அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வீரப்பனை சயனைடு கொடுத்து கொலை

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மலை வாழ் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகிறேன். சமீபத்தில் மேட்டூர் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஜோசியர் என்னை சந்தித்தார்.

அப்போது அவர் எனது கணவர் (வீரப்பன்) சுட்டுக் கொல்லப்படவில்லை பழனி என்பவரும் மற்றவர்களும் சேர்ந்து விஷம் கொடுத்த கொன்றனர் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக உண்மை அறியும் குழு, சிவில் உரிமை பாதுகாப்பு குழு, மனித உரிமைகள் அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டேன். பழனி சொன்ன தகவலை மைக்ரோடேப் மூலம் எடுத் துள்ளேன்.

பழனி கூறுகையில், அதிரடிப்படை போலீசார் தன்னை அணுகி சயனைடு விஷம் கொடுத்தார்கள். அதை மோரில் கலந்து வீரப்பன், சேத்துக்குழி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி, ஆகியோருக்கு கொடுத்தோம் என்று கூறியிருக்கிறார்.

இதை குடித்து வீரப்பன் மயங்கி விட்டதாகவும் அதன்பிறகே அதிரடிப்படையினர் அவரது மீசையை எடுத்து விட்டு மாறு வேடத்தில் இருந்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அப்புறப்படுத்தினார்கள் என்றும் பழனி தெரிவித்தார்.

சயனைடு கொடுத்ததற்காக தங்களுக்கு அதிரடிப்படை தலா ரூ. 7 லட்சம் வழங் கிய தாகவும் பழனி சொல்லியிருக்கிறார்.

எனவே வீரப்பனை அதிரடிப்படையினர் சயனைடு கொடுத்து கொன்று இருக்கிறார்கள்.இதை மறைத்து ஏதோ சாதனை படைத்தது போல் வெகுமதி பெற்று விட்டார்கள். பிரதே பரிசோதனை செய்த டாக்டர்கள் வீரப்பன் உடலில் விஷம் இல்லை என்று கூறி மறைத்து விட்டார்கள். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் வள்ளிநாயகம், சுப்பிரமணியம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதனை படைத்ததாக கூறி அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட பரிசுகளையும், இதர சலுகைகளையும் திரும்ப பெற வேண்டும். அவற்றை அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வீரப்பன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி முத்துலட்சுமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். நீதிபதி கற்பகவிநாயகம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அதனுடன் சேர்த்து இன்று புதிதாக முத்துலட்சுமி தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்.
இது செய்தி
ஏன் நூற்றுக்கு மேல் கொலைகள் செய்த குற்றவாலியை நாள் நேரம் இடம் சொல்லி ஆயுதங்கள் இல்லாமல் மல்யுத்தம் செய்து பிடிக்கனுமோ?. எப்படி செய்தாலும் அது காவல் துறையின் திறமைதானே எதிரியை பிடிக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும் நாட்டிலுள்ள தேசத்துரோகிகள் இன்னமும் அவனது துதி பாடுவது தான் வேதணை.
மைக்ரோடேப் இந்த அளவிற்கு முத்துலட்சுமி முன்னேறி விட்டார்.

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி

 

Post a Comment

<< முகப்பு