அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வெள்ள நிவாரணம்

அடுத்து, சட்டமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, ஒவ்வொரு கட்சியும் நிவாரணம் பெறுவதில், தருவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை அழைத்து வருவதில், காங்கிரஸ் கட்சியும் தி.மு.கழகமும் ஆர்வம் காட்டின. மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோவும் பிரதமரைச் சந்தித்தார். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். இந்தக் கட்சிகள் தனித்தனியாகச் சந்தித்ததைவிட, ஐக்கிய முன்னணியாகவே இணைந்து சென்று சந்தித்திருக்கலாம். கூட்டணி தர்மம் கூனிக் குறுகிப் போனது.

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் தேவை என்று, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் மோகன் கோரினார். போதிய நிதி பெறுவதில் நிதி அமைச்சர் சிதம்பரமும், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறனும் தனிக் கவனம் செலுத்துகிறார்கள்.

நிதி ஒரு பிரச்னை அல்ல; முறையான விநியோகம் தேவை என்ற சிதம்பரத்தின் கருத்தில், நிரம்ப நியாயம் இருக்கிறது.

மாநிலங்களவை அண்ணா தி.மு.க. உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்தனர். முதல்வரின் கோரிக்கையை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு, ஆரம்பத்தில் 1742 கோடி ரூபாய் தேவை என்று முதல்வர் கோரினார். அதன்பின்னர், மூவாயிரம் கோடி தேவை என்றார். இறுதியாக, 13 ஆயிரம் கோடி ரூபாயும், அரிசி, மண்ணெண்ணெயும் தேவை என்று பெரும் பட்டியலோடு கோரிக்கை வைத்திருக்கிறார்.

மூவாயிரம் கோடி ரூபாய் என்றபோது, அதனை கலைஞர் உள்பட அனைத்துக் கட்சியினரும் ஆதரித்தனர். பதின்மூன்றாயிரம் கோடி என்றபோது, அனைவரும் வாயடைத்துப் போயினர். அடுத்து வரும் தேர்தலை மனத்தில் கொண்டு முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கை என்று விமர்சனங்கள் எழுகின்றன.

நிவாரணத்தொகை வழங்குவதில் சில குளறுபடிகள் உள்ளது ஒரு வீட்டிற்கு கிடைத்து பக்கத்து வீட்டிற்கு கிடைக்காமலும் உள்ளது. காரணம் அந்த வார்டு தண்ணீர் சூழ்ந்த வார்டு இல்லை ஆனால் அந்த விட்டைச்சுற்றி தண்ணீர் நின்றிருக்கும் அந்த வீட்டிற்கு கிடைக்க வில்லை .
இதில் மக்களை விட அரசு அலுவலர்கள் படும் பாடுதான் பொரும் பாடாக உள்ளது.
சண் டிவியோ புருஷன் மனைவி சண்டையானாலும் அது வெள்ள நிவாரண முற்றுகை என கதை கட்டி விடுகிறது.
உலகம் எங்கோ போகிறது

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger NambikkaiRAMA

//சண் டிவியோ புருஷன் மனைவி சண்டையானாலும் அது வெள்ள நிவாரண முற்றுகை என கதை கட்டி விடுகிறது.//

ஹா ஹா சும்மா 'நச்'னு ஒரு பஞ்ச் வச்சிட்டீங்களே :)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி பாசிட்டிவ் ராமா

 

Post a Comment

<< முகப்பு