அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சித்தர் இராமதேவர்

இராமதேவர் ஒரு துணிவு மிக்க சித்தர் என்றே கூறவேண்டும். தமது நூல்களைத் தொடங்கும்போது தாயே தன்னைப் பாடச் சொன்னதாகவே கூறுவார். அவருடைய பக்தி எத்தகையது என்பதை அதன்மூலம் அறியலாம். இராமதேவர் வைத்கிய காவியம் 1000 என்ற நூலில்,
வளங்கண்டு குருவினுட வண்மை கண்டு
மகத்தான சிவசத்தி பூசை செய்து
நலங் கொண்டு சஞ்சாரச் சமாதி கொண்டேன்
நன்மையுட னஷ்ட திசை சுற்றும்போது
தலங்கண்டேன் அத்தலத்தின் நாதம் கணடேன்
தாயான மனோமணியாள் தன்மை பெற்றேன்
உளம்கனிய மனோன்மணியாள் வாவாஎன்று
உண்மையென்ற பொருள் ஈந்தாள் உருப்பெற்றேனே.


உருவான பொருளறிந்து உண்மை பெற்றேன்
உண்மையுடன் வாராம தேவா என்றாள்
கருவான கருக்குருவு மெனக்கே ஈந்தாள்
கைபாகம் முறைபாகம் கண்கின் பாகம்
திருவான ஒருபாகம் குருவின் பாகம்
செம்மையுடன் நன்றாகச் செப்பினாள் பார்
குருவானகுருவருளால் ஆத்தாள் என்னைக்
கூப்பிட்டுக் காப்பிட்டுக்குறி சொன்னாளே.

இப்படி தாயே தன்னை அழைத்து எல்லாம் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்து "நீ பாடு" என்று கூறியதாகக் கூறும் துணிச்சல் எவருக்கு வரும்?

அதைத் துணிச்சல் என்று சொல்வதா? பக்திப் பெருக்கு என்று சொல்வதா? அல்லது எல்லாம் கடந்த நிலை என்று சொல்வதா?

இராமதேவர் விஷ்ணு குலத்தில் பிறந்தார். மாசி மாதம் பூர நட்சத்திரம் இரண்டாம் காலில் பிறந்தார் என்று போக முனிவர் கூறுகிறார்.

மிகுத்திடவே சாமதேவர் ஜாதிபேதம்
மிக்கான விஷ்ணுகுலம் என்னலாகும்

திருவான ராமரென்ற தேவரையா
தீர்க்கமுடன் வந்துதித்த நேர்மை கேளீர்
கருவான மாசியென்ற திங்களப்பா
கடியதோர் பூரமது ரெண்டாம் காலாம்
மெய் ராம தெவ ராதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தெவர் உயர்குலச் சாதியப்பா

பிரமணராகப் பிறந்த ராமதேவர் பிறகு வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலும் ஆனார், என்று கூறுகிறார் கருவூரார்.

எப்படி என்பதை அவர் விளக்காத தால், தேவர் என்ற பெயரை அடிபப்படையாகக் கொண்டெ அவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ண இடமேற்படுகிறது.

இராமதேவர் சஞ்சார சமாதியில் லயிக்கும் இயல்புடையவராக இருந்தார். அவர்நடந்து கொண்டே இருப்பார் எண்ணம் எங்கோ இருக்கும். கண்கள் பாரா. காது கேளா. மூச்சும் ஓடாது.

அது ஒரு அபூர்வ நிலை, வாசிப் பயிற்சியில் முதிர்ச்சியடைந்த சித்தர்களாலேயே முடியும்.

ஒரு சமயம் காசியிலிருந்து விசுவநாதரைக் கொண்டு வந்து தாம் வசிக்கும் காயரோகணம் என்னும் நாகப்பட்டினத்தில் நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று அந்த எண்ணத்துடனேயே எழுந்து நடக்கத் தொடங்கி விட்டார்.

எத்தனை நாள்? எத்தமை மாதம்? அல்ல ஆண்டுகளா? அவருக்கே தெரியாது. ஒரு நாள் சுயநினை வடைந்து பார்கையில் அவர் காசியில் இருந்தார்.

