திருப்பள்ளி எழுச்சி
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உயத்து
ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற் செறிகழற் றாளிணை காட்டாய்;
திருப்பெருந் துறையறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்; எமக் கெளியாய்;
எம்பெரு மான்; பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்: அதிகாலைப் பொழுது விதவிதமான ஒலிகள் விண்ணில் ஒலிக்கின்றன. இதனை விவரிக்கிறது இந்தப் பாடல். மகாதேவனே! திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! யாராலும் அறிதற்கு அரிய பரம்பொருளே! பக்தர்களாகிய எங்களுக்குஅறிந்து அரிய பரம்பொருளே! பக்தர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளிமையாக திகழ்பவனே! அருமையில் எளிய அழகனே! பொழுது புலர்ந்து விட்டது. அழகிய குயில்கள் கூவத் தொடங்கி விட்டன. கோழிகள் கொக்கரக்கோ என்று கூவுகின்றன. பறவைகளின் விதவிதமான ஒலிகள் பரவுகின்றன. அதிகாலை நேரத்தில் ஆலயங்களில் சங்குகள்முழங்குகின்றன. ஆதவனின் ஒளி தோன்றத் தொடங்கிவிட்டது. அதனால் விண்மீன்களின் ஒளி குன்றுகிறது. உதய நேரம் வந்து விட்டது. எம்பெருமானே! பள்ளிக்கட்டிலில் இருந்து எழுந்தருள்வாயாக! தாங்கள் திருவுள்ளத்தில் எங்கள் மீது விருப்பு கொண்டு வீரக்கழல் அணிந்த உன் திருவடிகள் இரண்னையும் எங்களுக்குக் காட்டிஆட்கொண்டு அருளுக என்பது இப்பாடலின் பொருள்.
4மறுமொழிகள்:
எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. மிகவும் அருமையான விளக்கம்.
ராகவனுக்குப் பிடித்தது எனக்கும் பிடித்தது
ராகவன் திருமாளை பாடினார்
ரத்தினவேலு சிவனை பாடினார்
சரி நன்றி ராகவன்
நல்ல பாட்டு நல் நயம் கொண்டது
நன்றி
Post a Comment
<< முகப்பு