அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 16 -

மதுரைக் கள்ளர் நாடுகள்


  1. மேல்நாடு

  2. சிறு குடிநாடு

  3. வெள்ளூர் நாடு

  4. மல்லாக்கோட்டை நாடு

  5. பாகனேரி நாடு

  6. கண்டர் மாணிக்கம் அல்லது கண்ணன் கோட்டை நாடு

  7. கண்டதேவி நாடு

  8. புறமலை நாடு

  9. தென்னிலை நாடு

  10. பழைய நாடு என்பன

புறமலை நாட்டுக் தலைவரை ஆயர் முடிச்சூட்டுவது வழக்கம் . மேல் நாடானது வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என்று மூன்று உட்பிரிவையுடையது. சிறு குடி நாட்டின் உட்பிரிவுகள் ;ஆண்டி , மண்டை ஐயனார், வீரமாகாளி என்ற தெய்வங்களின் பெயர்களையுடையன. வெள்ளூர் நாட்டின் உட்பிரிவுகள்; வேங்கைப்புலி, வெக்காலி புலி, சாமிப் புலி, சம்மட்டி மக்கள், திருமான்,சாயும் படைத் தாங்கி என்பன போன்றவை சிவகங்கைச் சீமைகயில் 14 நாடுகள் உள்ளன. ஆண்டிற்கொருமுறை பதினான்கு நாட்டின் தலைவர்களும் சுர்ண மூர்த்திஸ் வாமி திருவிழா சம்பந்தமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம். உஞ்சனை, செம்பொன் மாரி, இரவு சேரி, தென்னிலை, என்ற நான்கு நாடுகளும் சிவகங்கை சமீனில் மற்றொரு பகுதியாகும்.


பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளைப் பற்றி, கள்ளல் , ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும் , சிவகங்கை , சிரஞ்சீவி எஸ், சோமசுந்தரம் பிள்ளை நன்கு ஆராய்ந்து தெரிவித்தவை பின்வருவன.


1.மேல நாடு : இது ஐந்து தெருவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மேலை தெருவானது நரசிங்கன் பட்டி முதலிய எட்டு ஊர்களையும் , தெற்கு தெருவானது தெற்கு தெரு முதலிய எட்டு ஊர்களையும் , வடக்கத் தெருவானது வல்லாளப்ட்டி முதலிய 27 ஊர்களையும் பத்துக் கட்டு தெருவானது சிட்டம் பட்டி முதலிய 10 ஊர்களையும் , பறப்பு நாட்டு தெருவானது திருக்காணை முதலிய 8 ஊர்களையும் உடையன. இவர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்கு ச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.

2.நடுவு நாடு: இது மேலூர் முதலிய 20 உர்களையுடையது.

3.சிறு குடி நாடு: இதற்கு செருங்குடி நாடு என்றும் பெயர் உண்டு. இது கீழ வளவு, மேல முதலிய பிரிவுகளையும் , பல ஊர்களையும் உடையது முன்பு வெள்ளூரும் இவர்கட்கு கீழ்பட்டிருந்தது. வெள்ளூர் மன்னவன் சின்னாண்டி என்பவனால் சிறு குடியார் துரத்தப்பட்டனர். இது வெள்ளூருக்கு மேற்கில் இருக்கிறது.

4வெள்ளூர் நாடு: இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு, என்று கூறப்படும். இந்நாடு வெள்ளலூர், அம்பலககாரன் பட்டி, உறங்கரன் பட்டி குறிச்சிப்பபட்டி, மலம் பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களையுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையம் , உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும், மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப் புலி, சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்கர்லி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரை யென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையொன்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத்தம்மன கோயில். வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர். மாகாணக்கூட்டம், நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கே உண்டு மாகாணக்கூட்டம் என்பது ஒரு அம்பலமும், குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத் தலைவரும், 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி(சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்டும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. நாடு முழுவதும் ்ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்.

5.அஞ்சூர் நாடு::- இது மதுரையின் கிழக்கே பன்னிரண்டு மைலில் உள்ளது; தமராக்கி, குண்ணனூர் முதலிய பல ஊர்களையுடையது.

6.ஆறூர் நாடு:- இது சிவகங்கையின் மேற்கே ஐந்து மைலிர் உள்ளது; ஒக்கூர்,நாலுகோட்டை முதலிய பல ஊர்களையுடையது. இந்நாட்டு தலைவர்களுக்குச் சோழ புறம் சிவன் கோயிலில் பட்டுப் பரிவட்டம் மறியாதைகள் உண்டு

7.மல்லக்கோட்டை நாடு:- இது சிவ கங்கையின் வடக்கே 8 மைலில் உள்ளது' மல்லகாக்கோட்டை, மாம்பட்டி, ஏறியூர் முதலிய ஊர்களையுடையது.

8.பட்டமங்களம் நாடு:- இது பட்டமங்கலம் முதலிய பல ஊர்களையுடையது. திருவிளையாடல் புறாணத்திலே கூறப்பெற்ற அட்டமாசித்தி யருளிய பட்டமங்கை என்னும் தளம் இதுவே. மல்லாக்கோட்டை நாட்டுக்கும் பட்டமங்கள நாட்டுக்கும் திருக்கோட்டியுர் பெருமாள் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டு பரிவட்டம் மரியாதைகள் உண்டு.

9..பாகநேரிநாடு:- இது கானேரி, காடனேரி, நகரம் பட்டி முதலிய பல ஊர்களையுடையது இந்நாட்டிற்கு பாகனேரியிலுள்ள சிவன் கோயில் அம்பாள் கோயில்களில் எல்ல எரிமைகளும் மரியாதையும் உண்டு.

10..கண்டர் மாணிக்கம் :- இது கண்டர் மாணிக்கம் முதலிய 13 ஊர்களயுடையது. இந்நாட்டிற்குக் கண்டர் மாணிக்கம் அம்மன் கோயிலிலும் குன்றக்குடி முருகப்பெருமான் கோயிலிலும், தேனாட்சியம்மன் கோயிலிலும் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகளும் எல்லா உரிமைகளும்உண்டு.

11..குன்னங்கோட்டை நாடு:- இது கல்லல் குன்னமாகாளியம்மன் பெயரைக் கொண்டது. இந்நாட்டுக்குத் தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளவர்கள். இவர்களுக்கு பாண்டிநாடு மதிதட்தான், திறைகொண்ட பெரியான், சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு, இவர்கள் திருவெங்கடத்தானைக் குலதெய்வமாக உடையவர்கள், கண்ணிழந்தவர்க்கு கண் கொடுத்த ஒரு பக்தருடைய வழியினர், இவர்கள் பாண்டி வேந்தரிடத்தில் மேலே குறித்த பட்டங்களும், நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய பாசுபந்து வாசமாலையும், சிவகங்கை இராமநாதபுரம் அரசர்களிடத்தில் இரட்டைத் தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை, சுருட்டி, இடைக்கம் பீலிகுஞ்சம், சாவிக்குடை, காவிச் செண்டா, வெள்ளைக்குடை, சிங்கக்கொடி, அனுமக்கொடி, கருடக் கொடி, புலிக் கொடி, இடபக்கொடி, மீனக்கொடி பஞ்சவர்ணக்கொடி என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள். காளையார் கோயில், கல்லல் திருச்சோமேசுரர் கோயில், சிறு வயல் மும்முடீ நாதர் கோயில் என்னும் சிவாலயங்களின் தேர் திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து் பட்டுப் பரிவட்டம் முதலிய மரியாதையுரிமைகள் பெறும் வழக்கம் முடையவர்கள். இந்நாடு தெற்கோ காளையார் கோயிலுமட் வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும் கிழக்கே கோயிலாம் பட்டியும் எல்லையாகவுள்ள பல ஊர்களையுடையது. இந்நாட்டுக்குத் தலைவர் தமது இறுதிக் காலத்தில் தமக்குப் பின் தலைவராக இருக்கத் தமது குடும்பத்தில் தக்காரொருவர்க்குப் பட்டங்கட்டுவது வழக்கம். இவர்களைப் ்பட்டத்துச் சாமி பட்டத்து ஐயா என வழங்கி வருகிறார்கள்.

12.பதினாலு நாடு:- குன்னங்கோட்டை நாட்டிலிருந்து கிழக்கே கடல் வரையில் பதினான்கு நாடுகள் உள்ளன. அவை ஏழு கிளை பதினாலுநாடு என்னும் பெயரால் வழங்குகின்றன.

அவை:- குன்னங்கோட்டை நாடு , தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இருப்பா நாடு, தேர்போகி நாடு,வடபோகி நாடு, கோபால நாடு, ஆற்றங்கரை நாடு, ஏழுகோட்டை நாடு, முத்து நாடு என்பன. இந்தப் பதினான்கு நாட்டாரும் கண்டதேவியில் மகாநாடு கூடுவது வழக்கம். இவற்றில் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு என்னும் நான்கு் நாட்டிற்கும் கண்டதேவி சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. எழுவன் கோட்டை சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் தென்னிலை நாட்டுக்குப் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. இவையன்றித் திருவாதவூர் நாடு, கீழக்கடிநாடு என்னும் நாடுகளும் உள்ளன.

13.திருவாதவூர் நாடு:- இது மேலூர்த் தாலுகாவில் தென்கிழக்கில் உள்ளது; இடைப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர்களயுடையது.

14.கீக்குடிகாடு:- இது மதுரைக்கு மேற்கில் உள்ளது திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும் கற்பக நாடு என்பது 7 மாகாணமும் 30 ஊர்களும் உடையதாகும் முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேது நாடு, கற்பகநாடு என்னும் பெயர்களாலவ் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது.

தொடரும் ........17

3மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger rajendran

கள்ளர் சரித்திரம்-16 மூலம் நமது நாடுகளின் பழக்க வழக்கங்களை அறிய
முடிந்த்து.தாங்கள் தேடி சேர்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. மற்ற பகுதிகள்
எந்தப்பதிவில் கிடைக்கும் எனபதைத் தெறிவித்தால் எனக்குப் பயனுள்ள
தாக இருக்கும்.வாழ்க.....வளர்க.
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SUBRAMANIAN Nachiappan

Please change the name of கல்லல்ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SUBRAMANIAN Nachiappan

Please change the name of கல்லல்ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும்

 

Post a Comment

<< முகப்பு