அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மலையாக மாறிய யானை

மதுரை - மேலூர் ரோட்டில் பயணம் செய்பவர்கள் 'ஆனை மலை'யைக் காணலாம். ஐகோர்ட் கிளைக்கு எதிரே ஒரு கி.மீ.நீளத்தில் யானை ஒன்று படுத்துகிடக்கும் வடிவத்தில் அமைந்துள்ள மலைதான் அது. பார்ப்பவர்களை வியக்க வைக்கு இதற்கு யானைமலை என்று பெயர் யாணை மலையின் அடிவாரத்தில் புராணகாலத்தில் இடம் பெற்ற நரசிங்க பெருமாள் கோவில், மகாபிரத்தியங்கரா தேவிகோவில், வேத நாராயண பெருமாள் கோவில்உள்ளன. இது தவிர அழகிய நீர்ச்சுணைகளும் உண்டு. பிரமாண்ட புராணம் உத்தர காண்டத்தில் 88 வது அத்தியாயம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் யானை மலை தோன்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது.மதுரையை ஆண்டு பாண்டிய மன்னன் மீது சோழமன்னன் பல முறைபடையெடுத்தும் தோழ்வியை தழுவினான் பாண்டிய மன்னனை வீரத்தால் வெள்ளமுடியாது என்று உணர்ந்த சோழமன்னன் சூழ்சியாலும் மந்திரத்தாலும் அழிக்க முடிவு செய்தான். அதற்காக தன்னுடைய நாட்டில் மதத்தைப் பரப்பிக்கொண்டிருந்தசமணர்களுக்கு ஓலை அனுப்பி வரவழைத்தான் அவர்களிடம் பாண்டிய மன்னனை அழிக்க வழி கேட்டான். அதன் போரில் அசோக மரநிழலில் அக்னி குண்டத்தை சமணகள் அமைத்து யாகத் தீயை வளர்த்து மந்திரங்கள் ஓதினர். அதில் இருந்து மூ உலகையும் நடுங்கச் செய்யும் வகையில் ராட்சத வடிவத்திலான யானையை உருவாக்கினர். பின்னர், மதுரையையும், பாண்டிய மன்னனையும்அழித்து வர அந்த யானைக்கு உத்திரவிட்டனர். அதன் படி, யானை அசுரத்தனமான பிளிறலுடன் மதுரையை நோக்கி ஓடியது. பயந்து போன குடிமக்கள் அரன்மனைக்கு ஓடி பாண்டியமன்னனிடம்முறையிட்டனர். பாண்டியமன்னன் அதிர்ச்சியடைந்தான். மதுரைக் கோவிலில் குடிகொண்டிருந்த சிவபெருமானிடம் சென்று யானையை அழிக்கும் படி வேண்டினான்.

அப்போது மதுரை எல்லைக்கு வெளியே கீழ் புறத்தில் ஒரு அட்டாலை மண்டபம
கட்டும்படி கோவிலில் அசரீரி ஒலித்தது. அதன் அட்டாலை மண்டபம் கட்டி முடித்தான் மன்னன். அந்த மண்டப சேவகனாக சிவபெருமான் தோன்றி சிங்கமுக வடிவம் கொண்ட நரசிங்காஸ்திரத்தால் அந்த யானையை அழித்தார். யானை சாபவிமோசனம் அடைந்து மண்டியிட்டு அமர்ந்த இடம் கரிக்குன்று என்று அழைக்கப்பட்டது கரி என்றால் யானை,
குன்று என்றால் மலை என்று பொருள்பட யானை மலை என்று பெயர் மாறியது. பின்னர் அதுவே பேச்சு வழக்கில் ஆனைமலையாகிவிட்டது.
சிலப்பதிகாரம் பத்துப்பாட்டு ஆகியவற்றில் யானை மலையின் சிறப்புப்பற்றி
கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த காரி என்பவர் கி.பி.770 ஆம் ஆண்டு யானை மலை அடிவாரத்தில் வால் பகுதியி்ல் நரசிங்க பொருமாளுக்கு குகைக் கோயில் கட்டியதாக மலையில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை உச்சியல் 23 அடி நீளமுள்ள இயற்கையான குகை காணப்படுகிறது. இந்த குகைக்கு செல்வது மிகவும் கடிணம். குகை வாயிலில் பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. 1906ம் ஆண்டு பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்கு உள்ளேயும் வெளியேயும் சமண முனிவர்கள் ஓய்வு எடுப்பதற்காக இயற்கையில் உருவான கல் படுக்கைகள் காணப்படுகின்றன.
கிபி முதலாம் நூற்றண்டு முதல் நாயக்கர் காலம் வரை பல காலங்களில் சிற்பக்
கலைக்குசான்றாக உள்ள யானை சிற்பங்கள், குடைவரை கோயில்கள், கட்டிடக்கோவில்கள் பல யானை மலைகள் காணப்படுகின்றன.
யானைமலை அடிவாரத்தில் கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்தசமணமுனிவர்களின்
குடை வரைசிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் யானை மலையில் சமண முனிவர்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுகிறது.

ஆதாரம் 02-01-06 தினமலர்

7மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

எங்க ஊர் ஆனைமலையைப் பற்றிய செய்திக்கு மிக்க நன்றி என்னார் ஐயா. மதுரையின் கீழ்புறத்தில் கட்டப்பட்ட மண்டபம் இப்போதும் இருக்கிறது, மாரியம்மன் தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger சிவா

என்னார்! அப்படியே புகைப்படம் இருந்தால் போட்டீர்களென்றால், என்னை போல ஜீவன்களுக்கும் ஆனை மலையை பார்த்த மாதிரி இருக்கும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மூர்த்தி

நல்ல ஆக்கம் ஐயா. ஆனைமலைக்கு என தனிப்பட்ட சிறப்பு உள்ளது. இன்னும் எழுதுங்கள் ஐயா.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி குமரன், சிவா,மூர்த்தி
குமரன் நான் தெப்பக்குளம் வந்தேன் ஆனால் அந்த மண்டபத்தைப்பார்த்ததாக ஞாபகம் இல்லை மறுமுறை வரும்போது பார்க்கிறேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு என்னார்,
யானை மலையைப் பற்றிய கதையைக் கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குழலி / Kuzhali

//மலையாக மாறிய யானை//
அதே தான்... தலைப்பை பார்த்தவுடன் நினைத்தேன், அதே மலையைப்பற்றி எழுதியுள்ளீர்...

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கிய/இலக்கண ஓலைகள் இந்த மலையின் குகைகளில் ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதும், பல தமிழ் புலவர்கள் கும்பல் கும்பலாக பலியிடப்பட்டது இந்த மலையில் என்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்

நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி ஞானவெட்டியான் சார் குழலி
//ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதும், பல தமிழ் புலவர்கள் கும்பல் கும்பலாக பலியிடப்பட்டது இந்த மலையில் என்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்//
இதை நான் கேள்விப்படவில்லை தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்வோம்

 

Post a Comment

<< முகப்பு