அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 18 -

பின் உள்ளவை புதுக்கோட்டைச் சரிதத்திற்காணப்படுவன


கூற்றம் எனவும், நாடு எனவும், நாடு வகுக்கப்பட்டது. கூற்றம் பெரும் பிரிவு; நாடு அதன் உட்பிரிவு, கோனாடானது உறையூர்க் கூற்றம் (வடபால்), ஒளியூர்க் கூற்றம் (தென் மேற்கு) உறத்தூர்க் கூற்றம் (வடமேற்கு) எனவும் கானாடானது மிழலைக் கூற்றம், அதளிக்கூற்றம் எனவும், பகுக்கப்பட்டிருந்தன. பிற்பட்ட சோழபாண்டியர் காலத்து வளநாடு என்றும், நாடு என்றும் பிரிவுகள் ஏற்பட்டன.

புதுக்கோட்டைச் சீமையில் உள்ள வளநாடுகள்:-

  1. ராஜராஜ வளநாடு

  2. ஜயசிங்க குலகால வளநாடு

  3. இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு

  4. கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடு

  5. விருதராஜ பயங்கர சோழ வளநாடு

  6. கேரள சிங்க சோழ வளநாடு

  7. சுந்தர பாண்டிய வளநாடு

என்பன. இப்பெயர்கள் பின்னாளிலும் வழங்கி வரலாயின"

திவாளர்கள் சர்கரை இராமசாமிப் புலவரவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டிற்கண்ட ராயர் எழுவர் பெயர் முன்பு காட்டப்பட்டது. அவர்கட்கு உரியவாக ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும் அதிற் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் கூற்றங்கள்: 'மிழலைக் கூற்றம், முத்தூர்க்கூற்றம், அரும்புர்ககூற்றம், திருக்கானக்கூற்றம், தொகவூர்க் கூற்றம், முத்தூர்க் கூற்றம். அரும்புர்க்கூற்றம், திருக்கானக்கூற்றம், தொகவூர்க் கூற்றம், கொடுமளூர்க்கூற்றம், இளையானகுடிக் கூற்றம் என்பன. நாடுகள்:- கருங்குடி நாடு, உயர்செம்பி நாடு, கலாசை உருக்கு நாடு, தடாதிருக்கை நாடு, உலகு சிந்தாமணி நாடு, தோராபதி நாடு, மதுரை உதயவளநாடு, வாகுள்ள வளநாடு, சேர சோழ பாண்டி வளநாடு, வெள்வி நாடு, கானாடு, கைக்கு நாடு, மெய்கண்ட நாடு விரிஞ்சிங்க நாடு, தொளசிங்க நாடு, செம்பொன் நாடு, முடுக்கு நாடு என்பன.

திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்.


"தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி, கீழத் துவாகுடி நாடு, கொள்கை நாடு, செங்குள நாடு, மெல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, பனையக்கோட்டை நாடு, காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு,பட்டுக்கோட்டைவளநாடு , கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச்செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப்பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர், நொழயூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வல்ல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர்மாணிக்க நாடு, கம்பனூர்ட நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்துநாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு , எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர்நாடு" என்பன

தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி..,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:


நாட்டின் பெயர் (தஞ்சாவூர்)

நாட்டின் முதற்கரை

பொதுத்தலம்

காசாநாடு

தெக்கூர்

கோயி

கேனூர் நாடு

தெக்கூர்

கோட்தைத்தெரு

பின்னையுர்நாடு

பின்னையூர்

பின்னையூர்

தென்னம நாடு

தொன்னம நாடு

.....

கன்னந்தங்குடி நாடு

மேலையூர்

. . . . .

உரத்த நாடு

புதுவூர்

கோயிலூர்

ஒக்கூர் நாடு

மேலையூர்

. . . .

கீழ ஒக்கூர் நாடு

கீழையூர்

. . . . .

திருமங்கலக் கோட்டை நாடு

மேலையூர்

. . . .

தென்பத்து நாடு

பேரையூர்

அப்பராம்பேட்டை

ராஜவளநாடு

நடுவாக்கோட்டை

. . . . . . .

ராஜ வள நாடு

நடுவாக்கோட்டை

. . . . .

பைங்கா நாடு

பைங்கா நாடு

. . . .

வடுகூர் நாடு

தென்பாதி

. . .

கோயில்பத்து நாடு

கம்பை நத்தம்

கோயில்பத்து

சுந்தர நாடு

வளமரங்கோட்டை

. . . . .

குளநீள் வளநாடு

துரையண்டார் கோட்டை

கடம்பர் கோயில்

பாப்பா நாடு

தெற்குக் கோட்டை

சங்கரனார்கோயில்

அம்பு நாடு தெற்க வடக்குதெரு

செங்குமேடு 12டான் விடுதி

அம்புகோயில்

வாகரை நாடு

குருங்குளம்

. . . . .

வடமலை நாடு

பகட்டுவான் பட்டி

. . . . .

கொற்கை நாடு

செங்கிபட்டி கூனம் பட்டி

. . . . . .

ஏரிமங்கல நாடு

ராயமுண்டான்பட்டி

வெண்டையன்பட்டி

செங்கள நாடு

விராலிப்பட்டி

நொடியூர்

மேலைத்துவாகுடிநாடு

சூரியூர்

. . . .

மீசெங்கிளி நாடு

. . . .

. . . .

தண்டுகமுண்டநாடு

. . . . .

. . . . .

அடைக்கலங்காத்தநாடு

அள்ளூர்

. . . .

பிரம்பை நாடு

பிரம்பூர்

. . .

கண்டி வள நாடு

நடுக்காவேரி

. .. .

வல்ல நாடு

இளங்காடு

. . ..

தந்தி நாடு

நத்தமாங்குடி

. . ..

வாராப்பூர்

பொன்னம் விடுதி

. .. . .

ஆலங்குடி நாடு

ஆலங்குடி

. .. .

வீரக்குடி நாடு

வாண்டான் விடுதி

திருமணஞ்சேரி

கானாடு

திருவரங்குளம்

. .. . .

கோ நாடு

. . ..

. .. . .

பெருங்குளூர் நாடு

பெருங்களூர்

. . . ..

கார்யோக நாடு

. . . .

. . .. .

ஊமத்த நாடு

சிங்கவனம்

. . . . .


கள்ளர் நாடுகளில் இதுகாறும் தெரிந்தவை இங்கு ஒருவாறு எழுதப்பட்டன. இவை இன்னம் நன்காராய்ந்து ஒழுங்குபடுத்தற்பாலன.

தொர்ச்சி 19

3மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger செல்வா

நிறைய செய்திகள் தொகுத்து நன்றாக அளித்துள்ளீர்கள். சான்றுகோள் நூல்கள் கட்டுரைகளும் தந்தால் வலுவூட்டும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger செல்வா

நல்ல பதிவு. நிறைய செய்திகள் தந்துள்ளீர்கள். நன்றி. சான்றுகோள் நூல்கள், கட்டுரைகள் தந்தால் வலுவூட்டும். எங்கு இச்செய்திகள் பதிவாகியுள்ளன என்று கூறலாம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

செல்வா நன்றி
முயற்சிக்கிறேன்

 

Post a Comment

<< முகப்பு