அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

விவேகானந்தரின் பிறந்த நாள

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

3மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger மணியன்

இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்த துறவியின் பிறந்தநாளை நினைவூட்டியதற்கு நன்றி. பாஸ்கர சேதுபதி அவர்களைப் பற்றியும் இவ்விடுகை மூலம் அறிந்தேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அவரையும் சிகாகோ சொற்பொழிவும் பற்றி நான் எனது பதிவுகளில் உள்ளது

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

நன்றி என்னார் அவர்களே,
இப்படி எல்லோரும் அவரை சிறிது சிந்தித்தோமானால் நல்லது நடந்தே தீரும்!

 

Post a Comment

<< முகப்பு