அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 14 -

கள்ளர் சரித்திரம்

ஐந்தாம் அதிகாரம்

நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல்


தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுதும்.


வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும்.


சேர மண்டலம்

வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி

குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்

ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம்

சேரநாட் டெல்லையெனச் செப்பு'.


பாண்டி மண்டலம்


'வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்

தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார

ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்

பாண்டிநாட் டெல்லைப் பதி.'


சோழ மண்டலம்


'கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு

குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்

ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்

சோணாட்டுக் கொல்லையெனச் சொல்'.


தொண்மை மண்டலம்


'மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்

ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்

தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்

நற்றொண்டை நாடெனவே நாட்டு'.


கொங்கு மண்டலம்


'வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்

குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்குக்

கழித்தண் டலைசூழுங் காவிரிநன் னாடா

குழித்தண் டலையளவு கொங்கு.'

சோணாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே திருமுனைப்பாடி நாடு என்றும் ஒன்று உளதாயிற்று. இதற்கு வேறு சில பெயர்களும் உண்டு. கங்க மண்டலம், ஈழ மண்டலம் என்பன இங்கு ஆராய்ச்சிக் குரியவல்ல. சோழ மன்னர்களின் ஆணை பரவிய இடைக் காலத்தில் பாண்டி மண்டலத்திற்கு ராஜராஜ மண்டலம் எனவும், தொண்டை மண்டலத்திற்கு ஜயங்கொண்சோழ மண்டலம் எனவும், கொங்கு மண்டலத்திற்கு அதிராஜராஜ மண்டலம் எனவும், சோழ கேரள மண்டலம் எனவும் பெயர்கள் வழங்கலாயின. அவை பின்பு விளக்கப்பெறும். இம் மண்டலங்களின் உட்பிரிவுகள் வளநாடு , நாடு, கோட்டம், கூற்றம் என்னும் பெயர்களால் வழங்கின. வளநாடு அல்லாத பிரிவுகள் பழைய தமிழ்ச் சங்க நாளிலே இருந்திருக்கின்றன என்பதற்குச் சங்க நூல்களில் அப்பெயர்கள் காணப்படுதலே சான்றாகும்.


இடைக்கழி நாடு, ஏறுமா நாடு, கோனாடு, பறம்பு நாடு, மலையமானாடு, மழவர் நாடு, மாறோக நாடு, முக்காவனாடு, பல்குன்றக்கோட்டம், குண்டூர்க் கூற்றம், மிழலைக் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் என்னும் பெயர் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன.


பிற்பட்ட தமிழ் நூல்களிலும் நாட்டு வழக்குகள் பயின்றுள்ளன. சைவசமயகுரவராகிய சந்தரமூர்த்தி சவாமிகள் தேவாரம் திருநாட்டுத் தொகையில் மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுக்கை நாடு, நாங்கூர் நாடு, நறையூர் நாடு, மிழலை நாடு, வெண்ணி நாடு, பொன்னூர் நாடு, புரிசை நாடு, வேளூர் நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற்றம் என்னும் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றிலுள்ள ஊர்களில் ஒரோவொன்றன் பெயரும் கூறியுள்ளார்கள்.


பெரியபுராணத்திலே மேன்மழநாடு, மேற்காநாடு, கோனாடு, மருகல் நாடு என்பன வந்துள்ளன. இங்ஙனம் பிறவற்றுள்ளும் காண்க.

கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து அவற்றிலிருந்து நாட்டின் பிரிவுகளைப் பற்றிய பல அரியசெய்திகள் வெளியாகினறன. அவை ஒருவொறு இங்கே விளக்கப்படும்; கோட்டம், நாடு என்னம் பிரிவுகள் தொண்டைமண்டத்திலும், வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் சோழமண்டலத்திலும் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது உதாரணமாக 'களத்தூர் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத்தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம் என வருவது காண்க. இதன்படி ஊர், கூறு, நாடு, கோட்டம், மண்டலம் என்பன முறையே ஒன்றின் னொன்று உயர்ந்தனவாகும் வளநாட்டின் உட்பட்ட நாடு என்பதற்குப் பிரதியாக கூற்றம் என்பதும் காணப்படுகிறது. 'பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றம் ராஜாசிராய வளநாட்டுப் பாச்சீற் கூற்றம், நித்தவினோத வளநாட்டு ஆவூர்கூற்றம் நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றம், கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்றம்' என வருதல் கண்க. சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும். 'சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான்' என வருகின்றது. சில இடங்களில் கோட்டமாவது , வளநாடாவது கூறப்படாமல் , மண்டலத்தை யடுத்து நாடு, கூற்றம் என்பன கூறப்படுகின்றன.

தொடரும் ....... 15

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு