அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

புதன், பிப்ரவரி 01, 2006

திருச்சிராப்பள்ளி

"நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச்
சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே"

என்று தேவாரம் கூறும் சிராப்பள்ளி என்னும் திருச்சராப்பள்ளி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும்.
உறையூரின் ஒரு பகுதியாக இருந்த இது இன்று இதன் ஒரு பகுதியாக உறையூர் ஆகிவிட்டது.
மேற்படி உறையூர் 'சூரவாதித்த சோழனால்' உருவாக்கப்பட்டது. உறந்தை, வாசபுரி, கோழியூர் முக்கீச்சுரம் என்னும் பெயர்களும் இதற்குண்டு.
திருப்பாணாழ்வார் ,மாடக்கோயில்கள் எழுபது கட்டிய மன்னன் கோட்செங்கன் மகளும் அரங்கநாதனின் மனையாளுமான கமலவள்ளி நாச்சியார் , பாண்டிமாதேவி மங்கையர் கரசி பிறந்ததும் , மானங்காத்த மன்னன் கோப்பெருஞ் சோழன் , கரிகால் சோழன்,புகழ்ச்சோழன் பிறந்து வளர்ந்து ஆட்சித் தலைநகரமாய் கொண்டு விளங்கிய நகர் இதுவேயாகும்.

இளம் பொன் வணிகனார், ஏணிச்சேரி,முடமோசியார், கல்லியன் குமாரன், சிறுகாந்தன், பல்சாயனார், மருத்துவன் தாமோதரன், போன்ற சங்கபுலவர்கள் பலரும் பிறந்த பூமி.
சோழ, பாண்டிய,பல்லவ, ஹோய்சள மன்றும் விஜய நகர மன்னர்களாலும், பின் நவாப்புகள் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்துக் குட்பட்டுப் பல போர்களையும், அரசியல் மாற்றங்களையும் கண்டது. வீரம் செறிந்த இம்மண் எத்தனையே சாதனைகளையும் கண்டது. அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளமாக அன்று முதல் இன்று வரை இந்நகரம் இருந்து வந்திருக்கிறது என்பது சரித்திரம் கூறும் உண்மை. சில முக்கிய அரசியல் வாதிகளின் திருப்புமுனையா அமைந்ததும் தமிழகத்தின் மையப்பகுதியகவும் உள்ளது.


தொடரும் . . . . . .

4மறுமொழிகள்:

01 பிப்ரவரி, 2006 21:06 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

This comment has been removed by a blog administrator.

 
01 பிப்ரவரி, 2006 21:07 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நாவாய்
நன்றி

 
01 பிப்ரவரி, 2006 22:38 மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

ஓ அதனால்தானோ சோழர்களுக்குக் கோழி வேந்தர் என்று பெயர்!

 
02 பிப்ரவரி, 2006 07:50 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ராகவன் இருக்கலாம்

 

Post a Comment

<< முகப்பு