அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 21 -

இனி, நாடு காவலின் இயற்கையை சிறிது விளக்குதும்


கள்ளர் குலத்து இப்பொழுது அரசராயும், குறுநில மன்னராயும் உள்ளாரது காவல் இங்கே எடுத்துக் காட்ட வேண்டுவதன்று. ஏனைய நாட்டாமைக்காரரை பற்றியே இங்கு கூறவது. இன்னோர் பண்டு அரசராயும், குறுநில மன்னராயும் விளங்கி இருந்தமையாலும் அம்மைக்காலம் வரையில் குறுநில மன்னர்களாய் இருந்திருத்தலாலும் இவர்களது செல்வாக்கிற்கு பிற வகுப்பினர் பெரிதும் கட்டுப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டாமைக் காரர் அல்லது அம்பலக்காரர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக தஞ்சை ஜில்லாவின் மேற்கு பக்கத்தில் உள்ளவர்களில் காங்கய அம்பலக்காரரை முதன்மையாகக் கூறலாம் . அவர்கட்கு சென்னப்பட்டினம் வரையில் காவற் கிராமங்கள் இருந்தன என்பர். அடுத்து, ராயமுண்டார் , சோழகர், சோழங்கதேவர், மேல்கொண்டார், நாட்டரையர், சொம்பியமுத்தரசு, வன்னிமுண்டார், கொடும்புராயர், கண்டியர் முதலானவர்களைக் கூறலாகும். இதிலிருந்து இன்னார்க்கு இன்னின்ன கிராமங்கள் என இவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர் என்பது விளங்கும். காவர் கிராமம் என்பதில் இவர்களுடைய உரிமையும், கடமையும், என்னவென்று பார்ப்போம். ஓர் அரசனுக்கு குடிகள் வரிசெலுத்துவது போன்றே கிராமத்தார்கள் இவர்கட்கு ஆண்டுதோரும் வரி செலுத்துவர். வரி தனித்தனியாவேனும், கிராமத்தார் ஒன்று சேர்ந்து மொத்தமாக வேனும் செலுத்துவதுண்டு. மற்றும் அம்பலக்காரர் வீட்டில் கல்யாணம் முதலிய நடக்குங்காலங்களில் காணிக்கை செலுத்துவதுண்டு. இவ்வுரிமையை பெற்றுக்கொள்ளும் அரசு காவலர் தமது காவலில் உள்ள ஊர்களில் எவ்வகை களவும், கொள்ளையும், நிகழாமல் பார்த்துக்கொள்ளும் கட்டுப்பாடுடையர். களவு நிகழாமல் பார்ப்பதென்றால் தாம் சென்று காத்து நிற்பதில்லை; ஆட்களை அனுப்பி காப்பதும் இல்லை. தம் வலிமையாலும் ஆணையாலும் பாது காப்பாராவர். இன்னாருடைய அரசு காவலில் உள்ள ஊர் என்று தெரிந்தால் திருடர்கள் அவ்வழிச் செல்லமாட்டார்கள். ஒரு கால் ஏதேனும் களவு நிகழ்ந்து விடின் கிராமத்தார் அம்பலக்காரருக்கு செய்தி தெரிவிப்பர். அம்பலக்காரர் தம் ஆட்களை பல இடங்களுக்கு அனுப்பி களவு போன பொருளை எவ்வாற்றாலேனும் மீட்டுக் கொடுப்பர். சில சமயங்களில் அம்மபலக்கார் தம் கைப்பொருள் செலவு செய்து மீட்க நேரும். இதில் கிராமத்தார்க்கு எவ்வளவு நன்மையிருக்கிறதென்று பாருங்கள். சில சமயங்கள் அரசு காவலர் சிலர் தவறான வழிகளில் நடத்தலும் நிகழக்கூடியதே. அது குறித்து அம்முறையே வெறுக்கத்தக் கதாகது. தற்காலத்தில் நாட்டின் சாதன பாது காப்புக்கு போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நூற்றில் 90 ஊர்களுக்கு அதன் சம்பந்தமே இல்லை. அவ்வூர்களில் ஏதேனும் நிழந்து விட்டால் அவர்கள் நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க , அன்னோருத்தரைவைப் படிப்படியாகப் பெற்றுப் போலீசுக்காரர் வந்து பாத்து ஏதேனும் எழுதிக் கொண்டு போகின்றனர். இதில் எவ்வளவு நம்மையை நாம் எதிர் பார்க்கமுடியும்? இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுதுதான் பழைய அரசு காவலின் பயன் விளங்கா நிற்கும் . அம்பலகாரர்கட்கு அன்னோர் காவலுட்பட்ட கிராமத்து மக்கள் தாம் ஆண்டுதோறும் செலுத்தும் வரி முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாட்டயங்களும், முறிகளும் எழுதிக் கொடுத்திருக்கின்றனர் அரசாங்கத்தினர் அவற்றில் பல பட்டயங்களைக் கைப்பற்றி விட்டனரென்றும், பட்டயம் பெற்றிருந்த சிலரிடம் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கட்க உபகாரச் சம்பளம் கொடுத்து வந்திருக்கின்றன ரென்றும் அறிகின்றோம். தாங்கள் பரம்பரையாக அடைந்து வந்து வருவாயை இழந்த காரணத்தால் அம்பலகாரரிற் சிற்சிலர் தத்தம் பெருந்தன்மையை இழக்கவும் நேர்ந்தது. இப்பொழுது பெரும் பான்மை அரசு பாவர் ஒழிந்துவிட்டது. சிற்சில இடங்களில் பழமையை நினைவுகூர்ந்து, அன்புபள்ளி ஒருவகையான சம்பந்தம் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இனி, அம்பலகார்கள் அரச காவல் முறையை நாடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை, இவர்கள் தம்முடைய நிலங்களை நன்கு பயிரிட்டுத் தம் உழைப்பினார் வருகின்ற பொருள் கொண்டு தம்ட் வாழ்க்கையை நடாத்தி ஏனையர்க்கும் இயன்ற உதவிசெய்து கொண்டு அறநெறியில் நிற்பார்களாயின் எவ்வளவோ சீரும் சிறப்பும் எய்துவார்கள். பழைய நாளில் இவர்கள் அரசு காவல் முறி பெற்றமைக்குச் சில சான்றுகள்் காட்டி இவ்வதிகாரத்தை முடிப்போம். பினவருபவை, விணணனூர்ப் பட்டி, திருவாளர் மு. கந்தசாமிச் சோழங்க தேவர் அவர்களிடமிருந்து எமதருமை மாணவர் திரு. வீ. உலகதாசக் கொடும்புராயர் வாயிலகக்கிடைத்த பழைய (ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முந்திய ) ஏடுகளிற் கண்டவை:-


