அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 4 -

திருமங்கையாழ்வார் (இவரும் கள்ளரே) பல பாட்டுக்களில் பல்லவரைக் குறித்திருக்கின்றனர்

அவற்றுள் அட்டபுயகரப் பதிகத்தில்,


'மன்னவன் றொண்டையர் கோன் வணங்கு

நீண்முடி மாலை வைரமேகன்

தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி

யட்ட புயகரத் தாதிதன்னை'

என்றும்,


திருவரங்கப்பதிக்கத்தில்,

'துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில்

தொண்டைமன்னவன்


என்றும் ஓர் பல்லவனைத் தொண்டை மன்னன் எனப் பாடியிருக்கின்றனர்.

வண்டை நகரதிபனும், முதற் குலோத்துங்கச் சோழனுடைய மந்திரத்தலைவனும ஆகிய கருணாகரத் தொண்டைமானை,


'பல்லவர்கோன் வண்டைவேந்தன்'


என்று செயங்கொண்டார் பரணியிற், கூறுகின்றனர், பல்லவர் தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே மரபினரைக் குறிப்பன என்பதற்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும்.

கல் வெட்டுக்களிலும் பல்லவரைத் தொண்டையர் என்று குறித்திருக்கிறது. தளவானூர்க் கல்வெட்டில் ஒரு பல்லவன் 'தொண்டையர் தார்வேந்தன்' என்று கூறப்படுகின்றான்.

'மறைமொழிந்தபடி மரபின் வந்த குலதிலகன் வண்டை நகரரசனே' என்று பரணி கூறுவது பல்லவர் அல்லது தொண்டையர் பின்பு அரச வகுப்பினராகக் கொள்ளப் பட்டு வந்தமைக்குச் சான்றாகும்.

கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையில் பல்லவராட்சி மிக மேன்மையடைந்திருந்தது. அக் காலததில் சோழர்கள் பல்லவர்க்குக் கீழே சிற்றரசராயிருந்தனர். பல்லவரில் புகழ் பெற்ற மன்னர் பலரிருந்தனர். பல்லவர் காலத்தில் சிற்பம் உர்ந்த நிலையில் இருந்ததுபோல் வேறு காலத்தில் இருந்ததில்லை அவர்களிற் சிலர் சிறிது காலம் சமண, பெளத்த மதங்களைத் தழுவியிருப்பினும், பெரும்பாலோர் சைவராகவோ வைணவராகவோ இருந்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல. பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் பலரிருக்கின்றனர். சைவசமய குரவர்களும், ஆழ்வர்களும் அக்காலத்தில்தான் தோன்றி விளங்கினர். சமயக் குரவரும், ஆழ்வாரும் புகழந்து பாடும் பெருமையும் பல்லவர் பெற்றிருந்தனர். இத்தகையாரையோ ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எனச் சிலர் கருதுவது ! இது காறும் கூறியவற்றிலிருந்து பல்லவ ரென்பார் தொன்று தொட்டுத் தொண்டை நாட்டி லிருந்துவந்த தொண்டையரே! என்பது விளக்கமாம். அவர் வடக்கிலிருந்து வந்தோ ரென்பதற்குச் சிலர் கூறும் வேறு காரணறங்கள்:

பல்லவர்க்கள் முதலில் அளித்த செப்புப் பட்டயங்கள் பிராகிருதத்திலும், வடமொழியிலும் இருப்பதும், அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும், வேள்விகள் புரிந்தனரென்றும் கூறப்படுதலும் ஆம்.

பட்டயங்கள் எங்கோ சில சிற்றூர்களிலும், காடுகளிலும், நிலத்தின் கீழும் இருந்து இங்ஙனம் அகப்பட்டவை. அவைமுற்றிலும் கிடைத்து வட்டன என்று எங்ஙனம் கூறமுடியும்? அன்றியும் தமிழ் வழங்காத தெலுங்கு நாட்டை அவர்கள் கைப்பற்றி ஆண்டபொழுது அங்கே அளித்த பட்டயங்கள் தமிழில் எப்படி இருக்கக்கூடும்? தமிழராயிருந்தோர் பிராகிருதத்தில் சாசனம் அளித்திருக்க முடியா தென்றால், பிராகிருதம் அல்லது வடமொழியே பயினறவர் பின்பு எங்ஙனம் தமிழராகித் தமிழிலே சாசனம் அளித்திருத்தல் கூடும்? இதனாலே அக்காரணம் அத்துணை உறுதியிடைத்தன் என்பது தோன்றும்

