அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 24 -

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் எழுதி வெளியிட்ட இராசாளியாரவர்களது வாழ்க்கை வரலாறு:


" கல்வியறிவொழுக்கங்களிலும் வண்மையிலும் மேம்பட்டு விளங்கிய இப்பெருந்தகையார் பிரமோதூத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 17-ம் நாள் அரித்துவாரமங்கலத்தில் பெருநிலக்கிழமையுடைய ஓர் பிரபலக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம்பருவத்தில் கும்பகோணத்திலுள்ள ஆங்கிலப் பாடசாலையில் மெற்றிக்குலேஷன் வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தவர். அவ்பொழுதே குடும்பாரம் பொறுக்க நேர்ந்தமையின் படிப்பைவிடுத்து ஊருக்கு வந்து விட்டார். எனினும் கல்வியில் இவருக்கிருந்த விருப்பம் மேன்மேலும் வளர்ந்தே வந்தது. தமது பன்னிரண்டாம் வயதிலிருந்தே யோகநூல்கள் படிக்க வெண்டுமென்னும் அவாவுடையவராய் அவற்றைத் தேடிப் படித்தும். பெரியோர்கள் பலரை உசாவியும் யோக நுட்பங்களைத் தெரிந்து வந்ததோடு, யோகப்பயிறசியும் ஓரளவு செய்து வந்தாரெனத் தெரியவருகிறது. திருமந்திரம் முதலிய யோக நூல்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் இவருக்குப் பாடமுண்டு மருத்துவ நூல் சோதி நூல்களிலும். இருக்கு பயிற்சியுண்டு. வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தார். சிறு பருவந்தொடங்கியே சிறந்த வொழுக்கமும், தெய்வபத்தியும், உபாகாரத்தன்மையும் உடையராயிருந் தாராகலின், இவரதுவாழ்க்கை தூய்மையும், பெருமையும் வாய்ந்த தென்பது திருவாளர் பொன். பாண்டித்துரைத்தேவரவர்கள், அரசஞ்சண்முகனார் முதலிய பலருடைய நண்பு அவற்றைப் பெரிதும் வளர்த்துவருவதாயிற்று. அக்காலந் தொடங்கியே மதுரை முதலான இடங்களில் சங்கங்கள் கூடும் பொழுதெல்லாம் தவறாது செல்வதும், புலவர்களோடு அளவளாவியின்புறவதும், தமிழ் நூலாராய்ச்சி செய்வதும், பெருஞ் சொற்களிலுள்ள பல சங்கங்களில் இவர் தலைமை வகித்தும் சொற்பொழிவுகள் புரிந்துமிருக்கின்றனர். பிரணவம், யோகம் என்ற பொருள்களை குறித்து மூன்று நான்கு மணிநேரங்கள் அருமையாகப் போசியிருக்கிறார்.தேற்றம்.மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பெற்றது இவருக்குத் தமிழில் மிக்க ஆர்வமும், பயிற்சியும் உண்டாவதற்கு ஏது நிகழ்ச்சியாயிருக்க,

ஓராண்டு, மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவைத் தஞ்சையில் மிகவும் சிறப்பாக நடத்திவைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிறைவேற்றற் கழக உறுப்பினராகவும், எம் சங்சத்தின் புரவலராகவும், மற்றும் பல சங்கங்களின் தொடர்படையராகவும் இருந்திருக்கினறனர். தம் மரபினராகிய கள்ளர் குலமக்கள் கல்வி முதலியவற்றில் மேம்பட்டுத் தம் பழம்பெருமையின் நழுவாதிருக்க வேண்டுமெனக்கருதி இந்திரகுலாதிபர் சங்கம் என ஓர் சங்கம் நிறுவி நடத்திவந்தார். தஞ்சை ஜில்லா போர்டிலும் தாலுக்கா போட்டிலும் பல ஆண்டுகள் உறுப்பினராய் இருந்துளார். தம்முடைய ஊரில் நூல் நிலையம், மருத்துவ நிலையம் முதலியன ஏற்படுத்தி வைத்தார். அறத்திற்கு மிகுதியான நிலிம் எழுதி வைத்தார். நமது பெருமாட்சி பொருந்திய ஐந்தாம் ஜார்ஜ் அரசர் பெருமான் டில்லிமா நகரில் முடிசூட்டிக்கொள்ளும் அமையத்துச் சென்று தரிசித்து வந்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களைத் தம்மூருக்கு எழுந்தருள் வித்துப் பூசித்து அவர்கள் உவந்தளித்த பொற்கடகங்களும் பெற்றார். தமிழ்ப்புலவர்களிடத்தில் இவருக்கிருந்த அன்பு அளவிட்டுரைக்கற்பாலதன்று. இவர்போன்று புலவர்களை உபசரிப்பவர் உலகில் மிக அரியரென்றே சொல்ல வேண்டும். அரசஞ்சண்முகனார், பினனத்தூர் நாராயனசாமி ஐயர் முதலிய புலவர் பலர் இவர் பால் மிக்க உதவி பெற்றுள்ளார்கள். இவர் மீது எத்தனையோ புலவர்கள் பாடிய பாடல்களும் உள்ள. பிற வனிதையரைப் பெற்ற தாயெனவும், பிறர் பொருள் எட்டியே யெனவும், பிறர்வசையுரைத்தல் பெருமையென்றெனவும் கருதியவர். 'ஈதல் இடைபடவாழ்தலதுவல்லுதூதியமில்லையுயிர்க்கு' என உணர்ந்தவர். சுருங்க உரைக்கின் இவர் தம்பால் ஒன்று வேண்டினர்க்கு மறுத்தறியாத வன்மையும். இன்னல் கருதிக் கண்ணீர் ஒரு துளியும் விடாத திண்மையும் திருமாலின் திருவடிகளிடத்தில் வைத்த பத்தியின் உண்மையும் உடையராவர். இப் பெற்றியமைந்த இவ்வாண்டகை தம் சுற்றத்தார்களும், நண்பர்களும், புலவர்களும் மற்றும் தம் ஆதரவு பெற்றிருந்தோர்களும் ஆகிய எண்ணிறந்தோர் அளவற்ற வருத்தமுறத் தமது ஐம்பதாம் வயதில் சித்தார்த்தி யாண்டு பங்குனித்திங்கள் 25-ம் நாளில் இராம நாமம் சொல்லிக் கொண்ருந்தபடியே தம் பொன்போலும் அழிகிய உடம்பை விடுத்துப் பரந்தாமனலகெய்தினர்" என்பது.


மற்றும், மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீட்சைகளில் முதன்மையுறத்தேறிப் பொற் பதக்கம் பொற்றோடா முதலிய பரிசில்கள் பெற்றோராயும், நூலாராய்ச்சியும், பிரசங்க ஆற்றலும். செய்யுளியற்றும் திறமையும் வாயந்தோராயும், பத்திரிகை நடாத்து வோராயும், பழைய நூல்களை ஆராய்ந்தும், நூல் உரைகள் எழுதியும் வெளிப்படுத்து வோராயும் இப்பொழுதும் சிற் சிலர் இருக்கின்றனர். தமிழ்ப் புலமை வாய்ந்த பெண்மணிகளும் சிலர் இருக்கின்றனர்.


இங்ஙனம், தமிழ்ப்பற்று மிக்குடைய இக்குலத்தினர் பண்டு தொட்டுத் தமிழ்ப்புலவர்களை யாதரித்து அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்று வந்திருக்கின்றனர். புதுக்கோட்டை மன்னர் முதலாயினோர் பரிசு பெற்றுளோரை இங்கெடுத்துக் கூறுதல் மிகை. அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர் காங்கயன்பட்டி, ஆச்சான் பேட்டை, பிரம்பூர், சீராளூர் முதலிய இடங்களிலிருந்த கள்ளர்குலப் பிரபுக்களிடம் பெரும்பரிசில்கள் பெற்று, அவர்கள் மீது பல பிரபந்தங்களும், தனி நிலைக் கவிகளும் பாடி யிருக்கின்றனர். இங்ஙனம் பாடியோர் மற்றும் பலர்.


இனி, இக்குலத்தவர் பண்டு தொட்டுச் செய்துவந்திருக்கும் அறங்கள் மிகப்பலவாம் . தமிழ் நாட்டிலுள்ள எத்தனையோ கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், மானியம் விடுத்துமிருக்கின்றனர்; மடங்கள் கட்டியுள்ளனர்; அன்ன சத்திரங்களும், தண்ணீர்ப் பந்தல்களும் ஏற்படுத்தி யிருக்கின்றனர்; குளங்கள் வெட்டி யிருக்கின்றனர். இவர்களில் தொண்டைமான் குடும்பத்தினர் மாத்திரமே செய்திருக்கும் அறங்களுக்கு ஓர் எல்லை இல்லை, திருவாரூர் வைத்தீசுவரன் கோயில், திருச்செங்காட்டங்குடி, ஆளுடையார் கோயில் , திருக்கோகரணம், பேரையூர், பழனி, மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சங்கரநயினார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் இத்தலங்களிலும், மற்றும் பல விடங்களிலும் இவ்வகுப்பினருடை மடங்கள் இருக்கின்றன, இவ்வகுப்பினர் தஞ்சையில் தரும வைத்தியசாலை (ஆஸ்பிடல்) ஏற்படுத்துதற்குப் பெரும் பொருள் உதவியிருக்கினற்னர்; ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஆட்களையுதவித் திருவிடைமருதூர் முதலிய தலங்களில் உள்ள திருத்தேரை எழுந்தருளச் செய்கின்றனர்.

தொடர்....25

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு