அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மலருமுன்னே கசக்கப் பட்ட மலர்

மேட்டுப்பாளையம், ஜன. 9-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சென்னாமலை கரட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாராத்தாள் (வயது 35). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மாராத்தாள் தனது மகள் கள் லட்சுமி (13), சித்ரா (10), மகன் ஆறுச்சாமி (5) ஆகியோருடன் தனியாக வசித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்த மாராத்தாள் வறுமையில் சிக்கி வாடினாள்.

இதையடுத்து அதே கிரா மத்தில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கப்பட்டுள்ளதை அறிந்த அவர் தனது குழந்தைகள் 3 பேரையும் தனது அக்காள் பேத்தி கவுசல்யா (7) என்ற சிறுமியையும் அங்கு சேர்த்தார்.

மாதாமாதம் குழந்தைகளை பார்த்து வந்தார். இதற்கிடையே சென்னாமலை கரட்டில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் விடுதி மொங்கம்பாளையம் கிராமத்துக்கு இடம் பெயர்ந்தது. அங்கும் மாதம் ஒருமுறை சென்று பார்த்து வந்தார்.

அதேபோல கடந்த நவம்பர் மாதம் குழந்தைகளை பார்க்க சென்ற மாராத்தாளிடம் "உனது மகள் லட்சுமி பெரியவளாகி விட்டாள். அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்'' என்று விடுதியில் கூறிவிட்டனர்.

இதையடுத்து லட்சுமியை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் வீட்டுக்கு வந்தது முதல் லட்சுமிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

அடிவயிறு வலிப்பதாகவும், சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் லட்சுமி கூறவே மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தாள்.

அங்கு 45 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது லட்சுமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் பாலியல் ரீதியாக சித்ரவதை நடந்திருக்கலாம் என்றும் இதையடுத்து கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி லட்சுமியை மாராத் தாள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டுக்குச் சென்றதும் லட்சுமியின் இடுப்புக்கு கீழ் செயல்பட வில்லை. மேலும் புண் ஏற்பட்டு சீழ் வடியத்தொடங்கியது.

அப்போதுதான் லட்சுமி தனது தாயிடம் அனாதை விடுதியில் தங்கியிருந்தபோது தனக்கு மாத்திரை கொடுத்து மயங்கச் செய்து விடுதி நிர்வாகி சார்லஸ் தன்னை கற்பழித்து விட்டார் என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாராத்தாள் அழுது புலம்பினாள்.

இந்த விஷயம் மெல்ல மெல்ல அக்கிராமம் முழுவதும் பரவியது. உடனே சேவாபாரதி மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம், வக்கீல் கணேசபாண்டியன், ஆண்கள் சுயஉதவிக் குழுவினர் மாராத்தாள் வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர்.

அதேபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் பசீர் மற்றும் நிர்வாகிகளும் மாராத்தாள் வீட்டுக்கு சென்று விசாரித் தனர். அவர்கள் மீண்டும் லட்சுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இடுப்புக்கு கீழ் செயலிழந்து புண் ஏற்பட்ட நிலையில் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த கோவை குற்ற பதிவேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தண் டாயுதபாணி, அவினாசி டி.எஸ்.பி. முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், வின்சென்ட் பால்ராஜ், கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரசாமி, பெண் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் அனந்தலட்சுமி, சந்திரலேகா, தவ்லத்நிஷா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்கள். பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமி போலீ சில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், பாதிரியார் சார்லஸ் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டபின் தன்னை கற்பழித்ததாகவும் அதன்பிறகேதான் பெரியமனுஷி ஆனதாகவும் தொடர்ந்து பலமுறை மாத்திரைகள் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறாள்.

உடனே போலீஸ் அதிகாரிகள் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாராத்தாள் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாதிரியார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறுமி கூறுவது உண்மையா? உண்மையிலேயே சிறுமி கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மேட்டுப் பாளையம், காரமடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடியவனுக்கு என்ன தண்டணை கொடுப்பது
மாலை மலர்

21மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger rnateshan.

ஏழ்மையாக பிறந்த ஒரே பாவம்தான் இத்தனைக்கும் காரணம்.தொண்டு நிறுவனங்கள் பல இப்படித்தான் உள்ளது>ஏழையின் சொல் அம்பலம் ஏறப்போவதில்லை.தவறு செய்தவரும்பழி வாங்கும் நடவடிக்கை என்று ஜாமினில் வந்து விடுவார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

பாவம் என்று மட்டும் தான் நம்மால் சொல்ல முடியும். நன்றி நண்பரே

 
மணிக்கு, எழுதியவர்: Blogger அப்பாவி

..பாதிரியார் சார்லஸ் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டபின் தன்னை கற்பழித்ததாகவும்..

இந்தக் கொடுமையை செஞ்சது ஒரு பாதிரியாரா? காலம் கெட்டுக் கெடக்கு! வேற என்னத்த சொல்ல! என்னமோ போங்க!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நாம் இதைத்தான் சொல்லமுடியும் நம்மால் வேறு என்ன முடியும் நன்றி அப்பாவி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மூர்த்தி

சிறுமியை பெண்டாளத் துணிந்த அவன் பாதிரியார் அல்ல. மிருகம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அமாம் மூர்த்தி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Thekkikattan

இது போன்ற மிருகங்கள் அச் சிறுமிகளின் இன்றைய வாழ்வை மட்டுமல்ல அதுகளின் முழு வாழ்வையுமே சூரையாடி விடுகிறார்கள். அவளின் வாழ்வு முழுதுமே இது தொடரப் பட போகிற உண்மை. எப்படி இது போன்ற மிருகங்கள் இந்த இளம் பிஞ்சுகளை கசக்கி குப்பையிலே வீசச் துணிகிறார்கள். கடுமையான பராபட்சம்மற்ற சிறைவாசமும் தொலைக்காட்சி ஊடகங்களும் இதனைப் பற்றி அதிகமாக கவணம் சொலுத்தி இது போன்ற அத்து மீறால்கள் கலைக்கப்பட வேண்டும். மிக்க வருத்தத்துடனும் கோபத்துடனும்...

தெக்கிக்காட்டான்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நமக்கு இருக்கிறது கோபமும் ஆத்திரமும் என்ன செய்ய நேரில் இருந்தால் அந்த மூர்க்களை தொலைத்துவிடுவோம்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கீதா

சிறுவர் சிறுமியர் வாழ்க்கையில் விளையாடுபவர்கட்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். சிறுவர்களை சீண்டும் எண்ணமே பிறருக்கு வராத அளவிற்கு தண்டனை இருக்கவேண்டும். மரணம்தண்டனை ஒரு தீர்வன்று, வாழ்நாள் முழுவதும் இவர்கள் வேதனை அனுபவிக்க வேண்டும். நெஞ்சு எரிகிறது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

//நெஞ்சு எரிகிறது.//
இத்தனைபேர் உள்ளம் எரிந்தாலே அவன் அழிந்து விடுவாம் கொடும்பாவி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கீதா

அவன் மட்டும் இல்லை அய்யா. இது போன்ற கொடும்பாவம் செய்பவர்கள் அனைவரையும் சொல்கின்றேன். பிடிபட்டவர் சிலரேயாவார். இன்னும் பிடிபடாமல் பாவங்கள் செய்பவரை என்செய்வது..

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

முஸ்லீம் நாட்டு தண்டனையைக் கொடுக்கவேண்டும் கொலை செய்தவனைக்கூட மண்ணிக்கலாம் ஏன் என்றால் அதற்கு ஒரு காரணம் மோட்டீவ் இருக்கும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கல்வெட்டு (எ) பலூன் மாமா

கொடுமை

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Thekkikattan

அப்படிச் சிறு வயதில் பாதிப்படைந்த ஒரு குமரியின் இன்றைய வாழ்வுடன் சம்பந்தபட்டவன் என்ற முறையில் எனக்கு இது போன்ற சிறுவ/மிகளின் எதிர்காலம் எவ்வளவு வலிமிக்கது என்பதனை கண்கூடாக கண்டுணர்ந்து வருகிறேன். மீண்டும் இது பற்றி அறிய எனது வலைத் தளத்தை ஒரு முறை சென்று அதில் இது போன்ற சில விடயங்களை முன் வைத்துள்ளேன், படித்துப் பாருங்கள்.

தெக்கிக்காட்டான்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அப்படியா தெக்கிக்காட்டான் பார்க்கிறேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நிலவு நண்பன்

சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் இப்பொழுது அதிகரித்துள்ளது.

இதுபோன்ற மிருகங்களின் --------- வெட்டிவிடலாம். அப்பொழுதான் மற்றவர்களுக்கு பயம் ஏற்படும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நிலவு நண்பன் சரியாகச் சொன்னீர்கள்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஆள்தோட்டபூபதி

எல்லா மதத்திலும் சாமியாருங்க இப்படித்தான் போல!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் பூபதி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கொங்கு ராசா

அந்த புகைப்படத்தை எடுத்துருங்களேன்.. பத்திரிக்கையில தான் இப்படி ஒரு பரபரப்புக்காக பாதிக்கபட்டவங்க படத்தை போடுறாங்க.. நம்மளும் ஏன்? அந்த படம் இங்க காலாகாலத்துக்கு இருந்துக்கிட்டு இருக்கும்.. வேண்டாமே!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி
ராசா தாங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் புத்தி வந்தது. தவறு தான்.

 

Post a Comment

<< முகப்பு