அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 7 -

அரையர்களில் அவர்கள் இருந்த இடம் பற்றி, சுருக்காக் குறிச்சிராயர் வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புலவயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டுவகை அரையர், அம்புகோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலி யரையராகிய கடாரத் தரையர், குலோத்துங்கசோழதரையர், (குன்றையூர் அரசர்) எனப் பல பிரிவுகள் இருந்தன. சோழ, பாண்டியர்களின் அதிகாரம் இவ்விடங்களில் மிகுதியும் பரவவில்லையெனத் தெரிகிறது. அக்காலத்தில் வலிமிக்கவன் செய்வன வெல்லாம் சரியானவையே ஒரு தலைவன் பலமுள்ளவனாயின் தனது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டேயிருக்கலாம். ஒரு கல்வெட்டில் ஐந்து கிராமக் குடிகள் ஒன்று கூடிக் காங்கெயன் என்ற ஒரு தவைனை மீட்டும் தவைனாகக் கொண்டு வந்த செய்தி சொல்லப் பட்டிருக்கிறது. சிலர் வாணதிராயரென்றும், மகாபலி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களென்றும் சொல்லியிருக்கிறது.


கி.பி.14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலிக்காபர் (மாலிக்கபூர்) முதலிய மகம்மதியர் தென்னாட்டின் மேற் படையெடுத்துக் கோயில்களை இடித்துப் பல கொடுமை விளைத்தனர். அப்பொழுது மக்களெல்லாரும் அரையர்களைச் சரண் புகுந்து ஊர்க்காவலை அவர்களிடம் ஒப்புவிக்கவே அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் என்று கல் வெட்டுக்களால் தெரிகிறது. குடிகளுக்குள் உண்டாகும் வழக்குகளையும் அரையர்களே விசாரித்துத் தீர்ப்பளித்து வந்தனர். அதற்காக அரசு சுந்தரம் என்ற ஒரு வரி அவர்களால் வாங்கப்பட்டு வந்தது. அரசு சுந்தரம் என்பது விளையும் பொருள்கள் எல்லாற்றிலும் ஒருபங்கை அரையருக்குக் கொடுப்பது. இவர்களில் சூரைக்குடி அரையர்கள் 300வருடங்கள் வரையில் ஆண்டு கொண்டிருந்தனரென்று தெரிகிறது. அரையர்களுக்கு அரசு என்றும், நாடாள்வார் என்றும் பட்டமுண்டு. அரையர்களிற் பலர் தேவர் என்ற பட்டமும் தரித்திருந்தனர்.


அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். பாளையக்காரரும் நிலவரி வாங்கியும் கிராமங்களைப் பாதுகாத்தும் வந்தனர்.


கி.பி.1378-ம் ஆண்டுக்குப் பின இவ்விடங்களில் பல்லவராயகர்கள் அரையர் என்னும் பெயருடன் இருந்தனர். இவர்கள் பன்னாள் வரை குளத்தூர்த் தாலுகாவிலுள்ள வழுத்தூரிலும், பெருங்களூரிலும் தலைவர்களாக இருந்தனர். தொண்டை மண்டலத்தைச் சோழர்கள் வென்றுவிட்ட பின்பு பல்லவராட்சி முடிவுக்கு வந்தமையின் பல்லவரின் கிளைகள் சோழரிடம் படைத்தலைவராகவும், அமைச்சராகவும் இங்ஙனம் அமைந்தனர். கலிங்கத்துப் பரணியிற் சொல்லப்பட்ட கருணாகரத் தொண்டைமான் அவர்களில் ஒருவன். கல்வெட்டக்களை ஆராயும் இந்திய அதிகாரியான வெங்கையா அவர்கள் சொல்லுகிறபடி வழுத்தூரிலிருந்து பல்லவராயர்கள் பல்லவர் குடும்பத்திற்கு எட்டிய உறவாயிருக்காலம். தஞ்சாவூருக்குக் கிழக்கே எட்டு நாழிகை வழியிலுள்ள வழுத்தூரிலிருந்து பல்லவராயர்கள் தெற்கே புற்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயரென்பர் பாண்டியர்களைப் பாதுகாத்தவரென்று திருநாரண குளத்திலுள்ள 1539-ம் ஆண்டுக் கல்வெட்டில் சொல்லியிருக்கிறது. மூன்று அல்லது நான்க பால்லவராய அரசர்கள் கார்காத்த வெள்ளாளர் காலத்தில் இருந்தனராக ஆதரவுகள் கூறுகின்றன.


