திருப்பள்ளி எழுச்சி
அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற் றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனற்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்: திருப்பெருந்துறையில் கோவில் கொண்டிருக்கும் சிவனே! நீ உன் அன்பர்களுக்கு செல்வத்தை அள்ளித்தரக்கூடியவன் நீ தரும் செல்வம் பொருட் செல்வம் அல்ல திருவட்செல்வம்.
அச்செல்வத்தை அள்ளி வழங்க வரும் ஆனந்த மலையாக காட்சி தருபவன் நீ. கிழக்கில் சூரியன் உதயமாகும் முன் அருணன் அத்திசையை அணுகினான். அருணோதயம் நடந்தது இருள் அகன்று போனது. உன்னுடைய முகம் உதயகிரியை போன்றது. உன் கருணை சூரியனைப் பொன்றது. அந்தச் சூரியன் மேல் எழஎழ இறைமையாகிய தேனை குடிக்கத் துடிக்கும் அடியர்களாகிய வண்டுகள் ஒலிழக்கின்றன. வண்டின் ஒலி போல தோத்திர முழக்கம் இருக்கின்றது. சிவனே நீ இதை உணர்வாயாக! திருப்பெருந்துறையில் கோயில் கொண்ருளிய சிவபெருமானே! அருளாகிய செல்வத்தை விலையாகக் கொடுப்பதால் உயரிய ஆனந்த மலையாக இருப்பவனே! அலைகளை உடைய கருணைக்கடலே திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!!!
3மறுமொழிகள்:
நன்று! நன்று!!
அருமை.
விளக்கம் நன்றாக இருக்கிறது.
இருவருக்கும் நன்றி
Post a Comment
<< முகப்பு