அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

திங்கள், மே 15, 2006

தினமலர் செய்தி


இந்தி கற்றிருந்தால் 30 சதவீதம் பேருக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கும் : கம்பன் விழாவில் அறிவொளி பேச்சு

புதுச்சேரி: நாம் இந்தி கற்றுக் கொண்டிருந்தால் 30 சதவீதம் பேருக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கும் என்று பேச் சாளர் அறிவொளி கூறினார்.

புதுச்சேரி கம்பன் கழக இரண்டாம் ஆண்டு விழாவின் சுவை நுகர்மேடை நிகழ்ச்சியில் "இவர்கள் பார்வையில் கம்பநாடன்' என்ற தலைப்பில் அறிவொளி பேசியதாவது:

இங்கே கம்பனில் குறையிருப்பதாக கூறியிருந்தால் பொறுத்திருப்பேன். ஆனால், திருவாசகத்தில் சொன்னால் ஏற்கமாட்டேன். காரணம் நாத்திகரான அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் விரும்பி படித்தது திருவாசகம். ம.பொ.சி., உணர்ச்சி ததும்ப பேசக்கூடியவர். அவர் சிஷ்யர் கீரன் அதைவிட பேசுவார்.

தமிழகத்திற்கு திருத்தணி கிடைக்க போராடியவர் ம.பொ.சி., நேரு செய்த பெரிய தவறு மொழிவாரி மாநிலங்களைப் பிரித்தது தான். அதனால் தான் இப்போது தண்ணீரும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சட்டசபை எதிர்க்கிறது. நீதிமன்ற தீர்ப்பை துõக்கி எறிகின்றனர்.

ம.பொ.சி., ஆங்கிலத்தை எதிர்த்து இந்தியை ஆதரித்தவர். நான் கூட ஆரம்பத்தில் இந்தியை எதிர்த்தேன். அதைவிட முட்டாள்தனம் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். நாம் இந்தி கற்றுக் கொண்டிருந்தால் 30 சதவீதம் பேருக்கு வடநாட்டில் வேலை கிடைத்திருக்கும். அரசியலில் வழுக்கி விழுந் தவர்கள் செய்த வேலை. தமிழகத்தை உயர்த்தும் தரம் அவர்களிடம் இல்லை. ஓட்டு போடுபவர் களின் கால்களில் சரணாகதி அடைந்தவர்களால் வாழ்வை தர முடியாது.

அரசியல் அதிகாரம் எங்கே தோன்றுகிறதோ அங்கே கூலிகள் தோன்றுவார்கள். அடுத்தவனை அரசியலில் மதிப்பதும் ஒரு அறம் தான். வெளியே இருந்து ஆதரிக்கிறேன் என்று சொல்லி கவிழ்த்து விடுவார்கள். புதுச்சேரியிலும், தமிழகத்திலும் அரசியலில் எப்போதும் மாற்றம் இருக்கும். இப்போது என்னவோ ஒத்து போகிறது. தற்போது 13ம் தேதி பதவியேற்கிறார்கள். மேலை நாடுகளில் தான் 13 ஆகாது. ஆனால், இங்கே ஆகும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அறிவொளி பேசினார்.
தினமலர் செய்தி

8மறுமொழிகள்:

15 மே, 2006 15:04 மணிக்கு, எழுதியவர்: Blogger மாயவரத்தான்...

எத்தனை முறை தோற்றாலும் ஜெயலலிதாதான் எங்கள் தெய்வம்.

தினமலர்தான் எங்கள் வேத புத்தகம்.

 
15 மே, 2006 15:47 மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

இது அறிவிலிப் பேச்சு..

 
15 மே, 2006 17:00 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நண்பரே சொன்னவர் அறிவெளி உண்மையான செய்தி அவர் சொன்னது. அவருக்கு இப்பொழுதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது.

 
15 மே, 2006 17:04 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நண்பர் ஜோ,
இந்தி தேவையில்லை என்கிறீர்களா அவர் சொன்னது சரிதானே

 
15 மே, 2006 17:09 மணிக்கு, எழுதியவர்: Blogger கோவி.கண்ணன்

//இந்தி தேவையில்லை என்கிறீர்களா அவர் சொன்னது சரிதானே//
இதைப்பற்றிய என் பதிவையும் பின்னூட்டங்களையும் படியுங்கள்.
http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html

 
15 மே, 2006 17:09 மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

//இந்தி தேவையில்லை என்கிறீர்களா //

என்னார் சார்,
இந்தி கண்டிப்பாக படித்து ஆகவேண்டும் என்பது தேவையில்லை .தேவையானவர்கள் படிக்க தடையில்லை என்பது என் கருத்து .பல முறை இது குறித்து விவாதித்து புளித்து விட்டது .எனவே மீண்டும் வாதம் புரிய விரும்பவில்லை.

 
15 மே, 2006 17:21 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஜோ,
நாம் பள்ளிக்காலங்களில் வாத்தியார் குச்சியெடுத்து அடித்து படிக்கச்சொன்னாலே படிப்பது சிரமம் அதில் விருப்முள்ளவர்கள் தனியாகப்படிக்கலாம் என்றால் எவன் அந்த காலங்களில் படிப்பான் தேவை ஏற்படும் பொழுது மட்டுமே படிப்பான் அதற்கு இப்பொழுது வசதியிருக்கிறதா?
சரி இதைப் பேசி என்ன செய்வது முடிந்து விட்டது விடுங்கள்
நன்றி

 
15 மே, 2006 17:26 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

கண்ணன்,
ஜோவுக்குக் கொடுத்த பதிலே தங்களுக்கம் பொருந்தும்

 

Post a Comment

<< முகப்பு