கங்கையில் நீராடினார். காசி விஸ்வநாதரை தரிசித்தார். மறுபடியும் கங்கையில் வந்து முழுகி எழுந்த போது அவர் கையில் ஒரு லிங்கம் அகப்பட்டது.

இராமதேவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த லிங்கத்தில் காசி விஸ்வநாரை எழுந்தருளச் செய்து அதை நாகப்பட்டினத்தில் கொண்டு வந்து பிரதிட்டை செய்தார். நாள்தோறும் அதைப் பூசித்து வந்தார். தியானத்தில் ஆழ்ந்தார்.

அக்காலத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்துபோகும். அரேபிய நாடுகளிலிருந்து வரும் கப்பல்களேஅதிகம். இராமதேவர் அந்தக் கப்பல்களில் வரும் அராபிய வியாபாரிகளைப் பார்த்து வியப்படைவார். தாமும் அவர்களோடு பேச வேண்டும், பழக வேணடும் என்ற எண்ணம் உண்டாகி யிருக்கலாம்.

ஒரு நாள் தியானத்திலிருந்து கண் விழித்துப் பார்த்த போது அவர் அரேபியாவில் இருந்தார்.
எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? அவருக்கே தெரியாது

தியானத்தில் அந்த எண்ணத்தடன் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்தபடி அப்படியே மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். கடல் வழியாக வந்தாரா? தரைவழியாக வந்தாரா? ஒன்டறுமே அவருக்குத் தெரியாது. விண்வழியாகத்தான் வந்திருக்க வேணடும். சித்தர்கள் விண்வழிப்பயணம் செய்யும் வித்தகர்கள் ஆயிற்றே.

வரண்ட பாலைவணம்! எங்கும் மணல். கண்ணுக்கு எட்டியதூரம் வரை மணல்!

வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் பார்த்துக்கொண்டே நின்றார்.

தூரத்தில் ஒரு ஒட்டகம் வருவது தெரிந்தது. அதன் பின் மற்றொன்று . அதன் பினனால் வேறொன்று ஒட்டகங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தன.

தங்கள் நாட்டில் யாரோ ஒரு அன்னியன் புகுந்து விட்டதைக் கண்டதும் அராபியர்கள் வேகமாக வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"யார் நீ..?”
"எப்படி வந்தாய்?”
"எங்கே வந்தாய்?”

இராமதேவர் பதில் சொல்ல முயன்றார், செவி கொடுத்துக் கேட்பார், யாருமில்லை, அவர்கள் அவரைக் கொண்றே போட்டிருப்பார்கள். ஆனால்அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் உயிர் பிழைத்தார்.

நீ ஏன் தீன் தேசத்துக்கு வந்தாய் உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டோம் என்று அவர்கள் கத்தினார்கள்.

இராமர் அவர்களுடைய தாள் பணிந்து மிகவும் நயமான வார்த்தைகளால் வேண்டிக்கொள்ள; “அப்படியானால் எங்கள் மதத்தில் சேர்ந்துவிடு,” என்று கூறி "இன்று முதல் உன் பெயர் யாக்கோபு,” என்று பெயர் சூட்டி அந்நாட்டு பழக்கப்படி சுன்னத்து செய்து உண்பதற்கு ரொட்டியும் கொடுத்த உபதேசம் செய்தார்கள்.

இராமதேவர் அவர்கள் மனம் போல்நடந்து கோண்டார். பிறகு அவர்கள் மக்கா நகரக் கோட்டைக்குள் இருந்த அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். குரானை ஓது வித்தார்கள். யாகோபு அனைத்தையும் விரைவிலேயே கற்றுக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றார்.

6மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

இராமதேவரின் வரலாறை மிக நன்றாகச் சித்தரித்துள்ளீர்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி சார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

ராமதேவரைக் குறித்து முழுவதும் விளக்கம் தந்தமைக்கு நன்றி!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

ராமதேவரைக் குறித்து முழுவதும் விளக்கம் தந்தமைக்கு நன்றி!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

ராமதேவரைக் குறித்து முழுவதும் விளக்கம் தந்தமைக்கு நன்றி!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி நடேஷ்

 

Post a Comment

<< முகப்பு