1. 'ஈசுவர u ஆனி t 152 வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலுக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப்பட்டியிலிருக்கும் பலபத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவர் பொருப்பு முறிகொடுத்தப்படி .

முறியாவது வடவிண்ணம் பூண்டி மாகாணத்தில் ராயத்துடையார் கிராமம் உட்பட்ட நம்முடைய கிராமம் 12 . இந்த பன்னிரண்டு கிராமத்துக்கு ம் வருடம் ஒன்றுக்குப் பொருப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக்கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருப்பீராகவும் .


2. அக்ஷய uதை t 72 முத்துலிங்க ரெட்டியார் கிராமமான துறைமங்கலம் அகரங்குடியான (பொளை) ? துறைமங்கலத்தில் இருக்கும் லெட்சுமணரெட்டியர் நல்லப்ப ரெட்டியார், காளத்தி ரெட்டியார், எறமரெட்டியார், பூசாரிசின்னத்தம்பி உடையார், கலிதீர்த் உடையார், ரெட்டை பச்சை உடையார், அகரத்தில் இருக்கும் மகாஜனங்கள் கொண்டையா, நரசைய்யா, லிங்கய்யா, மன்னக்கோன், மறவைக்கோன், பெருச்சிக்கோன் நாங்கள் அனைவரும் ஏறிமங்கள நாட்டிலிருக்கம் கருத்த காங்கையர் , வேலாயுத சோழகர் இவர்களுக்கு மேன் காவல் முறிஎழுதிக் கொடுத்தோம் . இதற்கு வருடம் ஒன்றுக்கு பொருப்பு மதுரை சக்கரம் 10 இந்த 10 பொன்னுக்கு கருத்த காங்கயர் பாதிக்கு 5 பொன்னும் வேலாயுத சோழகர் பாதிக்கு 5 பொன்னம் வருஷா வருஷம் கொடுத்துவருவோமாகவும். இந்த படிக்கு சம்மதித்து நாங்கள் அனைவரும் காவல் முறிகொடுத்தோம்.

சாக்ஷிகள்:- சிறுவாச்சூர் நல்லப்ப ரெட்டியர், பெருமாயிலூ நல்லப்பரெட்டியர்... .நாட்டுக்கணக்கு ரெங்கநாதபிள்ளை


3. தாது u வைகாசி t 132 ஏறிமங்கல நாட்டிலிருக்கும் கருத்த காங்கைய அம்பலக்காரர் கீழத் துவாகுடியைச் சேர்ந்த செங்கிப்பட்டியிலிருக்கும் ஓந்தையா மேல்கொண்டார் அம்பலக்காரர், கருவிப்பட்டியிலிருக்கும் ராமையா மேல்கொணடார் அம்பலக்காரர் இவர்களுக்கு கூகையூர்ச் சீமை நாட்டார் செகநாத உடையார் மற்றும் ்உள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன்காவல் பட்டையம் எழுதி கொடுத்தோம். மேன் காவலாவது கூகையூர், மாமந்தூர், வீரபயங்கரம், கருத்துளங்குறிச்சி இந்த கிராமம் நான்குக்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 20. செந்து அளம்பளம் , கிருஷ்ணாபுரம், பெருமாள் பாளையம், சித்தேரி, நரையூர், வடபாதி, அரசங்குடி, சிறுபாக்கம், உறத்துர், திருவலந்துறை, பசும்பலூர், பாதாங்கி, ஐயனார்பாளையம், பில்லாங்குளம், சிறு நிலா, பெறுநிலா, பட்டாக்குறிச்சி, வடகரைப் பாதி, மாவிலிவகை, ஆண்டியமடம், ஆகிய இருபது கிராமத்துக்கு ம் பொருப்பு மதுரைச் சக்கரம் பொன் 90. இந்த 20 கிராமம் உட்பட கிராமம் 24 க்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 10. இந்தப்படிக்குச் சம்மதித்து மேன்காவல் பட்டயம் கொடுத்தோம். . . . .

இதற்குச் சாட்சி:- சிகம்பூர் பெரியஉடையார், சிறுமதுரை திருமேனிப் படையாச்சி.

தொடரும் 22

4மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger thiyagu

கள்ளர் சரிதிரத்தை நயம்பட விளக்கிய அண்ணன் ஆறிவானந்தனுக்குஎங்கள் பாராட்டுக்கள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நல்லது தியாகு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

என்னார் ஐயா. ஒவ்வொரு பாகமாகப் படித்துக் கொண்டு வருகிறேன். எனக்கு இயற்கையிலேயே வரலாறு படிப்பதென்றால் பிடிக்கும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நல்லது குமரன்

 

Post a Comment

<< முகப்பு