அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

விபத்து

என்னார்

திருச்சி : திருச்சியில் ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆட்டோ மீது, பயணிகள் விரைவு ரயில் மோதி இழுத்துச் சென்றது. இந்த கோர விபத்தில் சிறுமி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அடுத்த முருங்கப்பேட்டை ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(30). இவர்களுக்கு நான்கு வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். கம்பரசம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் வர்ஷா "ப்ரைமரி கிண்டர்கார்டன்' படித்து வந்தார்.

நேற்று மதியம் பள்ளிக்கு சென்ற விஜயலட்சுமி, தனது மகள் வர்ஷாவை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். வழியில் வடக்கு ஆண்டார் வீதி குஞ்சுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி அகிலாண்டேஸ்வரி(35), சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பழக்கடை நடத்தி வரும் சேதுராமன் மனைவி பிரேமா ஆகியோர் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக வழிமறித்து ஏறினர். ஆட்டோவை வடக்கு ஆண்டார் வீதியைச் சேர்ந்த டிரைவர் ரவி ஓட்டி வந்தார்.
தினமலர் செய்தி

நேற்று மதியம் நாங்கள் அந்த வழியாக ஆய்வுபணிக்கு சென்ற போது இக்காட்சியைக் கண்டோம் பேரூந்துக்கு நின்ற மக்களை அந்த ஆட்டோகாரர் பஸ்ஸுக்குள்ள காசை கொடுங்கள் அழைத்துச்செல்கிறேன் என்று அழைத்து சென்று இக்கொடுமை நடந்து விட்டது.
எமன் எப்படி அழைத்துச் சென்றான் பருங்கள் அதற்கு பக்கத்தில் முத்தரசநல்லூர் வெடிகுண்டு வெடித்த இடம். பக்கத்தில் DSP அலுவலகம் உள்ளது.

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Haranprasanna

//அதற்கு பக்கத்தில் முத்தரசநல்லூர் வெடிகுண்டு வெடித்த இடம்.//

முத்தரசநல்லூரில் குண்டு வெடித்த இடமா? முத்தரசநல்லூரில் எங்கே எப்போது குண்டு வெடித்தது

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

பல ஆணடுகளுக்கு முன்னர் இரயிலில் காலையில் வெடிகுண்டு வைத்து இன்றைய அரசியல் வாதிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

 

Post a Comment

<< முகப்பு