்டார் போலும். :)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சமுத்ரா
தாங்கள் சொன்னது உண்மைதான் அனால் அது நடைமுறையி்ல் இல்லை. அடமானம் பெற்று இரண்டே மாதங்களில் விற்பவர்களும் உண்டு.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR. SUBBIAH

அய்யா, பதிவைச் சிரத்தையுடன் போட்டிருக்கின்றீர்கள்
சிறப்பாக உள்ளது

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

SP.VR.SUBBIAH
நன்றி சார்

 

Post a Comment

<< முகப்பு