அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 23 -

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது:

மறைமுடிவாழ் மாதேவன் வண்செவிக்கண் வாக்கு

நறையெனநூ லோர்ந்தருட ராசன் --பிறைநுதலார்

கையாற்றந் தாதிவர்பூங் கஞ்சந் திகழ்கழனி

யையாற்றந் தாதியரைத் தான்.


தியாகரரசச் செட்டியாரவர்கள் பாடியது:

மன்னுதிரு வையாற்றின் வாழ்பரம னார்ச்செவிக்குத்

துன்னு மருளுமையின் சொல்லாகும்-- நன்னூல்கள்

நந்தா தினிதோர் நடராசன் சொலயமக

வந்தாதி யென்னு மது.


பூண்டி வீரையா வாண்டையார் திருப்பூவண நாதர் மீது தோத்திரங்கள் பாடியிருக்கினறனர். இளங்காடு, உறத்தூர், கடையக்குடி, நடுக்காவேரி, முதலிய இடங்களில் தமிழ் புலமை யுடையோர் சிற்சிலர் இருந்திருக்கின்றனர். சில ஆண்டுகளின் முன் அன்னம்பட்டீயத்திற்கு விளக்கம் எழுததி 'தருக்க விளக்கம்' என வெளிப்படுத்திய சோமசுந்தரம் பிள்ளையும் இவ்வகுப்பினரே. பொதுவாக இக்குலத்தவர் தமிழிலே அளவு கடந்த ஆர்வமும் பற்றுமுடையர் என்று கூறுதல் பொருந்தும்.


மூன்றாண்டின் முன் இவ்வுலகில் புகழுடம்பைவைத்துச் சென்றாரும், கல்வியிலும். வண்மையிலும், நற்குணத்திலும் மிக்காரும், அரசஞ்சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஜி. சதாசிவவிஞ்சைராயர், சர்க்கரை இராமசாமிப் புலவர், மு.ரா.அருணாசலக்கவிராயர், கோபால கிருஷ்ணையர், வி. சாமிநாதப்பிள்ளை முத்துசாமி ஐயர்,சேதுராம பாரதியார் முதலிய எண்ணிறந்த புலவர்களாற் புகழ்ந்து பாடப்பெற்ற பெருமை வாய்ந்தாரும் ஆகிய அரித்து வாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத இராசாளியார் இக்குலத்தவரென்பது யாவரும் அறிவர். சோழவந்தான் சண்முகம்பிள்ளையவர்களால் எழுதப்பட்ட தொல்காப்பியப் பாயிர விருத்தி என்னும் புத்தகம் இராசாளியாரவர்களால் பதிப்பிக்கப்பட்டதென்பதை அதன் முகவேட்டினின்றும் அறியலாகும். மற்றும் பிள்ளையவர்கள் அப்புத்தகத்தில் நன்றி கூறல் என்னும் பகுதியில் இராகாளியாரைக் குறித்துக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. அது,


" பின்பு சுவாமிகள் கட்டளைப்படி முறையே பாயிரவிருத்தி முதலாயின அச்சிடுமாறு கருதிக் குரோதி வருடம் தை மாதம் தஞ்சை சென்றேன். சென்று வேலை தொடங்கிய சினாளுட் சுரங்கண்டு உணவொழித்துக் கிடைப்படுத்திற்றாகலின் அச்சிடு முயற்சியும் நின்றது. அக்காலை, எனக்கு மிக்க நண்பினரும், வடமொழி, தென்மொழி ஆங்கில நூலாராய்ச்சியே பொழுது போக்கும் விளையாட்டாகவுடையாரும், பிரபு சிகாமணியும், வள்ளலும் ஆகிய அரித்துவாரமங்கலம் மகா ராரா ஸ்ரீ வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியாரவர்கள் என்னைத் தம்மூர்க்கழைத்துச் சென்று, பல நன்மருத்துவரைக்கொண்டு மருந்தளித்தும், வேதமுணர்ந்த அந்தனரைக் கொண்டு கிரக சாந்தி முதலாயின செய்தும் பிணி தீர்த்து, வெண்பொற்காசு முந்நூற்றின்மேலாக என்னிமித்தம் செலவு செய்ததுவுமின்றி, அப்பொழுது தேகவன்மை யெனக்கின்மையால் தமக்குள்ள இன்றியமையாதனவாகிய உலகியல் பலவற்றையுங் கருதாமல் தாமே பரிசோதித்தும், பிரைக்கொண்டு பரிசோதிப்பித்தும் இப்புத்தகத்தைப் பதிப்பித்து முடித்துப் பேருதவிபுரிந்தார்கள். அவர்கள் செய்த உதவியேயன்றிக், குணமாட்சியும் பன்னாளுடனிருந்து பழகித் தெரிந்தேனாகலின் அவர்களது நாட்பை எழுமையும் மறப்பேனல்லேன்" என்பது.

மீதம் 24

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு