அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வைகோ

லைஞர் கருணாநிதியைச் சந்தித்தது.... முகமலரச் சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தது.. ‘கலைஞரை முதல்வராக்குவோம்’ என மீண்டும் சங்கநாதம் ஒலித்தது... வைகோவின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்து, மனம் வெதும்பிப் போய் இருக்கிறார்கள் ம.தி.மு.. தொண்டர்கள். மீண்டும் தி.மு..வுடன் இறங்கிப்போவதும் இணங்கிப் போவதும் தங்களுக்கு எந்த வகையில் சாதகமாக இருக்கும் என வேதனையுடன் கணக்குப் போடுகிறார்கள் அவர்கள்.

தி.மு..வுடன் மீண்டும் ஓர் இணக்கத்தை வைகோ ஏற்படுத்திக் கொண்டதில் ம.தி.மு..வினரில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலையில், தங்கள் பெயர் வெளியே வரவேண்டாம் என்ற நிபந்தனையுடன் ம.தி.மு..வின் நிர்வாகிகள் சிலர், இது குறித்து மனம் திறந்து நம்மிடம் பேசினார்கள்.

‘‘
.தி.மு..வின் மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு, அரசியல் ஆய்வு மையக் கூட்டம் ஆகியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. தி.மு..வுடன் கூட்டணி என்ற நிலைப்பாடு, அதில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எங்கள் பொதுச்செயலாளரைப் பொறுத்தவரை தன்னலம் கருதாதவர் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், கொலைப்பழி சுமத்தப்பட்டு, தி.மு..விலிருந்து வேதனை நிரம்பிய நெஞ்சத்துடன் வெளியேறினோம். அப்போது, வைகோ மீது தீராத பற்றுக்கொண்ட ஐந்து பேர் செய்த உயிர்த் தியாகத்தால் இந்த இயக்கத்தின் உணர்வும் வீரியமும் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

நான் அ.தி.மு.. ஆதரவு நிலை எடுக்காததற்கு என் தாயாரின் அட்வைஸும் காரணமாக இருந்தது’ என்ற பொருள்பட வைகோ கூறியிருக்கிறார். அவர் தாய் மீது கொண்ட பாசத்தை வரவேற்கிறோம். அவரது தாயாரை நாங்கள் நன்றாகவே அறிவோம். அன்பும் வைராக்கியமும் பாசமும் மிக்கவர். எண்பது வயது கடந்த நிலையிலும் பொடாவில் ஜெயிலில் இருந்தவர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தாரே, அந்த மனவலிமையை என்னவென்று சொல்வது! ‘உன் தலைவர் (கலைஞர்) நல்லவர். அதனால் இந்த இயக்கத்திலேயே தொடர்ந்து இரு’ என அவர் (வைகோவின் தாயார்) பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைகோவிடம் சொல்லவில்லையா எனத் தெரியவில்லை.

அப்போது, எதற்காக தி.மு..வை விட்டு வெளியேறினோமோ அல்லது யாருக்காக தி.மு..வை விட்டு எங்களை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அக்கட்சிக்கு ஏற்பட்டதோ, அதே நிலைப்பாட்டில்தானே தி.மு.. இன்றும் இருக்கிறது. ‘அப்படியெல்லாம் இல்லை... தி.மு.. தனது நிலையில் மாற்றம் செய்து கொண்டிருக்கிறது’ என எங்கள் பொதுச் செயலாளரால் சொல்ல முடியுமா? ‘என்னதான் பழிச்சொல் வந்தாலும் தி.மு..விலேயே இருப்போம்’ என அப்போதே சொல்லியிருந்தால், அதிலேயே இருந்திருப்போமே. ஐந்து பேரை இழந்திருக்க மாட்டோமே!

தி.மு.. கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளைப் போல்தான் நாங்களும் இருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டில் கூடுதலாக சீட் வேண்டும் என்று கேட்பது தோழமைக் கட்சிகளின் உரிமை. எனவே, மற்ற கட்சிகளைப் போல்தான் கூடுதலாக சீட் வேண்டும் என நாங்களும் கேட்கிறோம். அப்படி இருக்கையில், நாங்கள் மட்டும் இந்தக் கூட்டணியில் தொடர மாட்டோம் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்த கலைஞர் முயற்சித்தது ஏன்? அதுமட்டுமில்லாமல், அந்தச் சூழ்நிலையில் எங்கள் பொதுச்செயலாளர் தனது கம்பீரத்தைத் தொலைத்துவிட்டு, ‘நான் கூட்டணியில்தான் இருக்கிறேன்’ என்று நேரடியாகச் சென்று கலைஞரிடம் சொல்லவேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் எங்கள் கேள்வி.

எங்கள் பொதுச்செயலாளர் மீது கடலளவு பாசம் வைத்திருக்கிறார்கள் ம.தி.மு..வினர். ‘‘நீங்கள் சிறையில் இருப்பதால், நாங்கள் இல்லற வாழ்வைத் தவிர்த்துக் கொண்டு விட்டோம்’ என்று சிலர் எனக்கு எழுதியிருப்பதைப் பார்த்துத் துடித்துப் போய்விட்டேன். இது பகுத்தறிவுக்குப் புறம்பானது எனக் கண்டித்து, அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அன்பு_பாசம்_பரிவு_ பற்று இவற்றின் கூட்டுக் கலவைதான் நமது இயக்கம்’’ என சிறையில் இருந்தபோது நடந்த பொதுக்குழுவுக்கு எழுதிய தனது பேச்சில் வைகோ குறிப்பிட்டிருந்தார். ‘ஒவ்வொரு தொண்டனும் கைகுலுக்கும்போது எனக்குள் ஆயிரம் வாட் மின்சாரம் பாய்கிற உணர்வு ஏற்படுகிறது’ என்பார். இப்படியிருக்கையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக, பாசப்பிணைப்பான தொண்டர்களின் உணர்வுகள் என்ன என்றுகூட வைகோ கேட்காதது வேதனைக்குரியது.

பத்தாண்டுகளுக்கு மேலாக எந்தப் பதவியும் இல்லாமல், ஏன்... எதையும் எதிர்பார்க்காமல் வைகோவுக்காகக் கட்சியில் இருப்பவர்கள் நாங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தும் தைரியமாகக் களமிறங்கினோம். மகிழ்ச்சியாக நின்றோம். மொத்தத்தில் ஆறு சதவிகித வாக்குகளை வாங்கினோம். அப்போது தொண்டர்களுக்கு இருந்த உற்சாகம் இப்போது இல்லை. அது ஏன் என வைகோவுக்குப் புரியாதா என்ன?

சில வாரங்களுக்கு முன்னர், மதுரையில் வைகோவைச் சந்தித்த தென் மாவட்டச் செயலாளர்களில் சிலர், .தி.மு..வுடனான கூட்டணியையே விரும்புவதாக அவரிடம் சொன்னார்கள். அவரும் அப்போது, அதற்கு இசைவு தெரிவிப்பதுபோல மெளனமாக இருந்தார். இப்போது மாவட்டச் செயலாளர்களின் உணர்வுகளும் நொறுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

.தி.மு..வின் அடிமட்டத் தொண்டர்களும் நிர்வாகிகளும் இன்றைக்குச் சஞ்சலமான ஒரு மனநிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் வைகோதான். ஆரம்பத்தில் தி.மு..வுடன்தான் கூட்டு என்பதில் ம.தி.மு.. தொண்டர்களும் அடிமட்ட நிர்வாகிகளும் உறுதியாக இருந்தார்கள். காரணம், 18.7.2003_தேதியிட்ட சங்கொலியில், ‘வருகிற பகையை எதிர்க்கத் தோளோடு தோள் சேர்ந்து களத்தில் நிற்போம். முரசொலியுடன் சங்கொலியும் சேர்ந்து சங்கநாதம் ஆகும். .தி.மு..வும் தி.மு..வும் இணைந்து பணியாற்றுவோம். இரட்டைக்குழல் துப்பாக்கியாவோம்..’ என வைகோ எழுதியிருந்தார். அதேபோல, 2003_ல் கூடிய எங்கள் பொதுக்குழுவிலும் தி.மு..வுடன் இணைந்து பணியாற்றுவது என்பதே முதல் தீர்மானமாகவும் இருந்தது. இவற்றையெல்லாம் வேத வரியாக எடுத்துக்கொண்டு, தி.மு..வுடன்தான் நம் கூட்டணி என்று இருந்தோம்.

ஆனால், சமீபகாலமாக ‘தி.மு..வுடன் உரசல்’ என்பது போன்ற தொனி, கட்சியின் இரண்டாவது கட்டத் தலைவர்களின் மேடைப் பேச்சுக்களில் ஒலித்தது. அவர்கள் ஜாடைமாடையாக தி.மு..வை விமர்சிப்பதை மேடையில் இருந்த வைகோவும் கண்டுகொள்ளவில்லை. அவரும் அதற்கு ஏற்றாற் போல, ‘நாங்கள் ஓ பாசிட்டிவ் ரத்தம் போன்றவர்கள். அது எந்த ரத்த வகையோடும் சேரும்’ என்றெல்லாம் பேசினார். .தி.மு.. பாசறைக் கூட்டங்களிலும் கலைஞரைப் பற்றியோ, அவர்தான் அடுத்த முதல்வர் என்றோ ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. விருதுநகரில் நடந்த தோழமைக்கட்சி பொதுக்கூட்டத்தில்கூட, தி.மு.. தலைவரைப் பற்றிப் பேசுவார் என தி.மு..வினர் உள்பட தோழமைக் கட்சியினர் அனைவரும் எதிர்பார்த்திருக்க, வைகோ தி.மு.. தலைவரைப் புகழ்ந்து பேசவில்லை. இவையெல்லாம், நாம் அ.தி.மு.. பக்கம் நகர்ந்து நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை மெல்ல மெல்ல எங்களுக்குள் ஏற்படுத்தி, நாளடைவில் காங்கிரீட் போட்டது போல அந்த எண்ணம் வலுவானது. எங்களில் பலருக்கு அது மகிழ்ச்சியையும் தந்தது.

காரணம் இல்லாமல் இல்லை. நாங்கள் போட்டியிடும்போது, தி.மு..வுடனான தேர்தல் உறவு எங்களுக்கு எப்படி இருக்கும் எனச் சில மாதங்களுக்கு முன், ஒரு படிப்பினை ஏற்பட்டது. திருமங்கலம் நகரசபைத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வந்தபோது, அந்தப் பகுதியில் எங்கள் கட்சியில் செல்வாக்கானவரும் பொடாவில் உள்ளே இருந்தவருமான நாகராஜன், தி.மு.. கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஏழு கட்சிக் கூட்டணி இருந்தும் இந்தத் தேர்தலில் நாங்கள் அ.தி.மு..விடம் தோற்றுப் போனோம். இது எங்களுக்கு அதிர்ச்சி. ஏழு கட்சிக் கூட்டணியும் எங்களுக்குச் சரியாக வராது என்ற உணர்வை அப்போது உறுதியாக்கியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பயன்படுத்தவே எங்கள் பொதுச்செயலாளரை வெளியே வரவழைத்தார் கலைஞர். அப்போது எங்களுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பிரசாரத்தின் போதுகூட வைகோ அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. நாங்கள் அதை அப்போது யாரிடமும் சொல்லவில்லை. பொதுச்செயலாளரும் அதைக் கண்டுகொள்ளாதது போல நாகரிகமாக நடந்துகொண்டார்.

உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பெரியகுளம் தொகுதியில், அங்கே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆரூணுக்கு ஆதரவாக, மே முதல் தேதியில் வைகோ பிரசாரம் செய்வதாக இருந்தது. இது ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி. ஆனால், அன்றைக்கு ஸ்டாலின் பெரியகுளம் வருவதால், வைகோ நிகழ்ச்சியை ஒத்திவைக்கச் சொன்னார்கள். அதையும் அவர் ஏற்றுக்கொண்டார். எங்கள் கட்சித் தலைவர்களில் ஒருவரான கண்ணப்பனுக்கு சீட் ஒதுக்காமல் தி.மு.. பார்த்துக்கொண்டது. அதையும் பொறுத்துக் கொண்டார். தயாநிதி மாறனுக்காக இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார் வைகோ. இதைக்கூட சன் டி.வி. பெரிய அளவில் காண்பிக்கவில்லை. இப்படியெல்லாம் ஒதுக்கப்பட்டபோதும்கூட வலியச் சென்று தேர்தல் வேலைகளையும் சரி, கலைஞரின் நிகழ்ச்சிகளிலும் சரி தவறாமல் கலந்து கொண்டவர்.

சுமார் மூவாயிரம் பேருடன் நாற்பத்திரண்டு நாட்கள் நடைப்பயணம் போனார். அதை சன் டி.வி. காண்பித்ததுண்டா? சன் டி.வி.யில் வந்த ஒரு சீரியலில் அவரது நடைப்பயணத்தைக் கேலி செய்துகூட வசனம் வந்தது. இப்படி அவமானங்களைத் தாங்கி, நமது மரியாதையை இழந்து, தொடர்ந்து தி.மு.. கூட்டணியில் இருக்கவேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி. சரி, எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வந்து நிற்கத் தயார். அப்போதும் கூட நாங்கள் எதிர்பார்க்கும் சீட் தி.மு.. கூட்டணியில் கிடைக்குமா என்று உறுதியாகத் தெரியவில்லை.

தென் மாவட்டங்களில் அழகிரியுடனும் எங்கள் கட்சியினருக்கு நெருக்கம் கிடையாது. மாநில அளவில் ஸ்டாலினுடனும் நெருக்கம் இல்லை. இவர்கள் இருவர் சொல்வதையும் கேட்கும் தி.மு..வினர்தான் அதிகம். அப்படி இருக்கையில், தி.மு.. ஓட்டு எப்படிச் சிந்தாமல் சிதறாமல் நமக்கு விழும் என யோசிக்க வேண்டாமா? .தி.மு..வுடன் கூட்டணி என்ற பேச்சு கிளம்பியபோது, நாங்களும் சந்தோஷப்பட்டோம். .தி.மு..வினரும் மகிழ்ந்தார்கள். ஆனால், இப்போது தி.மு..வினருக்கு மட்டுமே மகிழ்ச்சி இருக்கிறது. எங்களுக்கு அது தொலைந்து போய்விட்டது.

ஜெயலலிதா பொடாவில் பழிவாங்கினார். எப்படி அவர் கட்சியுடன் தேர்தல் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்?’ என்கிறார்கள். பொடாவில் எங்கள் பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஒன்பது பேரை உள்ளே வைத்தது தாங்க முடியாத வேதனைதான். அதே நேரத்தில், .தி.மு..வுடன் கூட்டணி கூடாது என்பதில் என்ன நியாயம் எனத் தெரியவில்லை. 1976_ல் மிசாவில் தி.மு..விலுள்ள முக்கியப் பிரமுகர்கள் அனைவருமே சிறையில் இருந்தார்கள். மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள். சிலர் இறந்தும் போனார்கள். அதே தி.மு.., 1980_ல் காங்கிரஸுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்ளவில்லையா? ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ எனச் சொல்லவில்லையா?

அரசியலில் ஒன்று முக்கியம். நியாயமாக நடந்தால் அவருக்குத் தோள் கொடுங்கள். தவறாக நடந்தால் விலகிச் செல்லுங்கள்’ என்ற ஆப்ரகாம் லிங்கனின் வார்த்தைகளை, எங்கள் பொதுச்செயலாளர் அடிக்கடி குறிப்பிடுவார். 28.11.2003 தேதியிட்ட சங்கொலியில்கூட இதை விளக்கமாக எழுதியுள்ளார். தோள் கொடுப்பதா, விலகிச் செல்வதா.. எனப் புரியாமல் இப்போது தவிக்கிறோம்.

அதே நேரத்தில் எங்கள் பொதுச்செயலாளர் 14.2.2003 சங்கொலியில் ‘பசுமை நிறைந்த நினைவுகள்’ என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையும் நினைவுக்கு வருகிறது. ‘அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி ஆதிக்க மொழிப் பிரிவு பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என தி.மு.. தலைமை எனக்கு உத்தரவிட்டது. அதையும் மீறி நான் கலந்து கொண்டேன். கலந்து கொண்ட பிறகு, அதற்கான காரணத்தை கலைஞருக்கு மறுநாள் விவரித்தேன். அதற்குத் துணையாக, ‘உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர் குன்றல் இலர்’ என்ற குறளைக் குறிப்பிட்டிருந்தேன். தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான் போர்க்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்... என்பது அந்தக் குறளின் பொருள்’... என வைகோ குறிப்பிட்டிருந்தார். இப்போது எங்களில் சிலரும் இதே குறளைத் தங்களுக்குத் துணையாகக் கொண்டு, இந்தக் கூட்டணிக்கு எதிராக முடிவெடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடுவார்களோ என்ற கவலை எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு இருக்கிறது.

வேலூர் சிறையில் 252_வது கொட்டடியில் 577 நாட்கள் இருந்த தியாக வேங்கை வைகோ. அவர் அறியாதது ஒன்றுமில்லை. தி.மு.. கூட்டணியில் ம.தி.மு.. தொடர்வதால் கட்சியின் மறுமலர்ச்சிப் பயணம் தொடருமா... அல்லது மறுவீழ்ச்சி ஆரம்பமாகுமா... என அவர்தான் யோசித்து முடிவு எடுக்கவேண்டும். இப்படிப் பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் வேலையை எங்கள் பொதுச் செயலாளர் வைகோ செய்வாரென்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை! இது நியாயமா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும்!’’ என ஆதங்கத்துடன் முடித்தார்கள் நம்மிடம் பேசிய ம.தி.மு.. நிர்வாகிகள் சிலர்.

நன்றி குமுதம்

8மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger சாணக்கியன்

ம.தி.மு.க. தொண்டர்களின் புலம்பலில் 100% உணமை இருக்கிறது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மணியன்

இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்படைந்திருக்கும் மக்கள் வைகோ அப்பழுக்கற்றவர், திறமையானவர், திராவிட பாரம்பர்யத்தில் நம்பிக்கையுள்ளவர் என்று நம்பியுள்ளனர். தக்கவிதத்தில் அவர் கையாண்டால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும். இது அவரது தலைமை பண்புக்கு ஒரு சவால். தன்னம்பிக்கையின்றி ஏதாவது ஒரு கூட்டணியில் இணைவாராயின் ஜோதியில் கலந்த சிறுபொறிதான்; அடையாளம் இழக்க வேண்டியதுதான். தி மு க வே முதலில் 13 சட்ட தொகுதிகளையும், அடுத்து 50 சட்டதொகுதிகளையும் பெற்றுதான் காலம் வரும்போது ஆட்சியை கைப்பற்றியது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இல்லை தனித்து நின்றால் கண்டிப்பாக முடியாது 67 ல் திமுக கூட தனித்து நிற்க வில்லை கூட்டு வைத்ததால் தான் முடிந்தது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி குமரன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி பாரதி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

நான் சொன்னபோது நீங்க நம்பல.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் நன்றி தங்களுக்கு

 

Post a Comment

<< முகப்பு