அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சனி, டிசம்பர் 24, 2005

பின்லேடனின் அண்ணன் மகள்


சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக்காவும் அதன் கூட்டு படையும் வலை போட்டு தேடி வருகிறது. நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானத்தை மோதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய `அல் கொய்தா' இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி வாழ்கிறான்.

பின்லேடனின் அண்ணன் மகள் வாபா டாபர். 26 வயதான வாபா டாபர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர். மாடல் அழகியாகவும் இசை பாடகியாகவும் நடன கலைஞராகவும் இருக்கும் வாபா டாபர் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தீவிரவாதி பின்லேடன் எனது சித்தப்பாதான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

முகமது பின்லேடன் எனது தாத்தா. சவூதி அரேபியாவை சேர்ந்த அவர் கோடீஸ்வரர். அவருக்கு 54 குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான் என் தந்தை. எனது அப்பாவும் சித்தப்பா ஒசாமா பின்லேடனும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பார்கள்.

பின்லேடன் ஒரு பழமைவாதி. முற்போக்கான எண்ணங்கள் அவருக்கு இல்லை. பின்லேடன் ஆதரவு பழமைவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பின்லேடன் அண்ணன் மகள் என்பதால் எல்லோரும் என்னை ஒதுக்கி தள்ளுகிறார்கள். அவர்களாலும் எனக்கு ஆபத்து ஏற்படலாம். பின்லேடனால் எனது வாழ்க்கையே பாதித்து விட்டது. நான் வேறு மதத்தை சேர்ந்த ஒரு வரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு வாபா டாபர் கூறினார்.

அமெரிக்காவில் தங்கி இருக்கும் இவர் பிரான்சு நாட்டுக்கு சென்ற போது அங்குள்ள ஒரு இரவு விடுதியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் மகள் ஜென்னாவுடன் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
நன்றி மாலைமலர்

2மறுமொழிகள்:

25 டிசம்பர், 2005 00:54 மணிக்கு, எழுதியவர்: Blogger நண்பன்

தன்னை முன் நிறுத்திக் கொள்ளத் துடிக்கும் பல ஆயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்களைப் போலவே இவரும். அத்தகைய முயற்சிக்காக தன் உடைகளைத் துறக்கவும் தயாராகிவிட்டார்.

இதற்கு பின்லேடன் பெயரையும் பயன்படுத்திக் கொள்கிறார். அவ்வளவு தான்.

பின்னர் புஷ் தான் இவர்களுக்கெல்லாம் லோக்கல் கார்டியன். அவருடைய மகளுடன் சேர்ந்து நடனமாடுவது என்ன பெரிய சாதனையா?

 
25 டிசம்பர், 2005 12:16 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி நண்பன்

 

Post a Comment

<< முகப்பு