வர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவ ரென்றும் சொல்வது காரணம் ஆகலாம், எனின், தமிழ் வேந்தர்கள் சூரியன் மரபினரென்றும், சந்திரன் மரபினரென்றும் கூறப்படுவதற்கு யாது சொல்வது? சோழர்களோடு மாறுபட்டிருந் தோரும், ஆந்திர நாட்டையும் கைப்பற்றி ஆண்டோரும, எண்ணிறந்த பிராணர்களைத தமிழகத்திற் குடியேற்றிஅவர்கட்கு எண்ணிறைந்த தானங்களை அளித்தோரும் ஆகிய பல்லவர், தம்மை அசுவத்தாமன் வழியில் வந்தோர் என்றும் பாரத்துவாசர் கோத்திரத்தினர் என்றும் கூறிக்கொள்வதில் வியப்பென்னை? பல்லவரது மரபின் வரலாறு நாளடைவில் விரிந்து வந்திருப்பதை சாசனங்கள் விளக்குமன்றோ?

அவர்கள் வேல்வி புறிந்ததுதான் எங்ஙனம் காரணமாகும்? தமிழ் மூவேந்தரும் எண்ணிறந்த வேள்விகள் செய்திருத்தலை சங்கநூல்களால் அறியலாகும். பண்டியன் பல்யாக சாலை முதுக்குடுமி பெருவழுதி என்னும் பெயரே அதனை விளக்கும் அவனைப் பாடிய நெட்டிமையார் என்ற புலவரும் 'நின்னுடன் எதிர்த்து தோற்றொழிந்த பகைவர் பலரோ, நீ வேள்வி புறிந்த களம் பலவோ' என்று கூறுகின்றார் இவ்வாற்றால் பல்லவர் வடக்கிலிருந்து வந்தோர் என்பார் அதற்குக் கூறும் காரணம் ஒன்றேனும் திட்ப்ப முடைதன் றென்பது விளங்கா நிற்கும். பல்லவரது ஆதி ஊறைவிடம் தொண்டை நாடே என்பதனை மறுக்கக் தகுந்த வேறு ஆதரவுகள் கிடைக்கு மேல் அவர் மணிமேகலையில் கூறப்பட்டதும் தமிழ் நாட்டை யடுத்து தெற்கிலுள்ளதுமாகிய மணிபல்லவம் என்னும் தீவினின்று வந்தோர் எனக் கருதல் பொருத்தமுடைத்தாகும்.

இனி கள்ளர் வகுப்பினரை பல்லவர் வழியினர் என்பதற்கு பல பொருத்தங்களுள்ளன. அவற்றினை இங்கே காட்டுதும். பல்லவர் தொண்டையர் என்னம் பெயர்கள் ஒரே வகுப்பினரை குறிப்பன வென்று முன் விளக்கப்பட்டதும். காடவர், சேதிபர், காடுவெட்டி என்னும் பெயர்களும் பல்லவருக்கு உரியவை. திருத்தொண்டர்களில் ஒருவாராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயநாரை


'பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவே'


என்று திருத்தொண்டர் திருவந்தாதியும் ;


'வைய நிகழ் பல்லவர் தங் குலமரபின் வழித்தோன்றி'

எனவும்,

'கன்னிமதில் சூழ்காஞ்சி காடவ ரையடிகளார்'


எனவும் பெரியபுராணமும் கூறுகின்றன


சுழற்சிங்க நாயனாரை,

'கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற் சிங்கன்'


என்று திருத்தொண்டத் தொகையும்;

'பல்லவகுலத்த வந்தார்'


என்று பெரியபுராணமும் கூறுகின்றன.


திருமுனைப்பாடி நாட்டுக்கச் சேதி நாடு என்பதும் ஒரு பெயர். மெய்ப்பொருணாயனார் புராணத்தில் ,


'சேதிநன்னாட்டு நீடு திருக்கோவலூர்'


என்று கூறப்பட்டுள்ளது. சேதிநாடு ஆண்டமைபற்றிப் பல்லவர் சேதிபர்கோன்எனவும் படுவர்.


காடுவெட்டி என்பதும் பல்லவரது பெயராகச் சாசனங்களில் வருகிறது. 'காடு வெட்டித் தமிழ் பேரரையன்' என்று கல்வெட்டிற் காணப்படுவதிலிருந்து இப்பெயர்அரசரக்குரியதென்பது விளங்கும்.

பழைய திருவிளையாடற் புராணத்திலிருந்து கீழே காட்டியள்ள ஒரு சரித்திரத்தாலும் இது விளங்கம்.

வளரும்.............3

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு