அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 20 -

இங்கே காட்டியவற்றிலிருந்தும் பிறவாறு யாம் ஆராய்ந்தவற்றிலிருந்தும் நாட்டுக்கூட்டத்தின் இயல்பினைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாகும்:-


கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலக்காரர் அல்லது நாட்டாண்மைக்காரர் என்பது சிறப்புப்பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுள்ளோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிசவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து, ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்பச்செய்து விடுவர். வழக்காளிகளும் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடீரென அடைந்து விடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம், ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகதியுடைய வேறு யாரையாவதுஊரார் தேர்ந்தெடுத்துக்கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியவராகப் போய்விடினும் அவரது உரிமைக்கப் பழுது வருவதில்லை. சில சமயங்களில்பெண்டிரும் கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவாராவர். ஒரு நாடு அல்லது நாட்டின் பகுதியில் (மாகாணத்தில்) உள்ள ஒவ்வொரு ஊர் அம்பலக்காரரும் ஆண்டிற்கு ஒருமுறை கூடுவதுண்டு. இது நாட்டுக் கூட்டம் அல்லது மகாநாடு எனப்படும். நாட்டின் முதற்கரை அல்லது தலைக்கிராமத்திலுள்ள அம்பலகாரர், மற்றையூர்களின் தலைவர்களுக்கு மகாநாடு கூட நாள் குறிப்பிட்டுத் திருமுகம் அனுப்புவர். குறிப்பிட்ட நாளிலே நாட்டின் பொதுத்தலத்தில் கூட்டம் ஆரம்பமாகும்.


ஒவ்வொரு நாடு அல்லது நாட்டின் உட்பட்ட மாகாணத்திலும் ஏதேனும் ம் ஒரு தெய்வம் இருக்கம். அத்தெய்வத்திற்குக் காப்புக் கட்டித் திருவிழாச் செய்யத் தீர்மானித்தற் பொருட்டாகப் பெரும் பாலும் நாட்டுக் கூட்டம் கூடும் ஆனால் அப்பொழுதே நாட்டின் உட்பட்ட கிராமப் பொது வழக்குகளெல்லாம் கொண்டு வரப்பெறும். ஏரி குளம், வாய்க்கால், எல்லைப்புறம் என்பன பற்றியும் மற்றும் பலவகையாகவும் ஒரு கிராமத்திற்கு மற்றொரு கிராமத்துடன் ஏற்பட்டுள்ள பிணக்குகளெல்லாம் அப்பொழுது கொண்டுவந்து வாதிக்கப்படும். நாட்டுமக்கள் பெருந்திரளாகக் கூடுவதும் உண்டு எனினும் அவர்கள் வேடிக்கை பார்ப்பதன்றி இடையே யாதும் பேசுதல் செய்யார். அம்பலகாரர்கள் மாத்திரமே பேசி முடிவு செய்தல் வேண்டும். வழக்கு மிகுந்து விடுமேல் கூட்டம் தொடர்ச்சியாய்ப் பல நாள் நடைபெறுவதுமுண்டு. எல்லா வழக்குகளும் யாருக்கும் மனத்தாஙகலின்றித் தீர்த்து வைக்கப்பட்ட பின்னரே திருவிழா நிச்சயிக்கப் பெறும். நாட்டுக் கூட்டத்தின் தீர்ப்புகள் எல்லாம் எழுத்துமூலமன்றி வாய்மொழியாகவேயிருக்கும். பத்திமெழுதிப்பதிவு (ரிஜிஸ்தர்) செய்தும் பிறழ்ச்சி மிகுகின்ற இக்காலத்தில் இச்செயல் எவ்வளவு வியப்பைத் தருவதாகும்! வெறும் வாய்மொழிக்கு முன்பு அவ்வளவு மதிப்பிருந்தது. வாய்மொழித் தீர்ப்பிற்கு யாவரும் கட்டுப்பட்டு நடந்த வந்தனர். இவ்வாறாக உர்வழக்குகளெல்லாம் அவ்வூர் தலைர்களாலும், நாட்டு வழக்குகளெல்லாம் நாட்டு கூட்டங்களாலும் ஒரு காசும் செலவின்றி உண்மை கண்டுமுடிவு செய்யப்பட்டு வந்தன. இப்பொழுதோ வழக்காளிகளிற் பெரும்பாலரும் தம் சொத்துக்களையெல்லாம் இழந்து முடிவில் ஓட்டாண்டிகளாகி விடுதல் கண்கின்றோம். சட்டத்திற்றேறி மன்றின்கண் ஏறி விடும். வக்கீற் கூட்டத்தினர்க்கு நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலத்தில் கருத்துண்டாவதில்லை. ஏழைகளுக்கு நன்மை செய்ய அவர்களுக்கு எவ்வளவோ வன்மையுண்டு. அவ்படியிருந்தும் யார் எக்கோடு கெட்டால் என்னென்று அவெர்கள் வழக்குகளைப் பெருக்கவே முயலுகின்றனர். அவர்களுக்கு உண்மையாகவே உயர் நோக்கம் இருக்குமாயின் இப்பொழுதுள்ள வளவிற் பாதியளவாக வேனும் வழக்குகள் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை. இராஜராஜ தேவர் முதலான பழைய சோழ மன்னர்கள் காலத்தில் ஊர்தோறும் பஞ்சாயத்துகள் இருந்து, நாட்டின் ஆட்சி சிறிதும்வருத்தமின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்திருத்தலை அறிவிக்கும் கல்வெட்டுச் சாசனங்கள் எண்ணிறந்தனவுள்ளன. அம்முறையர்னது நாளடைவில் அருகிவந்து இப்பொழுதுள்ள நிலைமை சம்பவித்திருக்கிறது. அரசாங்கத்தினர் சிற்சில இடங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்படுத்திப் பார்க்கின்றனர். அவற்றின் தன்மையும், பயனும் இப்பொழுது விளக்கமாகச் சொல்லுதற்கில்லை. இந்தியாவிலுள்ள அரசியற் கிளர்சியாளர்களில் ஒரு பகுதியார் தங்கள் கொள்கைகளில் பஞ்சாயத்துச் சபை ஏற்படுத்துவதும் ஒன்றாகக் கொண்டிருக்கின்றனர். அஃதுஎவ்வளவு பயனளிக்கு மென்பது பின்பே தெரியக்கூடும். அது நிற்க, கள்ளர் குலத்தினர்க்குப் பஞ்சாயத்தும் , நாட்டுக் கூட்டமும் தொன்று தொட்டுள்ள வழக்க மேயாதலின் அவர்கள் மீண்டும் அவைகளைக் காலத்துக்கேற்ற திருந்திய முறையில் ஏற்படுத்தி நடத்திக்கொண்டு வருவது எளிதேயாகும். அவ்வாறு நடத்திவரின் அவர்கட்கும், நாட்டிற்கும் எவ்வளவோ நன்மையண்டு. அரசாங்கத்தினரும், பிறரும் அவற்றை ஆதரிக்கவே கடமைப் பட்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் ஒற்றமையே இன்றியமையாதது.

தொடரும்....21

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு