அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 6 -

"பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை 'நிலத்தரசு' என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.

கானாட்டுவெள்ளாளர்க்கும் கோனாட்டு ஒளியூர் வெள்ளாளர்க்கும் பகை யுண்டாகி அவர்கள் தங்கள் தங்கட்குத் துணையாக இராசேந்திர மங்கல நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான குடிகளடங்கிய மறவர்களைக் கொண்டு வந்தனர் என ஒரு ஓலைச் சுவடியில் காணப்படுகிறது.


நெட்டிராச பாண்டியன் இருநூறு மறவர் குடிகளைக் கொண்டு போய்த் தன் பகைவனை வென்று, பின் அவர்கட்கு நிலங்கள் அளித்து 'மறவர் மதுரை' என்னும் கோட்டையும் கட்டிக் கொடுத்தான். இவன் ஒரு மறவர் மகளைக் கல்யாணஞ் செய்து கொண்டு, இவர்க்குப்பிறந்த கிள்ளைக்கு ஏழு கிராமங்கள் கொடுத்தனன். வெள்ளாளர் தங்கள் உரிமைகளை மதுரைத் தேவனுக்கு விட்டு விட்டனர்.


கள்ளர்களைத் குறித்து அகநானூற்றுச் செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன. திருவேங்கட மலையில் வசித்தோரும்., அஞ்சா நெஞ்சு படைத்தவருமாகிய இவர்கள் 'கள்வர் பெருமகன் தென்னன்' என்ற பாண்டியனால் தென்னாட்டிற்கு அழைக்கப்பட்டனர் எனத் தோன்றுகிறது. புதுக்கோட்டைக்கு வடகீழ்பாலுள்ள வீசங்கி (மீசெங்கள) நாட்டில் இவர்கள் தலைமை வகித்திருந்தனர். இவர்களில் பலர் அரசர்களோடு சம்பந்தப் பட்டிருக்கின்றனர். நாராயணப் பேரரசு மக்கள் என்றும், படைத்தலைவர் என்றும், தந்திரிமார் என்றும், கர்த்தர் என்றும் கள்ளர்கள் அழைக்கப் பட்டனர்.


கள்ளர் வகுப்பினர் மேன்மேல் ஆதிக்கம் பெற்றனர். அவர்களிடம் நிலங்கள் ஒப்பவிக்கப்பட்டன. கோயிற் சொத்துக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர். கோனாட்டு வெள்ளாளர்க்கும் கானாட்டு வெள்ளாளருக்கும் ஏற்பட்ட சண்டைகளில் கள்ளர்கள் இருதிறத்தார்க்கும் உதவி புரிந்தனர். வாணாதி ராயர்க்கும் மற்றைக் கார்காத்த வெள்ளாளர்க்கும் உண்டாகிய சண்டையில் வீசங்கி நாட்டுக் கள்ளர்கள் வெள்ளாளர்களைச் சூரைக்குடி வரையில் ஓட்டு வித்து, ஏழுபிரபுக்களைச் சிறைப்பிடித்து வாணாதிராயர் முன் கொண்டுவந்து விட்டனர். பின்பு இவர்களைச் சிவந்தெழுந்த பல்லவராயரிடம் கொண்டு போயினர். பல்லவராயர் கோனாட்டுப் பிரபுக்களைக் கூப்பிட்டு, இனி நீங்கள் கள்ளர்களோடு மாமனும் மருமகனும் போல வாழவேண்டுமென்ற கூறி, கள்ளர்களுக்கு 530 கலம் நெல்லும், 550 பொன்னும் வெள்ளாளர் கொடுக்கும்படி தீர்ப்பு அளித்தார்.


வெள்ளாற்றின் வழக்கிலுள்ள கோனாடானது உறையூர்க் கூற்றம், ஒளியூர்க்கூற்றம் , உறத்தூர் கூற்றம் என மூன்று கூற்றங்களாகவும் வெள்ளாற்றின் தெற்கிலுள்ள கானாடானது மிழலைக் கூற்றம், அதழிக் கூற்றம் என இரண்டு கூற்றங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்களை 10,11-வது நூற்றாண்டுகளில் அரையர் அல்லது நாடாள்வார் என்னும் தலைவர்கள் ஆண்டு வந்தனரென்று கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. கோபிநாதராவ் அவர்கள் சொல்லுகிறபடி இப்பொழுதும் இவ்வகையினர் சிற்சில் இடங்களில் இருத்தல் அறியலாம்.

தொடரும் .........(7)

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு