அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மூவகை குணங்கள்

மனிதரின் உடல் கபம் வாதம் பித்தம் என்னும் மூன்று தாதுக்களால் நிறைந்திருக்கிறது. அதே போன்று சத்துவகுணம் ரஜோகுணம், தமோ குணம் என்னும் முக்குணங்களாலும் நிறைந்திருக்கிறது.
சத்வ குணம் ஒளியான உருவம் கொண்டது.
ரஜோ குணம் துக்க உருவம் கொண்டது
தமோ குணம் அறிவின்னையின் வடிவம்
இம் மூன்று குணங்களாலுமே உலகில் செயல்கள் நடைபெறுகின்றன.
சத்தியம், உயிர்களிடம் அன்பு, பரிசுத்தம்,நல்லதில் நாட்டம்,பொறுமை, அடக்கம் போன்றவையெல்லாம் சத்வ குணத்தால் ஏற்படுபவை.
வேலைதட்திறன், சுறு சுறுப்பு, பொருளீட்டும் ஆசை, விதியை நாம்பாமை, மனைவியிடம் பற்று, போன்றவையெல்லாம் ரஜோ குணத்தால் ஏற்படுபவை:
பொய், பிடிவாதம், பகைபாராட்டுதல், ஹிம்சித்தல், நாஸ்திகம்,தூக்கம், சோம்பல், பயம் போன்றவையெல்லாம் தமோ குணத்தால் ஏற்படுபவை.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு