திருப்பள்ளி எழுச்சி
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய பத்து பாடல்கள் திருப்பள்ளியெழுச்சி என்படும். இந்த பத்துப்பாடல்களும் சிவபெருமானை துயில் எழுப்பும் நிலையில் அமையும் திருப்படல்களாகும். சுப்ரபாதம் பாடி பெருமாளைத் துயிலெழுப்புவது போல சிவபெருமானை துயில் எழுப்பம் நிலையில் அமைந்த மரபு வழிப்பட்ட பாடல்கள் இவை. தினந்தோறும் அதிகாலையில் நீராடியவுடன் பாராயணம் செய்ய வேண்டிய நூலே திருப்பள்ளியெழுச்சியாகும்.
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளெ!
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்:
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எமை உடையாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்:"என் வாழ்வுக்கும் வளத்துக்கும் காரணகர்த்தாவாக அடிப்படையாக அமையும் முதல்வன் நீ. சேற்றில் நி்ன்று தாமைரகள் தம் இதழை விரித்துக் கொண்டிருக்கும் குளிர்நந்த வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! என்னை அடிமையாகக் கொண்டவனே! எம்பெருமானே! உம்மைப் போற்றுகிறேன். பொழுது விடிந்து விட்டது. உன் அழகிய பாதங்கள் இரண்டுக்கும் இணை யான மலர்களைக் கொண்டு பூசனை புரிந்தும் எங்களுக்கு அருள் செய்வதற்காக உன் முகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் தேக்கிக் கொண்டு உன் திருவடியை வணங்குகிறோம். பள்ளியில் இருந்து எழுந்து அருள் செயவாயாக" என்பது இப்பாடிலின் பொருள்.
6மறுமொழிகள்:
மிக்க நன்றி அய்யா!மார்கழி மாதம்,மிகுந்த சுறுசுறுப்பான மாதம்.பாடலும் ,அர்த்தமும் மீண்டும் மனதில் பாய்ந்தது!நன்றி.
மார்கழி திங்கள் மதிநிறைந்த நண்ணாளாம்
நன்றி நண்பரே
அன்பு என்னார்,
"போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் றிருமுகத் தெமக்கருண் மலரு
மெழினகை கொண்டுநின் றிருவடி தொழுகோஞ்
சேற்றிதழ்க் கமலங்கண் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யேற்றுயர் கொடியுடை யாயெனை யுடையா
யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே."
இப்படித்தான் இருத்தல் வேண்டும். நண்பரின் பதிவுகளில் தவறிருத்தலாகாதே! எனும் எண்ணத்துடன்தான் இப்பின்னூட்டு.
கனவு, நனவு, உறக்கம் ஆகிய 3 அவத்தைகட்கும் சித்+அம்பரம் ஆதரம். இம்மூன்று அவத்தைகட்கும் பரமாத்மா கட்டுபடுவதில்லை. இதையறியும் ஞானிக்கோ துன்பமில்லை. இதற்காகத்தான் திருப் பள்ளியெழுச்சி.
ஞானத்தை மறைக்கும் தமோகுணத்தை விலக்கித் தெளிவு பெறவே திருப்பள்ளியெழுச்சி.
பிழை பொருத்துக்கொள்ளுங்கள் பதம் பிரித்துள்ளது தங்கள் நடை நான் சேர்த்துவிட்டேன்
மலரு மெழினகை
மலரும் எழில்நகை
நன்றி இனி நான் திருத்திக்கொள்கிறேன்
முதல் வரியையும் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே!
சார் ஷிப்ட் அழுத்தாமல் அடித்து விட்டேன் எழுத்துப் பிழை இல்ல இல்ல டைப்பி பிழை.
தவற்றை சுட்டியதற்கு நன்றி சார்
இப்பொழுது சரிசெய்து விட்டேன்
Post a Comment
<< முகப்பு