அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன்

இது கட்டியமல்ல வரயிருப்பதை முன்பகர்வது காண்க:

வாணன்: (தனிமையில்)
முன்புள சிறந்த மதுரை மூதூர்
கன்னல் தமிழின் பிறப்பிடம்!
கலைகளின் இருப்பிடம்
ஆனால் இன்றோ,
தேமா புளிமா தேடிய கவிஞர்
பாய்மா கைம்மா தேடுகின் றார்கள்!
இரததினம் இரகதம் விலைபேசி னோர்கள்
இரத்தத்தை இன்று விலைபேசு கின்றார்;
பாலவி ஆடை பதமுணர்ந் தோர்கள்
வேலாவி குடிக்கும். விதம்கற் கின்றானர்!
வெட்கச் சிவக்கும் குமாரிகள் இன்று
விழித்துப் பார்த்தால்
கறந்தபால் காய்ச்சிய பாலாய்ச் சுண்டும்!
ஈயமர்ந் திட்டால் இதயம் துடிக்கும்
தாயும்இன்றுதான் பெற்ற
சேயின் மார்பிலே
விழுப்புண் மாலையைக் காண விழைகிறாள்!
எல்லாரிடத்திலும் எதனி டத்திலும்
எல்லா இடத்திலும் போர்வெளி; வெறிப்போர்!

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு