அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வயதும், புதன் தசையும்

ஒரு ஜாதகருக்கு இருபதுவயதிற்கு மேல் புதன் பலம் பெற்று களத்ரஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தசை நடத்தினால் படித்த மனைவி வாய்ப்பாள். கணவனை மகிழ்விக்கக் கூடியவளாயும், நல்ல குணவதியாகவும், உத்யோகமுள்ள திறமைசாலியாகவும் இருப்பாள் . வடமேற்குத் திசையிலிருந்து மனைவி வாய்ப்பாள். இவளிடம் எப்போதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். தெய்வ பக்தி,சாதுர்யம், பெரிய பொறுப்பகளை வகிக்கும் ஆற்றலுடையவளாயும் இருப்பாள்.
வாழ்க்கை ஆரம்ப காலத்தில் புதன் தசை நடப்து விசேஷம். அதிலும் அந்திய காலத்தில் புதன் தசையைப் பெறுபவர்கள் சமய சாஸ்திரத்துக்கும், கல்வி விருத்திக்கும் உழைப்பார்கள். வேதாந்த சாஸ்திரங்களையும், சட்டநுணுக்கம் போன்ற நியாய நூல்களையும் இந்த அந்திய காலத்தில் எழுதலாம். ஆத்ம சாந்தியை உண்டாக்கிக் கொள்வதற்கு இது ஒரு விசேஷமான காலம்.
நடுத்தர வயதுடையவர்களுக்கு புதன் தசை நடக்கும்போது ஜாதகன் அமைதியாகவும், நிதானமாகவும், சத்தியமாகவும் ஒரே நிலைப்பட்ட மனதுடையவனாகவும் இருந்து பிறர் அறியாது பெரும் பொருளைத் தேடுவான், பண ஆசை, குடும்ப சுகம், தர்ம விஷயங்கள், சாஸ்த்திர விஷயங்கள் முதலியவற்றில் பற்றுள்ளவனாகிறான். இக்காலத்தில் ஒரு ஜாதகன் பணத்தையும் பொருளையும், இதர செல்வங்களையும் அசட்டை செய்தாலும் அவைகள் அவனை வலிய வந்து சேர்கிறது. நாம் மேலே கூறியது போல் புதன் சுபராசிகளிலும், கேந்திர,கோண,தனலாப ஸ்தானங்களில் இருந்தால் சுப பலன்களைச் செய்வார்.
புதன் அவர் ஸ்தானங்களை யடைந்தும் இதர அசுப பலன்களைத் தரக்கூடிய கிரகங்களினால் பழுதடையாமலும் இருந்தால் அவர் தரும் பலன்கள்: ஜாதகருக்கு நல்ல குணமுள்ள சிநேகிதர்களையும் அவர்களால் லாபங்களையும், கீர்த்தியையும், உயர்ந்த அந்தஸ்தத்தையும், தொழில் உத்யோகம் முதலியவற்றில் லாபங்களையும், உத்யோக உயர்வையும், சரளமாகவும் அழகாகவும் கருத்தோடும் சபைகளில் பேசும் திறமையையும். தனக்கேற்ற மனைவியையும் கல்வியறிவுள்ள குழுந்தைகளையும் அடைகிறான். இதே புதன் தீயராசிகளிலும், தீய இடங்களிலும், பலவீன முற்றிருந்தால்அப்போது மனக் கவலையும். உயர் அதிகாரிகளிடமிருந்து அதிருப்தியும், சிநேகிதர்களிடம் சண்டை சச்சரவுகளும், அதனால் பொருள் நஷ்டமும், கீழ்த்தரமான நடவடிக்கைகளினால் தன சேதத்தையும், வீண் பிராயாணங்களையும், மந்த நிலையையும், சோம்பலும், விவசாயங்களில் நஷ்டமும், மாமன் வர்க்கத்தாருக்கு நாசத்தையும், இரத்த சோகைபோன்ற நோய் நொடிகளையும் அடைகிறான்.

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger மூர்த்தி

ஜோதிடம் சில சமயங்களில் நடக்கின்றன, பல சமயங்களில் பொய்த்து விடுகின்றது. எனவே படிப்பேன் ஆனால் தீவிரமாக பின்பற்றுவதில்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

என்னைப் பொருத்தவரையில் பல சமயங்களில் சரியாக உள்ளது
நன்றி மூர்த்தி
நமது பகுதிகளில் வெள்ளம் காவிரி உடைப்பு என நினைக்கிறேன்

 

Post a Comment

<< முகப்பு