ரோடுகளை தோண்டக்கூடாது

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு மற்றும் தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஏற்பாடுகளை கவனிக்க அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்கை சோனியா நியமித்து இருக்கிறார். இவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட் டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.
அப்போது மாநாடு ஏற்பாடுகளுக்காகவும், தலை வர்களை வரவேற்கவும் கட்அவுட் மற்றும் கொடிகளை கட்ட ரோடுகளை தோண்டக்கூடாது என்று சோனியா உத்தரவிட்டுள்ளதாக திக் விஜய்சிங் தெரிவித்தார்.
ஐதராபாத் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாத அளவுக்கு மாநாட்டு ஏற்பாடுகளை செய்யும்படி சோனியாகாந்தி அறிவுறுத்தி இருப்பதால் பொதுமக்களுடன் நட்புறவு வைத்து மாநாடு ஏற்பாடுகளை செய்ய திக்விஜய்சிங் கேட்டுக் கொண்டார்.
இவரல்லவோ தலைவர்; நாட்டின் நலனில் அக்கரைகொண்டவர்
2மறுமொழிகள்:
அவர் சொன்னதோடல்லாமல், அது செய்யப்படுகிறதா ? என்று பார்த்துக்கொள்வாரானால், நிச்சயம் அவர் ஒரு பெரும் தலைவர்தான்.
மற்றவர்கள் அவர் பிரதமராக வருவதை விரும்பாததற்காகவே அவர் பிரதமராகவி்ல்லை. சொன்னபடி நடப்பார் என நம்புவோம்
நன்றி மாலிக்
Post a Comment
<< முகப்பு