பாண்டி நாட்டரசனான உக்கிரவீர பாண்டிய மன்னன் ஏழு ஆண்டுகள் தொண்டை மண்டலத்தில் வேங்கடாசலப் பல்லவராயரைஅழைத்து வருதற்பொருட்டுக் காத்திருந்ததாகவும், பின் அவருதவியைக் கொண்டு சேதுபதி நந்தி மறவனைவென்றதாகவும், அதன் பொருட்டுப் பாண்டியன் பொன்னமராவதிப் பக்கத்தில் அவர்க்கு நிலங்கள் கொடுத்ததன்றி,' அரசனின் மருமகன்' என்ற பட்டமும், ஒரு அரண்மனையும் தந்ததாகவம் செப்புப் பட்டயத்தில் சொல்லியிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி யென்று பட்டம் பெற்ற தொண்டைமான் பல்லவராயருடன் வந்தெனனெனவும் , அவனுக்கு அப்பகோவிலில் நிலங்கள் அளிக்கப்பட்டன எனவும் சொல்லப்படுகிறது.


கி.பி.1387-ல் வழுத்தூர்ப் பல்லவராயர்கள் திருக்கோகரணம் என்னமிடத்தில் தருமம் செய்திருப்பது தெரிகிறது. கல் வெட்டில் 'இராஜ்யம் பண்ணியருளகையில்,

என்று வருவதால் இவர்கள் அரசரென்றே சொல்லப்பட்டனரென்பது விளங்கும். கி.பி.1312-ல் ஒரு பல்லவராயன் ஆரணிப்பட்டியிலுள்ள கடவுளுக்கு நிலங்கள விட்டமை புலனாகின்றது. வழுத்தூர்ப் பல்லவராயர்கள் தங்கள் அடையாளமாக 'பல்லவன் குளம்' என்ற வாவியும், பல்லவன் படி என்ற அளவுகருவியும் உண்டாக்கியிருக்கின்றனர். இப்பொழுது தசரா விழாவில் அரிசி அளப்பதற்கு இப் படி கருவியாக விருக்கின்றது. பல்லவன் குளம் என ஒன்று புதுக்கோட்டைக்கு நான்கு நாழிகை வழியிலுள்ள பெரியூர் என்னமிடத்தில் இருக்கிறது. வழுத்தூரில் அழிந்துபோன கோட்டைகள் உள்ளன.

பல்லவராயர்களில் , கோனேரிப் பல்லவராயர், மாஞ்சோலைப் பல்லவராயர், அச்சுதப்பப் பல்லவராயர், இளையபெருமாள் பல்லவராயர், ஆவுடைய பல்லவராயர், கந்தப்ப பல்லவராயர், மல்லப்ப பல்லவராயர், சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

புலிக் கொடியும், மீன் கொடியம், வெண்குடையும், ஆறுகாற்சிங்காதனமும், ஆத்தி மாலையும் பல்லவராயர்கள் உடையராயிருந்தனர். புலிக்கொடி காஞ்சிப்பல்லவரது தொடர்பைக் காட்டுகிறது. மீன் கொடி பாண்டியர்களைத் தோல்வியிலிந்து காப்பாற்றியபின் தரித்திருக்கலாம். சோழருக்குரிய ஆத்திமாலை சூடியிருப்பது இவர்கள் சோழர்களின் சார்பு பெற்றிருக்கலாம் என்பதனைக் காட்டுகிறது.


புதுக்கோட்டை, கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை முதலிய வற்றின் தலைவர்கள் உதிரத்தாலும், கல்யாணங்களினாலும் சம்பந்தமுடையராவர். இவர்கள் படைவீரராகவும், தலைவர்களாகவும் இருந்தனர். தனித்தனியாகத் தங்களுக்குள் இராச்சியமும் ஏற்படுத்திக்கொண்டனர்.


திருச்சிராப்பள்ளியை மகம்மதியர் முற்றுகை யிட்டபொழுது கள்ளர்கள் வந்து தாக்கி மகம்மதியரை அஞ்சச் செய்தனர். கள்ளர்கள் இந்நாட்டிற்கு அரசராயிருந்தனர். இவர்கள் மதுரை அரசனுக்குத் தீவையாவது கப்பமாவது கொடுக்கவில்லை. அரசன் இவர்களை யடக்குவது கூடாமையாருந்தது பின்பு மங்கம்மாளின் மந்திரி படைகளைக் கொண்டுபோய்ச் சிலரை மடித்து, அங்கே காட்டின் நடுவில் ஒரு கோட்டையைக் கட்டிச் சில பட்டாளங்களையும் வைத்தனன். ஆனால் அவர்கள் கடையாள ரெல்லோரையுங் கொன்று, கோட்டையையும் தவிடு பொடியாக்கிவிட்டனர். இங்கே சொன்வை புதுக்கோட்டைப் பக்கத்தில் நிகழவில்லை. அதற்குக் காரணம் பால்லவராயர் அல்லது தொண்டைமான்கள் இதை ஆண்டுவந்தமையே.

வளரும்...............8

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு