அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன-3-

விஜ:

பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்

மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?

வேளி:

தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ

வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த

சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்

தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!

விஜ:

பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க

வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?

வேளி:

ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்

கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்

கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்

சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.

ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!

வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!

விஜ:

மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்

கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:

நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!

முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்

தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர

வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்

என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே

சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!

நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு

மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்

சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,

அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.

வேளி:

சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே

ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.

வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்

காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை

விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்

மடல்மாற்றம் கண்டுதான்...

{ஒரு வீரன்வந்து)

வீரன்:

மன்னா! மதுரை

மருதன் பெருஒற்றர் தங்கள்.....

விஜ:

வரச்சொல்

மருதன்:

திருவடிகட் கென்வணக்கம்..

விஜ:

சென்ற பிறர் எங்கோ!

மரு:

இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்

விரைந்து வந்தேன் வேந்தே!

{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}

விஜ:

மெதுவாய் எழு மருதா!

கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்

துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே

எடுக்கின்றேன்..

{எடுத்தெறிந்து விட்டு }

எங்கே மருத்துவர்?

மரு:

வேந்தே!

துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்

பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்

சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே

மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்

எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்

கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்

தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.

(என்று கூறி இறக்கின்றான்)

விஜ:

(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)

வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!

ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,

(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)

வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்

நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.

தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்

எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!

வேளி:

வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை

தாறுமா றாகிவிட்டால்?

விஜ:

சாவில் சுகம் காண்போம்:

முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட

முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்

சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்

மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.

சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்

ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்

சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட

தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.

வேளி:

யார்மன்னா அவ்விருவர்?

விஜ:

என்வாள் வழித்தோன்றல்

நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!

வேளி:

ஆரசே, இளவரசா?

விஜ:

ஆம் அமைச்சே.....

வேளி:

வேண்டாம்,

திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்

விஜ:

முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!

ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!

சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ

செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை

கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்

மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!

வளரும்..4

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு