அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:
பஞ்சபூதங்களில் நீருக்குரிய நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நாவல் மரத்தை பொது இடங்களில் நட்டு பயிர் செய்யலாம். அவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கும். நாவல் மரம் ஸ்தல விருட்சமாக உள்ள திருவானைக்கா போன்ற கோயில்களை வழி படுவது நல்லது. பிரம்ம தேவன் இதன் தேவதை.
சிவன் கோயில்களில் உள்ள கர்ப்பக்கிரகத்தில் வெளிப்புற, மாடம் ஒன்றில் பிரம்மன் இருப்பார். அவரை வணங்குக. இயன்றவர்கள் உடுப்பிகிருஷ்ணரை தரிசனம் செய்தல் விசேஷம். ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை காலை மாலை இரண்டு வேளையும் ஜெபம் செய்யுங்கள். இடைவிடாமல் சக்கி தேவியை வணங்குங்கள். முடிந்தால்முத்து பதித்த மோதிரத்தை அணியுங்கள். தடைகள் நீங்கப் பெறுவீர்கள்.

12மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

நீரதிக தாகமுளன் சொன்னதுகேட் பான்புலவன் நிருபன் ஆகும்
பாரின் அன்னம் இடுஞ்சீமான் இரும்புவியா பாரிநெய்பால் பட்சம் உள்ளான்
சேருமிரு விழிபருத்துப் புருவமும்சற் றேநெருங்கும் நேயன் என்றும்
ஓரம்உரை யான்உள்ளங் காலுரத்தோன் திடநடைரோ கணியி னானே.

நிருபன்=அரசன்
ஓரம்=பொய், அநியாயம்.

அதுமட்டுமின்றி, உரோகணியில் பிறந்தவன், நல்ல வடிவுடையானும், ஸ்திர புத்தியுடையவனும், அபிமானியும், சுகங்களை வஞ்சனையின்றி அநுபவிப்பவனும், சிற்றின்பத்தில் வேட்கை மிக்கவனும், அன்பாகப் பேசுபவனும், தீரமும் தேஜஸ் உடையவனுமாய் இருப்பான்.

இதில் உள்ள நான்கு பாதங்களில் பிறந்தோருடைய குணநலன்களில் வேறுபாடு உண்டு.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

தண்ணீர் தாகமுள்ளவன் சொன்னதை புலவன் கேட்பான் மன்னன்
பாருங்கள் சோறு போடுவன் இருப்புவியாபாரி
நெய்யில் செய்தபலகாரமா?
பெரிய கண்ணும் நெருங்கிய புருவமும்
பொய் சொல்லமாட்டான்
கொஞ்சம் விளக்குங்களேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜயராமன்

உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கின்றன.

முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

மேலும் அதிக பதிவுகளை (விஷய காம்பீரியத்துடன்) ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

நன்றி.

ஜயராமன்

ps: please avoid opening comments in a separate window when we comment or view other comments. this can be done by changing the settings. Thanks. Jayaraman

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி ஜெயராமன்
தாங்கள் சொன்னபடி செய்துவிட்டேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

நீரதிகம் அருந்துபவன்,நல்லது யார் சொல்லினும் சொன்னதுகேட்பான்,புலவன், மன்னன்,உலகில் அன்னதானம் செய்பவன், இரும்புவியா பாரி, நெய்பால் அதிகம் விரும்புபவன்,சேருமிரு விழிபருத்துப் புருவமும்சற் றேநெருங்கும் அன்பன், எப்பொழுதும் நியாயம் உரைப்பவன்,
உள்ளங் காலுரத்தோன் திடநடையுடையவன் உரோகணி நட்சத்திரத்தில் பிறந்தவன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

விளக்கத்திற்கு நன்றி சார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger sree

உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி ஸ்ரீ

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR.சுப்பையா

லக்னம் மேஷமாக இருந்து ஜாதகன் ரோகிணி நட்சத்திரக்காரன் என்றால் - எல்லா செளகரியங்களும், சுகங்களூம் கிட்டும் - ஏனென்றால் லக்கினத்திற்கு 4ஆம் வீட்டிற்கு உரியவன் (சுகாதிபதி) - சந்திரன் உச்சம் பெற்று 2ல் அமர்வதால் அந்தப் பலன் - என்ன சரிதானே-ஸ்வாமி ?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

திரு. சுப்பையா அவர்களே எனக்க ஜோதிடம் தெரியாது
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அப்பச்சி,
அவுக பொதுப் பலன்தான் சொன்னாக.
சோதிடத்தில், பல விடயங்களைக் கோத்துப் பாக்கோணும். வீடு, பார்வை, நண்பனா, எதிரியா, இத்யாதி இத்யாதி.
அதெல்லா எழுதுனாக்க ஆயுசும் போயிரும்; மத்தவுகளும் அடிக்க வந்திருவாக. வேணாமப்பு வம்பு.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் வம்பும் வேண்டாம் துண்பும் வேண்டாம்

 

Post a Comment

<< முகப்பு