அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன்

சுராதிராசன் என்பவன் முற்காலத்தில் முதல் சோழனாகப் பிறந்தான். அவனது மரபிலுதித்த இராசகேசரி ,பரகேசரி என்னும் இருவரும் தங்களுடைய கட்டளைகளால் ஏழு வகை தீவுகளையுடைய இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றி புலிக்கொடியினால் ஆணைசெலுத்தி ஒருவர் பின் ஒருவாராக ஆட்சிபுறிந்தனர்.

'இதுவே நீதியாகும் ' என்று கூற்றுவனுக்கு எடுத்துரைத்தவன் கிள்ளிவளவன் என்னும் சோழனாவான். குடகு மலையைக் குடைந்து காவிரியாற்று நீரை சோழ நாட்டிற்கு கொண்டு வந்து ஓடச்செய்தவன் கவேரன் என்பவன் ஆவான். மிருத்யுசித் என்னம் அரசன் தன் நாட்டில் திடீர் சாவு ஏற்படாமல் எமனிடத்தில் வெற்றி கொண்டான். இம் மூவரும் பெரு வெற்றியுடன் வாழ்ந்த சோழமன்னர்கள் ஆவார்கள்.

சித்திரன் என்னும் சோழன், தன் துகில் கொடியில் இந்திரனை புலிக்கொடியாகக் கொண்டவன்; அதனால் ' வியாக்கிரகேது' என்னம் சிறப்புப் பெயரையும் பெற்றான். சமுத்திரசித் என்னும் சோழன் கப்பல் போக்கு வரவுக்காக பூசந்தியை வெட்டி மேல் கடலையும் கீழ் கடலையும் ஒன்று சேர்த்து சலசந்தியாக்கினான். நீர் வேட்க்கையால் வருந்திய ஐந்து இயக்கர்களுக்கு தன்னுடைய ஐந்து ரத்த குழாய்களையும் அறுத்துக் கொடுத்து உதவிய வலிமையுடைவன் பஞ்சபன் என்னும் சோழ மன்னன் ஆவான் . நீர் நிரைந்த பெரிய கடலிடத்தே செலுத்திய கப்பல் போர்புரிதற்கு காற்றில்லாமையால் ஓட வில்லை. அப்பொழுது ஒரு சோழன் வளிச்செல்வனை வரவழைத்து ஏவல் கொண்டான் . அவ்வளவு வல்லமையுடைய சோழனை' வாதராசனை பணிக்கொண்டவன்' என்று கூறுவர்


அசுரர்கள் வானில் உலாவும் மூன்ற அச்சமுண்டாக்கும் மதில்களைக் கொண்டு பலருக்கும் தீங்கிழைத்தனர். அவற்றை அழித்து பெருமைக் கொண்டவன் தூங்கெயில் எறிந்த சோழ மன்னன் ஆவான். இரத்தின கற்கள் பதித்த ஒளிவீசும் தனது விமானத்தை வானில் உயர்ந்து பறக்கும் படி செய்தவன் உபரிசரன் என்னும் சோழன் ஆவான். பாண்டவர்கள் பாரதப் போரை முடிக்கும் வரையிலும் தளராமல் நின்று தருமனது கடல் போன்ற பெரிய படைக்கு உதவிபுரிந்தான் ஒரு சோழ மன்னன்.


கிள்ளி வளவன் குகைஒன்றின் வழியாக தனிமையில் நடந்து சென்றான்; அங்கு ஒரு நாக கன்னியைக் கண்டான். அவள் முல்லை மொக்குப் போன்ற பற்களையம், வேல் போன்ற விழிகளையும் உடையவளாக விளங்கினாள். நாகர்களின் கண்மணி அனைய அந்நாகர் கன்னிகையைக் கிள்ளிவளவன் மணம் புரிந்து கொண்டான். சோழன் செங்கணானுக்ம் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் ஏற்பட்டது. அப் போரில் சோழன் வெற்றி பெற்றான்; வென்றவன், சேரனைச் சிறைப் பிடித்துக் காலில் விலங்கு பூட்டி வைத்திருந்தான். சேரனின் ஆசிரியப் பெருந்தகையாகிய பொய்கையார் 'களவழி நாற்பது' என்னும் நூலைப் பாடிச் சோழனைச் சிறப்பித்தார். அதனால் சேரன் காலில் பூட்டிய விலங்கைச் சோழன் வெட்டி எறிந்து அவனுக்குத் திரும்பவும் ஆட்சியை அளித்தான்.
கலிங்கத்து பரணியிலிருந்து

தொடரும்.........


2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger jeevagv

//பாண்டவர்கள் பாரதப் போரை முடிக்கும் வரையிலும் தளராமல் நின்று தருமனது கடல் போன்ற பெரிய படைக்கு உதவிபுரிந்தான் ஒரு சோழ மன்னன்.//
யாரந்த சோழ மன்னனோ???!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அவனது பெயர் தெரிந்தால் டைப்பிருக்க மாட்டேனா? இப்படி ஒரு வினாவை தொடுக்க வைப்பேனா?

194
தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணிச்
சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்
தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்
தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும். 17
http://www.tamilnation.org/literature/pmunicode/mp123.htm
கலிங்கத்துப்பரணி
நன்றி ஜீவா

 

Post a Comment

<< முகப்பு